ஓடும் காரில் ஓட்டல் இம்பீரியலை மனப்பாடம் செய்த விஜயகாந்த்.. வாகை சந்திரசேகர் சொன்ன சுவாரஸ்யம்
சென்னை: நடிகர் சங்கம் சார்பில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு நடத்தப்பட்ட நினைவேந்தல் நிகழ்ச்சியில் அவர் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார் வாகை சந்திரசேகர்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாத நிலையில் அவர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 28ஆம் தேதி நிமோனியா காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தில் கோடிக்கணக்கானோர் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் நடிகர் சங்கம் சார்பில் விஜயகாந்துக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி கடந்த 19ஆம் தேதி நடந்தது. இந்த விழாவில் விஜயகாந்தின் மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரன், மைத்துநர் சுதீஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் கேப்டனுக்கு ஒரு நிமிட மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் விஜயகாந்தின் திருவுருவப்படத்திற்கு மலர்த் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. அப்போது நடிகர் நாசர் கூறுகையில், நடிகர் விஜயகாந்த் வெண்ணிற ஆடையில் சிறிய கரும்புள்ளி கூட இல்லாமல் நல்ல உள்ளத்துடன் இருந்தார்.
எப்படி கோழி தனது குஞ்சுகளை அடைகாக்குமோ அது போல் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது விஜயகாந்த் அனைவரையும் அரவணைத்து சென்றார் என்றார். அது போல் நடிகர் சரத்குமார் பேசுகையில் இப்படி ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வேன் என என் வாழ்வில் நினைத்துக் கூட பார்த்ததில்லை.
புலன்விசாரணை படத்திற்கு வில்லனாக நடிக்க வந்த போது என்னை பார்த்து இவர் மீசை இல்லாமல் எப்படி நடிப்பார் என பேசிக் கொண்டிருந்தனர். அடுத்த இரு நிமிடத்தில் மீசை இல்லாமல் நான் விஜயகாந்தை சந்தித்தேன். இப்போது மீசையில்லாமல் அவருடைய நினைவேந்தல் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளேன். இது எனக்கு வருத்தமளிக்கிறது.
விஜயகாந்த் குறித்து 3 நிமிடம் பேசச் சொன்னார்கள். ஆனால் அவரை பற்றி 3 தலைமுறைக்கு கூட பேசும் அளவுக்கு அத்தனை நல்ல விஷயங்கள் உள்ளன. 2000-ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை நடிகர் சங்கத்தில் அவருடன் நான் எனது பயணத்தை தொடங்கினேன். நடிகர் வடிவேல் ஏன் வரவில்லை என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள். அவர் வீட்டில் இருந்தபடியே விஜயகாந்தை நினைத்து பார்த்து அழுதிருக்கலாம்.
மறப்போம் மன்னிப்போம் என குணம் படைத்த விஜயகாந்த், நிச்சயம் வடிவேலுவையும் மன்னித்திருப்பார் என்றார். இதையடுத்து நீதி கட்சித் தலைவர் ஏ.சி. சண்முகம் பேசுகையில் குழந்தை உள்ளம் படைத்த ஒரு மாமனிதர், கருணை உள்ளம் கொண்டவர் விஜயகாந்த். ஒரு மனிதர் எப்படி வாழ வேண்டும் என வாழ்ந்து காட்டியவர். பிரதமராக 2014 ஆம் ஆண்டு மோடி பதவியேற்ற போது அவர் சொன்ன ஒரே ஒரு பெயர் கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான். கடையெழு வள்ளல்களில் 8ஆவது வள்ளல் விஜயகாந்த் என்றால் 9ஆவது வள்ளல் விஜயகாந்த் என்றார்.
இந்த நிலையில் நடிகர் வாகை சந்திரசேகர் பேசுகையில் நான், பாண்டியன், விஜயகாந்த், ராதாரவி ஆகிய 4 பேரும் ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தோம். எழும்பூரில் இருந்த இம்பீரியல் ஹோட்டலில் திருமணம் நடந்தது. இந்த திருமணத்திற்காக முன் பக்கம் ராதாரவி உட்காந்திருக்க பின்னால் நாங்கள் மூவரும் உட்கார்ந்திருந்தோம்.
அப்போது பாண்டியன் இம்பீரியல் ஹோட்டல் என்ற பெயரை மதுரை ஸ்லாங்கில் பீயை அழுத்தி சொல்லாமல் சொன்னார். உடனே ராதாரவி, எங்கிருந்துடா வரீங்க என கேட்டவாறே இம்பீரியல் ஹோட்டலின் பெயரை அழகாக சொல்லிக் கொடுத்தார். ஆனாலும் பாண்டியன் மதுரை வழக்காடுவதை விடவே இல்லை. அப்போது விஜயகாந்த் அமைதியாக உட்கார்ந்து கொண்டு வாயில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது நான் விஜியிடம் என்ன என கேட்டேன். அதற்கு விஜியோ, அடுத்து அவன் என்னைத்தான் கேட்பான். அதனால் சொல்லி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். எங்களுக்கெல்லாம் சிரிப்பு வந்துவிட்டது. இவ்வாறு வாகை சந்திரசேகர் தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications