“இந்த ஜென்மங்களாம் ஏன் உயிரோட இருக்கனும்..” ஆவேசமடைந்த தாடி பாலாஜி! முதல்வரிடம் கைகூப்பி வேண்டுகோள்
சென்னை: சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அரசு பள்ளியில் நடந்த அருவருக்கத்தக்க செயல் குறித்து நடிகர் தாடி பாலாஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன்னர் புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் நடந்த சம்பவம் ஒன்று ஒட்டு மொத்த மனித சமூகத்தையே தலைகுனிய வைத்தது. அதாவது இந்த கிராமத்தில் பட்டியலின மக்கள் பயன்படுத்தி வந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மர்மநபர்கள் மனித கழிவுகளை கலந்திருந்தனர். இதை அறியாமல் அந்த தண்ணீரை பயன்படுத்திய குழந்தைகள், பெண்களுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து டேங்க் மீது ஏறி அதனை சோதனை செய்தபோதுதான் இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

தமிழ்நாடு முழுவதும் இந்த சம்பவத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்றன. இதனையடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டு குற்றவாளிகளை கைது செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இதேபோல மற்றொரு அதிர்ச்சி சம்பவம் திருவள்ளூர் மாவட்டத்தில் நடந்திருக்கிறது. அதாவது, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே மத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 400க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் மாணவ-மாணவியர் பள்ளிக்கு சென்றிருக்கின்றனர். அப்போது 11 மற்றும் 12ம் வகுப்பு வகுப்பறைகளை திறக்க மாணவர்கள் முயன்றுள்ளனர். ஆனால் வகுப்பறை பூட்டிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. உடனடியாக ஆசிரியர்களுக்கு தகவல் கொடுத்த மாணவர்கள், அந்த வகுப்பறைகள் முன்பு ஒன்று கூடியுள்ளனர். ஆசிரியர்கள் ஆய்வு செய்ததில் வகுப்பறை பூட்டுகளில் பூசப்பட்டிருப்பது மனித மலம் என்பது தெரிய வந்தது. இதனையடுத்து பள்ளியின் உள் அமர்ந்து மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறுபுறம் விஷயம் கேள்விப்பட்டு வந்த பெற்றோரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவம் வெளியில் கசிந்ததையடுத்து காவல்துறையினர், மாவட்ட கல்வி அலுவலர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதேபோல சம்பவம் குறித்தும் வழக்குப்பதிவும் செய்தனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகர் தாடி பாலாஜி கடும் கண்டம் தெரிவித்துள்ளார். அதில், "நேற்று எல்லா நியூஸ் சேனல்களிலும் ஒரு செய்தியை கேட்டிருந்தேன். அதை கேட்டபோது உடம்பே கூசியது. திருத்தணி பக்கத்தில் உள்ள அரசு பள்ளியில் இப்படி ஒரு கேவலமான செயல் நடந்திருக்கிறது. அதாவது மனித கழிவை பள்ளியின் பூட்டுகளிலும், சுவர்களிலும் பூசிவிட்டு சென்றிருக்கிறார்கள். இது என்ன ஜென்மம்? இந்த ஜென்மமெல்லாம் ஏன் உயிருடன் இருக்க வேண்டும்?
நீங்களோ, உங்கள் குழந்தைகளோ, உங்கள் உறவினர்களின் குழந்தைகளோ அந்த பள்ளியில் படித்துக்கொண்டிருக்கலாம். மொத்தத்தில் குழந்தைகள் படிக்கும் பள்ளியில் இப்படி செய்கிறீர்களே நீங்கள் 6 அறிவு படைத்த மனிதர்களா? 5 அறிவு படைத்த மிருகமா? இதெல்லாம் எவ்வளவு கேவலமான விஷயம் தெரியுமா? அரசு பள்ளியில் படித்த ஏதோ ஒரு மாணவர் சிறிய சாதனை செய்தால் கூட அது, தன்னுடைய சாதனை போல நம்முடைய முதலமைச்சர் அவ்வளவு பெருமைப்படுகிறார். மாணவரை நேரில் அழைத்து பாராட்டுகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கலாமா? நான் முதலமைச்சரிடம் முதல் முறையாக கைகூப்பி கேட்டுக்கொள்கிறேன், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியும் இது போன்ற சம்பவங்கள் உங்கள் ஆட்சியில் தொடரக்கூடாது. இந்த பள்ளி மட்டுமல்ல பாதிக்கப்பட்ட எல்லா பள்ளி மாணவர்களுடனும், ஆசிரியர், தலைமையாசிரியருடனும் நான் நிச்சயம் துணை நிற்பேன். விரைவில் அப்பள்ளிக்கு வந்து அனைவரையும் சந்திக்கிறேன்" என்று கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் டிரெண்டாகி வருகிறது.
-
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications