‛இது சமாதி அல்ல - சன்னதி’.. கருணாநிதி நினைவிடத்தை பார்த்து பிரமித்த வடிவேலு! விசிலடித்து உற்சாகம்
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை நடிகர் வடிவேலு இன்று நேரில் பார்த்து பிரமித்து போனவர் விசிலடித்து கொண்டாடினார்.
தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் மற்றும் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட நினைவிடத்தையும் முதல்வர் முக ஸ்டாலின் கடந்த மாதம் திறந்து வைத்தார். இந்த நினைவிடம் என்பது ரூ.39 கோடி செலவில் மிகவும் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது.

நினைவிடத்தில் அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்றும், கருணாநிதி அமர்ந்து எழுதுவதும் போன்றும் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் சமாதியில் 'ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு எடுத்து கொண்டிருக்கிறார்' என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றதற்காக கருணாநிதியை பாராட்டி சோனியா காந்தி கடந்த 8.11.2005 அன்று எழுதிய கடிதம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டு அவரது நினைவிடம் அருகே வைக்கப்பட்டுள்ளது. கருணாநிதியின் பொன்மொழி வாசகங்களை கல்வெட்டுகள் தாங்கி நிற்கின்றன. கருணாநிதி சமாதியின் பின்புறம் வியட்நாம் நாட்டின் மார்பிள் கல்லில் அவருடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. 'லேசர்' மின்னொளியில் ஜொலிக்கும் வகையில் நவீன வேலைப்பாடுகளுடன் கருணாநிதியின் சிலை உள்ளது.
மேலும் 20 ஆயிரம் சதுரடியில் 'கலைஞர் உலகம்' என்ற டிஜிட்டல் அருங்காட்சியகத்துக்கான சுரங்கப்பாதை அனைவரையும் கவரும் விதமாக உள்ளது. முழுவதும் ஏசி வசதி செய்யப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் 'கலைஞர் எழிலோவியங்கள்' என்ற பெயரில் அறை அமைக்கப்பட்டுள்ளது. அதில் கருணாநிதியின் இளமை காலம் முதல் முதுமை காலம் வரையிலான அரிய புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. 'கலைஞருடன் ஒரு செல்பி' என்ற பெயரில் ஒரு அரங்கு அமைந்துள்ளது. போட்டோ எடுத்தவுடன் 'டிஜிட்டல்' தொடு திரையில் செல்போன் எண்ணை பதிவு செய்தால் 'வாட்ஸ்-அப்' எண்ணுக்கு வந்து விடும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்த அருங்காட்சியகத்தை பொதுமக்கள் வரும் 6ம் தேதி முதல் இலவசமாக பார்வையிட அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தான் நடிகர் வடிவேல் இன்று கருணாநிதி அருங்காட்சியகத்தை பார்வையிட்டு ரசித்தார். அதன்பிறகு அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அருங்காட்சியகத்தை நினைத்து விசிலடித்து கொண்டாடினார். இதுபற்றி வடிவேல் கூறியதாவது:
கலைஞர் அருங்காட்சியகத்தை பார்த்த பிரமித்துவிட்டேன். இது சமாதி அல்ல. சன்னதி. அருங்காட்சியகத்தில் பெரிய வரலாறே உள்ளது. அதனை பார்க்க 2 கண்கள் பத்தாது. 1000 கண்கள் வேண்டும். அவ்வளவு அழகா செய்துள்ளனர். கருணாநிதி எப்படி வாழ்ந்தார்? அவரது வரலாறு என்ன? அவர் எவ்வளவு பெரிய போராளி? அவரது போராட்டங்கள், பட்ட கஷ்டங்கள் உள்ளிட்டவை தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
இந்த அருங்காட்சியகத்தை பார்க்க 6ம் தேதி முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். நான் இன்று காசு கொடுக்காமல் பார்த்துவிட்டேன்' என்றார். இந்த வேளையில் பொதுமக்களுக்கும் ப்ரி தான் என அருகே இருந்தவர் கூற, விசிலடித்த வடிவேலு, ‛‛பொதுமக்களுக்கும் ப்ரீ தான் போல. உண்மையிலேயே கருணாநிதியை நேரில் பார்த்த வியப்பு. பக்கத்திலேயே இருந்து பேசுவது போன்ற உணர்வு உள்ளது. அவர் என்கிட்ட வந்ததற்கு நன்றினு சொன்னார். அவர் பக்கத்தில் இருந்து போட்டோ எடுத்தேன். அவரை பார்த்து நான் கும்பிட்டேன். அவர் என்னை பார்த்து கும்பிட்டார்.
திமுக தொண்டனுக்கு குலதெய்வ கோவில் இது. மாபெரும் கடவுள் போன்று இருக்கிறார். திமுகவில் இருந்து ஒரு செங்கல்லை கூட உருவ முடியாத அளவுக்கு அவர் கட்சியை வளர்த்துள்ளார் என்பதை உள்ளே சென்று பார்த்தால் தெரியும். இது மணிமண்டபம் அல்ல. மணிமகுடம் கலந்த மணிமண்டபம். மக்கள் பார்க்க துடிக்கிறார்கள். தொண்டருக்கு மட்டுமல்ல மக்களுக்ம், உலக தமிழர்கள் என எல்லாருக்குமான கொடுப்பனையான மணிமண்டபம் இது.
இந்த மணிமண்டபத்தை எனது அண்ணன் தளபதி ஸ்டாலின் பிரமாதமாக செய்துள்ளார். உறுதுணையாக இருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி அண்ணனுக்கும் நன்றி'' எனக்கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications