Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தியாகு என் நண்பர்! கார் எடுக்க முடியாது! ஜெயலலிதாவிடம் போய் சொல்லு.. எஸ்.பி.யிடம் சீறிய விஜயகாந்த்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கும்பகோணத்தில் தியாகுவின் தாய் இறந்ததற்கு துக்கம் விசாரிக்க 500 கார்களுடன் வந்த விஜயகாந்தை காரை எடுக்குமாறு மாவட்ட காவல் துறை எஸ்.பி. கேட்டுக் கொண்ட போது அவர் மறுத்துவிட்டார் என தியாகு கண்ணீர் மல்க தெரிவித்தார்.

இதுகுறித்து தியாகு கலாட்டா சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: யாருடைய இடத்திலும் இல்லாமல் தன்னுடைய இடத்திலேயே விஜி விதைக்கப்பட்டிருக்கிறார். ராஜாஜி ஹாலில் விஜியின் உடல் பொதுமக்கள் அஞ்சலி வைக்கப்பட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்டேன்.

Actor Thyagu praises about Vijayakanth for his friendship

அங்கு புதுப்பிக்கும் பணிகள் நடப்பதாக தெரிவித்து தீவுத்திடலில் இடம் கொடுத்தார்கள். நடிகர் சங்கத்தில் விஜயகாந்துக்கு சிலை வைக்க வேண்டும் என எனக்கு ஒரு ஆசை இருக்கிறது. நடிகர் சங்க கடனை அடைக்க அவர் மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கு சென்று கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். நானும் அவருடன் சென்றிருந்தேன்.

நடிகர் சங்க கடனை அடைத்த விஜயகாந்த் மீதமுள்ள காசு ரூ 1.70 கோடியை நடிகர் சங்கத்தில் டெபாசிட்டாக போட்டார். நான் விஜயகாந்தை சந்திக்க போனது போது என்னை அடையாளம் கண்டு கொண்டு தியாகு தியாகு தியாகு என என் கையை விஜயகாந்த் பிடித்துக் கொண்டார்.

எனக்கு தெரிந்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடனேயே விஜயகாந்த் தனது அரசியல் பயணத்தை தொடர்ந்திருந்தால் அவர்தான் இன்று முதல்வராக வந்திருப்பார். விஜயகாந்தை குடிக்காரன் என்றெல்லாம் சொல்வது தவறு. இனி யார் சொன்னாலும் பிச்சிப்புடுவேன்.

என்ன காரணம் என்றால் தேமுதிக கட்சி ஆரம்பிக்க போவதாக விஜயகாந்த் சொன்ன போது அவருடைய மண்டபத்தை கேக் வெட்டுவது போல் திமுக ஆட்சியில் வெட்டினார்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சியின் போது திமுக தலைவர் கருணாநிதிக்கு பொன் விழாவை நடத்துவது குறித்து விஜயகாந்திடம் நான் அழகப்பன், சந்திரசேகர் உள்ளிட்டோர் பேசினோம். விஜயகாந்த் தைரியமாக நடத்தலாம் என்றார்.

முக்கியமானவர்கள் எல்லாம் ஜெயலலிதாவின் கோபத்துக்கு ஆளாகக் கூடாது என கருதி இந்த விஷயத்தை முன்னெடுக்காமல் விட்டுவிட்டனர். அப்போது மனோரமா எனக்கு போன் செய்து வேண்டாம் தம்பி அம்மு (ஜெயலலிதா) கோபித்துக் கொள்வாங்க என்றார். அதற்கு விஜயகாந்த் எந்த பிரச்சினை வந்தாலும் நாங்கள் நடத்தியே தீருவோம் என்றார்.

கருணாநிதியை ஆட்சியில் அமர வைத்துவிட்டுத்தான் விஜயகாந்த் மறு வேலை பார்த்தார். அப்படிப்பட்ட விஜயகாந்தின் திருமண மண்டபத்தை இடிக்கலாமா? எதிர்க்கட்சித் தலைவரான போது கூட அரசின் கார் கூட வேண்டாம் என விஜி சொல்லிவிட்டார். அரசு கொடுத்த பாதுகாப்பை கூட வேண்டாம் என சொல்லிவிட்டார்.

நான் ஊட்டியில் ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன். அப்போது எனது தாய் காலமானார். நான் அடுத்த நாளே கும்பகோணத்திற்கு சென்றேன். என் தாய்க்கு கொள்ளி போட்டதால் என்னால் 30 நாட்களுக்கு ஊரைவிட்டு செல்ல முடியவில்லை. 4 படம் கேன்சல் ஆகிவிட்டது. விஜி எனக்கு போன் செய்தார். எப்படி இருக்கேன்னு கேட்டார், ஏதாவது செலவுக்கு காசு வேண்டுமா என கேட்டார்.

நான் அதெல்லாம் வேண்டாம் என்றேன். அடுத்த நாள் மீண்டும் விஜி போன் செய்து நான் திருச்சி விமான நிலையத்தில் இருக்கிறேன் என கூறினார். அவர் வருவதை அறிந்த கட்சியினர் உள்ளிட்டோர் 500 கார்களில் என் வீட்டுக்கு வந்தனர். என் வீடு மெயின் ரோட்டில் உள்ளது. அந்த ரோடே ஸ்தம்பித்துவிட்டது. என் வீட்டில் 2 மணி நேரம் உட்கார்ந்து கொண்டார்.

அப்போது என் வீட்டிற்கு மாவட்ட எஸ்பி வந்து விஜயகாந்திடம் இத்தனை கார்கள் நிற்பதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது என்றார். நான் கார்களை எடுக்க மாட்டேன். நான் துக்கம் விசாரித்துக் கொண்டிருக்கிறேன். தியாகு எனது நெருங்கிய நண்பர், வேண்டுமானால் நான் காரை எடுக்கவில்லை என உங்கள் முதல்வர் அம்மாவிடம் (ஜெயலலிதா) போய் சொல்லு என்றார்.

உடனே நான்தான் விஜியிடும் பிரச்சினை எல்லாம் வேண்டாம் என சொல்லி அவரை அனுப்பி வைத்தேன். எதுக்கு சொல்கிறேன் என்றால் ஒரு நட்புக்காக அவர் செய்தார். நடிகர் சங்கம் சார்பாக நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு நான் போகவில்லை. எனக்கு என்ன கோபம் என்றால் வெளியூர்களில் இருந்தெல்லாம் மக்கள் சாரை சாரையாக வந்தனர்.

ஆனால் நடிகர் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தவில்லை. தமிழகத்தில் உள்ள நடிகர், நடிகைகளை வரவழைத்து மிகப்பெரிய மலர் வளையத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம் என எழுதி அஞ்சலி செலுத்தி இருந்தால் அது மரியாதை. அவர்கள் செய்தது தவறு. அனைவருமே நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு இறுதி அஞ்சலி செலுத்த சென்றிருக்க வேண்டும். இதை நடிகர் கார்த்தி ஒப்புக் கொண்டார். இவ்வாறு தியாகு தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+