கட்டாயப்படுத்தாதீங்கப்பா.. திமுக பொதுக்கூட்ட மேடையில் கையெடுத்து கும்பிட்ட நடிகர் வடிவேலு
சென்னை: அரசியலில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகர் வடிவேலு, திடீரென சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தி திணிப்பு பற்றி பேசும் போது, காக்காக்கு கா கா னு அதோ தாய் மொழியில் தான் கத்தத் தெரியும். அதை கிளி மாதிரி கத்த வைக்க முடியாது என்றார். யார் யாருக்கு என்ன வேணுமோ அதை கத்துக்கட்டும்.. யாரையும் கட்டாயப்படுத்தாதீங்கப்பா என்று கூறி கையெடுத்து கும்பிட்டார்.
அரசியலில் இருந்து நீண்ட காலமாக ஒதுங்கிஇருந்த நடிகர் வடிவேலு சென்னையில் திமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறும் போது, " இப்போது இடையில் ஒன்றை கிளப்பிட்டாங்கய.. சொல்லக்கூடாது.. இருந்தாலும் சொல்லித்தான் ஆக வேண்டும்... தமிழ் மொழிக்கு சின்னதாய் ஒரு ஆபத்து.. அது வழக்கம் போல் வந்து கொண்டுதான் இருக்கிறது.. நான் சொல்கிறேன்.. காக்கா.காக்கா மாதிரி தான் கத்துகிறது.. அது தாய்மொழியில்.. இல்லையான்ணே.. அண்ணே உங்களத்தான் கேட்கிறேன்(சேகர்பாபுவிடம் கேட்டார்)... இங்கே பாருங்கனே..

காக்கா காகான்னு அதோட தாய்மொழியில் கத்துகிறது.கிளி கீ கீ என்று அதன் தாய்மொழியில் கத்துக்கிறது.. பசு மாடு அம்மா என்று அதன் தாய்மொழியில் கத்துகிறது.. நாய் அதனுடைய தாய்மொழியில் வவ் வவ் என்று கத்துகிறது.. மாட்டினை போய் நாய் மாதிரி கத்த சொன்னால் எப்படி கத்தும்.. கிளியைபோல் காக்கா போல் கத்த சொன்னால் எப்படி கத்தும்.. பூனை மியாவ் என்று கத்துகிறது.. அதை குயில் மாதிரி கத்த சொன்னால் எப்படி கத்தும்.. வேண்டாம்..
நான் ஒன்றே ஒன்று சொல்கிறேன்.. யார் யார் எது எதை கற்றுக்கொள்ளணுமே கற்றுக் கொள்ளட்டும்.. கட்டாயப்படுத்தாதீங்கயா.. கையெடுத்து கும்புடுகிறேன்.. எங்கள் நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு கலாச்சாரம் உள்ளது. ஒரு மொழி இருக்கிறது.. இதுதான் அடையாளம்..எங்கள் தமிழ்நாட்டிற்கு அடையாளம் வந்து தமிழ் தாய் தான்.. தமிழ் மொழி தான். என்னுடைய சாதாரண வட்டார மொழி இருக்குல.. இந்த மொழி.. நான் பேசுற மொழி இருக்குல, நான் இலக்கியம் படிக்கவில்லை.. தொல்காப்பியம் படிக்கவில்லை..
ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்ட மொழி தமிழ்.. திருவள்ளூர் 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறள் எழுதி வைத்துள்ளார்.. அப்படி வலிமையான மொழி இப்போது தமிழக முதல்வர் ஸ்டாலினின் பார்வையில் நிற்கிறது.. இந்த மொழிக்காக என் உயிரையும் கொடுப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.. அந்த வார்த்தை தமிழக மக்களை எல்லாம் நெகிழ வைத்துள்ளது. நீங்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் திணிக்க வேண்டாம்.. புகுத்த வேண்டாம் " என்று வடிவேலு பேசினார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications