“ஷாக்” ஆன வில்லன் நடிகர்.. ரூ.3,000 அனுப்புங்க? நான் அது இல்ல! வேல ராமமூர்த்தி விடுத்த எச்சரிக்கை
சென்னை: சமூக வலைதளங்கள், இணையதளத்தை பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுவது வாடிக்கையாகிவிட்ட நிலையில் பிரபல வில்லன் நடிகரான வேல ராமமூர்த்தியின் பெயரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு மக்கள் மத்தியில் பெரும் அளவில் வளரத் தொடங்கி இருக்கிறது. இதனால் அனைத்தையும் ஆன்லைன் மூலமாக மக்கள் செய்து வருகின்றார்கள்.
குறிப்பாக சமூக வலைதளங்களின் வாயிலாக யாரை வேண்டுமானாலும் ஏமாற்ற முடியும் என்ற நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதேபோல் பிரபலங்களையும் எளிதில் தொடர்புகொள்ளும் வாய்ப்பு இதில் ஏற்படுகிறது.

சமூக வலைதளங்கள்
சமூக வலைதளங்கள் வளரத் தொடங்கிய காலத்தில் இருந்தே உண்மையான கணக்குகளைபோல் போலி கணக்குகள் தொடங்கி பெண்களை ஏமாற்றுவது, பண மோசடியில் ஈடுபடுவது தொடர் கதையாக இருந்து வருகிறது. இதனை தடுக்க சமூக வலைதள நிறுவனங்கள் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை கோரினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை.

ஆன்லைன் மோசடி
குறிப்பாக கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலிகள் மூலமாக நடைபெறும் மோசடிகளின் எண்ணிக்கையும் பன்மடங்கு பெருகி இருக்கிறது. ஒருவரை போலவே பேஸ்புக், இன்ஸ்டாகிராம் அல்லது ட்விட்டரில் போலி கணக்கு தொடங்கி, அவரது நண்பர்களிடம் கூகுள் பே, போன் பே கியூ ஆர் கோடை அனுப்பி கடன் கேட்டு மோசடியில் ஈடுபடுவது அண்மை காலமாக அரங்கேறி வருகிறது.

எச்சரிக்கை
பலரும் "இது என்னுடைய கணக்கு இல்லை. சமூக வலைதளங்களின் மூலமாக நான் யாரிடமும் நிதி உதவி கேட்க மாட்டேன். என்னிடம் கேட்காமல் யாருக்கும் பணம் அனுப்பாதீர்கள்." என பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டரில் பதிவிட்டு வருவதை இந்த சமூக வலைதளங்களை பயன்படுத்துபவர்கள் பார்த்திருக்க முடியும்.

பிரபலங்கள்
சாமானிய மக்களை விட சினிமா, விளையாட்டு, தொலைக்காட்சி பிரபலங்களையே இந்த மோசடி கும்பல் குறிவைக்கிறது. காரணம் அவர்கள் பெயரில் பணம் கேட்டால் எளிதில் கொடுத்துவிடுவார்கள் என்பதுதான். பிரபலங்களின் பெயரில் பரோடி கணக்கு தொடங்கி அவர்களின் படங்களை பதிவிட்டு லைக், ஃபாலோயர்களை குவிப்பது வேறு ரகம்.

வேல ராமமூர்த்தி
இந்த நிலையில்தான் இந்த மோசடி வலைக்குள் இழுத்துவிடப்பட்டு இருக்கிறார் பிரபல எழுத்தாளரும் வில்லன் நடிகருமான வேல ராமமூர்த்தி. இன்ஸ்டாகிராமில் அவரது பெயரில் போலியாக கணக்கு தொடங்கி அவரது கணக்கில் இருந்து வேறொரு நபரிடம் ரூ.3,000 உதவி கேட்டு இருக்கிறார்கள்.

போலி இன்ஸ்டாகிராம் கணக்கு
போன் பே செயலியின் கியூ ஆர் கோடை கொடுத்து அதை ஸ்கேன் செய்து பணத்தை அனுப்புமாறு கோரி உள்ளனர். இந்த மெசேஜுகளின் ஸ்க்ரீன் ஷாட்டை வேல ராமமூர்த்தியே பேஸ்புக்கில் பதிவு செய்து உள்ளார். வழக்கம்போல் நலம் விசாரித்துவிட்டு, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா என்று கேட்டு, என்னுடைய நண்பரின் யுபிஐக்கு பணம் அனுப்ப முடியுமா? என்று கேட்டு இருக்கிறார்கள்.

மக்களுக்கு எச்சரிக்கை
இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள வேல ராமமூர்த்தி, "நண்பர்களே... உஷார். என் பெயரில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ் அப் மூலம் பணம் கேட்டு யாரோ போலி நபர் ஏமாற்றுவதாக அறிகிறேன். தயவுசெய்து யாரும் ஏமாற வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்." என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து இருக்கிறார்.
-
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications