‛‛திடீரென மேடையில் கண்ணடித்த விஜய்’’.. பதிலுக்கு சிறுவன் கொடுத்த ரியாக்ஷன்.. விடாத த.வெ.க தலைவர்
சென்னை: 10 மற்றும் பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்து மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் இன்று கல்வி விருது என்ற பெயரில் பரிசு வழங்கும் நிகழ்ச்சியில் அவர் சிறுவனிடம் நடந்து கொண்ட வீடியோ வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் விஜய். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சி தொடங்கி அரசியலுக்குள் நுழைந்துள்ளார். இவரது கட்சி 2026 தமிழக சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளது.

கட்சி தொடங்கியதால் நடிகர் விஜய் விரைவில் திரைத்துறையை விட்டு வெளியேறி முழுநேர அரசியல்வாதியாக மாற உள்ளார். கடந்த ஆண்டை போலவே நடிகர் விஜய் இந்த ஆண்டு 10, 12ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளை அழைத்து சென்னையில் வைத்து பாராட்டி கல்வி விருது வழங்கி வருகிறார்.
விஜய் கல்வி விருது என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கான்வென்சன் சென்டரில் இன்று நடந்தது. கட்சி தொடங்கிய பிறகு நடிகர் விஜய் முதல் முறையாக இந்த நிகழ்ச்சி நடந்தது. இதனால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
தோளில் போட்ட விஜய் கையை எடுத்துவிட்ட மாணவி.. அதற்கு பிறகுதான் நெகிழ்ச்சியே!
அதன்படி நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகளுக்கு நடிகர் விஜய் பாராட்டு சான்று, சால்வை அணிவித்து பாராட்டி வருகிறார். மேலும் மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ-மாணவிகளுக்கு வைர கம்மல், வைர மோதிரம் பரிசளித்தார். மேலும் மாணவ-மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருடன் நடிகர் விஜய் சேர்ந்து போட்டோ எடுத்து கொண்டார். மேலும் மாணவ-மாணவிகளின் தோளில் அண்ணன்போல் விஜய் கைப்போட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்து வருகிறார்.
‛‛வாங்கண்ணா எல்லா கட்சியையும் ஊதித்தள்ளுவோம்’’.. ஆசிரியையால் பூரித்த விஜய்! அந்த பாட்டு தான் ஹைலைட்
இந்த வேளையில் பல மாணவிகள் தங்களின் கையை விஜயின் கைகளில் சேர்த்து ஹார்ட் சிம்பள் போன்று காட்டி கேமராவுக்கு போஸ் கொடுத்தது க்யூட்டாக இருந்தது. இந்த நிலையில் தற்போது வலைதளத்தில் வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதாவது விஜயிடம் பாராட்டு சான்று வாங்க சென்ற மாணவியுடன் அவரது தந்தை மற்றும் தம்பியும் மேடைக்கு சென்றனர். அந்த சிறுவனை அவரது தந்தை கையில் தூக்கி வைத்திருந்தார்.
கிறிஸ்தவரா நான்? விவேகானந்தர் பாணியில் பேச்சை தொடங்கிய நடிகர் விஜய்.. நெற்றியை கவனிச்சீங்களா?
இந்த வேளையில் மாணவி மேடையில் பேசினார். அப்போது அந்த சிறுவன் விஜயை உற்று கவனிக்க தொடங்கினான். இதனை பார்த்த விஜய் க்யூட்டாக ஒற்றை கண்ணை லைட்டாக மூடி கண்ணடித்தார். அதனை பார்த்த சிறுவன் தனது இரு கண்களையும் சட்டென மூடி கண்ணடித்தார். ஆனாலும் விஜய் விடவில்லை. பதிலுக்கும் மீண்டும் சிறுவனை பார்த்து ஒற்றை கண்ணை மூடி கண்டித்தார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் விஜய் ரசிகர்கள் மற்றும் அவரது கட்சியை சேர்ந்தவர்கள் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர்.
-
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
சென்னையில் வெடிக்கும் பிரியா vs விஜய் மோதல்.. மேயர் - முதல்வர் இடையே மறைமுக யுத்தம்.. என்ன காரணம்? -
Hey Everybody! ‘முதல்வன்’ அர்ஜுனான தவெக சமஉக்கள்! கேமராவைக் கண்டு அலறும் ஆபீசர்ஸ்! தவெகவுக்கு தலைவலி -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி -
"உண்மையை சொல்ல தைரியம் இல்லை".. ஜனநாயகன் ரிலீஸ் எப்போது? நொந்துபோய் எச் வினோத் சொன்ன பதில் -
கோவையை உச்சத்திற்கு கொண்டு செல்லும் தவெக.. அடுத்தடுத்து 8 மெகா திட்டங்கள் -
சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்?












Click it and Unblock the Notifications