Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரிசல்ட் வந்தாச்சு..இனி சின்ராச கைல பிடிக்க முடியாது! விரைவில் சந்திப்போம்.. விஜய் கொடுத்த மெசேஜ்.!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் விரைவில் சந்திப்போம் எனவும் தனது வாழ்த்துச் செய்தியில் விஜய் குறிப்பிட்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக பொது தேர்வில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை விஜய் நேரில் வரவழைத்து அவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் இந்த ஆண்டும் மாணவர்கள் சந்திப்பு இருக்கும் என்பதையே விஜய் வாழ்த்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பிளஸ் டூ தேர்வுகள் கடந்த மார்ச் மூன்றாம் தேதி தொடங்கி 25ஆம் தேதி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் சுமார் 7518 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் எட்டு லட்சம் மாணவர்களும், தனித்தேர்வர்கள், சிறைவாசிகள் உள்ளிட்ட 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதினர்.

விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில் திட்டமிட்டதற்கு ஒருநாள் முன்பாகவே இன்று தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தேர்வு முடிவுகளை வெளியிட்டார்.

Actor Vijay Plus 2 TVK

இந்த ஆண்டு 95.03% மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். இதனையடுத்து வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பல தரப்பினரும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் மாணவ மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்," 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள தம்பி தங்கைகளுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பொது தேர்வு தேர்ச்சி மட்டுமே வாழ்வில் எல்லாவற்றையும் முடிவு செய்திடாது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

எனவே மனம் தளராமல் கடின உழைப்பை மீண்டும் முதலீடாக்கி புதிய இலக்கை நோக்கி செல்ல அனைவருமே தயார் ஆகுங்கள். வெற்றி காணுங்கள். வாழ்வின் அடுத்த நிலைக்குச் செல்லும் நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறைகளில் பற்பல சாதனைகள் புரிந்து தலை சிறந்து விளங்கிட வாழ்த்துகிறேன். விரைவில் சந்திப்போம்" என கூறியுள்ளார்.

இதனால் விஜய் தரப்பு ஆதரவாளர்களும் மாணவ மாணவிகளும் உற்சாகம் அடைந்து இருக்கின்றனர். கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பே அதாவது 2023 ஆம் ஆண்டில் இருந்தே விஜய் பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை சட்டமன்ற தொகுதி வாரியாக மூன்று பேரை தேர்ந்தெடுத்து சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு பரிசு அளிப்பது வழக்கம். மேலும் நாள் முழுவதும் நின்று கொண்டே அவர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக விஜய் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சமூக வலைதளங்களிலும் செய்திகளிலும் பேசு பொருளானது. தற்போது விஜய் அரசியலுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அதே நேரத்தில் அதற்கு முன்னதாக மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி இருக்கும் என்கின்றனர். தற்போதிலிருந்தே மாவட்ட செயலாளர் தங்கள் பகுதிகளில் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளின் பட்டியலை தயார் செய்து வருகின்றனர்.

வரும் 19ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகும் நிலையில் அன்றைய தினமும் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விவரங்களை சேகரித்து தலைமைக்கு அனுப்பவுள்ளனர் தமிழக வெற்றிக்கழகத்தின் மாவட்ட செயலாளர்கள். விரைவில் அவர்களை சென்னையில் விஜய் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+