Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக அரசின் பலமுனை வியூகம்.. ஓய்வு பெற்ற நீதிபதி, மூத்த வக்கீல்களிடம் ஆலோசித்த நடிகர் விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படி முறியடிப்பது என்பது குறித்தும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள பங்களாவில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் உள்ளிட்ட சட்ட நிபுணர்களிடம், நீதிமன்றத்தில் வைக்க வேண்டிய வாதம் குறித்து கருத்துகளை கேட்டதாக கூறப்படுகிறது. மேலும், த.வெ.க. தொண்டர்களை போலீசார் கைது செய்வதை சட்ட ரீதியாக தடுப்பது குறித்தும் ஆலோசித்தாராம்.

கரூரில் கடந்த செப்டம்பர் 27-ந்தேதி த.வெ.க. தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் பங்கேற்றார். அவர் காலையில் மீட்டிங்கிற்கு வருவதாக கூறிய நிலையில், மாலையில் தான் கரூருக்கு வந்தார். அப்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. நிர்வாகிகள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

Actor Vijay consulted retired judges and senior lawyers over karur incident

தவெக நிர்வாகிகள் கைது

த.வெ.க. நிர்வாகிகள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரை கரூர் போலீசார் கைது செய்தனர். இது ஒருபுறம் எனில், ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி ஆனந்த் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களும் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக புஸ்ஸி ஆனந்தின் முன் ஜாமீன் நீதிமன்றத்தில் இன்று தள்ளுபடி செய்யப்பட்டால், அவரை கைது செய்வதில் அரசு உறுதியாக உள்ளதாம்- மேலும் அரசுக்கு எதிராக அவதூறு பரப்புவோரையும் போலீசார் அதிரடியாக கைது செய்து வருகிறார்கள்.

விஜய் மீது கடுமையான விமர்சனங்கள்

இது ஒருபுறம் எனில், கூட்ட நெரிசலுக்கு உண்மையான காரணம் என்ன? என்பதை கண்டறிய தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்திருக்கிறது. அதன்படி, ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இது ஒருபுறம் எனில் விஜய் மீது கடுமையான விமர்சனங்களை தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊடகங்கள் வைத்து வருகின்றன. கரூருக்கு சம்பவம் நடந்த அன்று போகாமல் சென்னைக்கு சென்றது, இரண்டாம் கட்ட நிர்வாகிகளை கூட உடனே கரூருக்கு அனுப்பாதது, செய்தியாளர்கள் விளக்கம் கேட்ட போது கண்டுகொள்ளாமல் சென்றது, 2 நாட்களை கடந்த பின்னரும் எதுவும் சொல்லாமல் இருந்து பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியது.

விஜய் வீடியோ

இந்நிலையில் சம்பவம் நடந்த 3 வது நாளில் தான் விஜய் வீடியோ வெளியிட்டார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக த.வெ.க. தொண்டர்களை கைது செய்வதை விட்டு விட்டு, பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை கைது செய்யுங்கள் என்று கூறினார். மேலும் கரூரில் மட்டும் எப்படி இது போல் நடந்தது என்றும் விமர்சித்தார். அதாவது கரூர் சம்பவத்தில் சதி இருப்பதாகவே கூறினார்.

நீதிமன்றத்தில் வழக்கு

இந்தநிலையில் தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்களான புஸ்சி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். முன்ஜாமீன் கேட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற உள்ளது. இதேபோல் கரூர் சம்பவம் திட்டமிட்ட சதி என குற்றம்சாட்டிய த.வெ.க. சி.பி.ஐ. விசாரணை கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கும் இன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் நடக்கிறது.

விஜய் ஆலோசனை

இந்த சூழலில் ஏற்கனவே திட்டமிட்ட பிரச்சாரம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் வேலூர், ராணிப்பேட்டையிலும், அக்டோபர் 11-ந்தேதி புதுச்சேரி, கடலூரிலும் நடைபெற இருந்த விஜய்யின் பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக தமிழக அரசு தரப்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை எப்படி கையாள்வது? உயர்நீதிமன்ற விசாரணையை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்து சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள பங்களாவில் விஜய் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.

ஓய்வு பெற்ற நீதிபதிகளுடன் ஆலோசனை

ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் உள்ளிட்ட சட்ட நிபுணர்களிடம் உயர்நீதிமன்றத்தில் தங்கள் தரப்பு வாதம் எப்படி இருக்க வேண்டும்? என விஜய் கருத்துகளை கேட்டதாக சொல்லப்படுகிறது மேலும், த.வெ.க. தொண்டர்களை போலீசார் கைது செய்வதை சட்ட ரீதியாக தடுப்பது குறித்தும் அவர் மூத்த வக்கீல்களுடன் ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இதேபோல் டெல்லி சென்ற த.வெ.க. மூத்த தலைவரான ஆதவ் அர்ஜூனா கரூர் சம்பவத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எப்படி அமைய வேண்டும் என டெல்லியில் உள்ள மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இன்று உயர்நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கின் விசாரணை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

சிபிஐ விசாரணை கோரிய மனு தள்ளுபடி

இந்நிலையில் கரூரில் நெரிசல் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவும், கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரியும் தாக்கலான மனுக்களை உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருக்கிறது. மேலும், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் பொதுக் கூட்டம் நடத்த தடை விதித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்ஜாமீன் தள்ளுபடி

அதேபோல் நாமக்கல்லில் தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 27-ம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது, தனியார் மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக, தவெக மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் மீது நாமக்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் எனக் கூறி, முன்ஜாமீன் கேட்டு சதீஷ்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், கட்சியினர் அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள நிலையில், எதுவும் தெரியாது என மனுதாரர் எப்படி கூறலாம்? கட்சியினரை கட்டுப்படுத்த தெரியாதா? பொறுப்புடன் செயல்பட வேண்டாமா?' என சரமாரியாக கேள்வி எழுப்பி, முன்ஜாமீன் கோரும் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

விஜய் மீது வழக்கு

அதேபோல் விஜய் மீது வழக்கு பதிவு செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மதுரை உயர்நீதிமன்றம், ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட பதிவிற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது. அதேபோல் விஜய் பயணித்த வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் மீது ஹைட் அண் ரன் வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+