உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களுடன் நடிகர் விஜய் சந்திப்பு... பரபரக்கும் ஈ.சி.ஆர். பங்களா..!
சென்னை: 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றவர்கள் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்து பெற வேண்டி சென்னை ஈ.சி.ஆரில் உள்ள அவரது பங்களா முன்பு குவிந்து வருகின்றனர்.
இதனிடையே தனது வீட்டின் முன் குவிந்துள்ள நூற்றுக்கணக்கான ரசிகர்களில் குறிப்பிட்ட சிலரை மட்டும் நடிகர் விஜய் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், உள்ளாட்சித் தேர்தலில் கிராம வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றவர்களை இன்று மாலை விஜய் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அண்மையில் நடைபெற்று முடிந்த 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக போட்டியிட்டவர்கள் கிராம வார்டு உறுப்பினர்களாக வெற்றி பெற்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை காட்டிலும் அதிக இடங்களில் விஜய் மக்கள் இயக்கத்தினர் வெற்றி பெற்றிருந்தனர்.
இதனால் விஜயகாந்த் பாணியில் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் மூலம் அரசியலில் ஆழம் பார்க்கிறாரோ என விவாதம் எழுந்தது. இந்நிலையில் தற்போது சென்னையில் இருக்கும் நடிகர் விஜயை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற வேண்டி, உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற கிராம வார்டு கவுன்சிலர்கள் சென்னை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள பனையூர் விஜய் இல்லத்தின் முன்பு திரண்டுள்ளனர்.
கொரோனா காலம் என்பதால் அனைவரையும் தனிதனியாக சந்திப்பது சாத்தியமில்லை என்பதால், முக்கிய நிர்வாகிகள் சிலரை மட்டும் அழைத்து விஜய் சந்திருப்பதாகவும் இருப்பினும் வந்தவர்கள் அனைவரையும் ஏமாற்றத்துடன் அனுப்பி வைக்க விரும்பாததால் அவர்கள் முன்னிலையில் தோன்றி 10 நிமிடம் மாலை பேசுவார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
Recommended Video
நடிகர் விஜய் பங்களா அமைந்துள்ள பகுதியில் ரசிகர்கள் திரள்வதால் போலீஸார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே நடிகர் விஜயின் நிகழ்ச்சி நிரல் குறித்து அறிவதற்காக அவரது ரசிகர் மன்ற பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்தை தொடர்பு கொள்ள பல முறை முயற்சித்தோம். அது முடியாததால், நடிகர் விஜயின் மக்கள் தொடர்பு அதிகாரி ரியாஸிடம் இது குறித்து நமது சினிமா செய்தியாளர் மூலம் பேசினோம்.
இப்படி ஒரு நிகழ்வே தனக்குத் தெரியாது என்ற ஒற்றை வரியில் அவர் தனது பதிலை முடித்துக்கொண்டார். இதை வைத்து பார்க்கும் போது ரசிகர்களுடனான சந்திப்பை நடிகர் விஜய் ஏற்கனவே திட்டமிடவில்லை என்பது தெரிகிறது.
-
முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு.. தமிழ்நாடு முழுக்க போன ஆர்டர்.. கிராமங்களுக்கு விடிவுகாலம்! -
ஆதவ் அர்ஜுனா சொன்னது நடக்குதா? ஈபிஎஸ் தலையில் இடிப்போல் இறங்கிய செய்தி.. அதிமுக எதிர்காலம்? -
ஸ்கீமுக்கு 10 செகண்டா? தலைமை செயலகத்தில் 75 நிமிட சர்ப்ரைஸ்! 436 திட்டங்களை விஜய் நகர்த்தியது எப்படி? -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நேரடி அரசியலில் விஜய்யின் நிழல்.. திருச்சி கிழக்கு தொகுதியில் ஜெகதீஷ் பழனிசாமி போட்டி? தவெக முடிவு! -
“திமுக கூட்டணிக் கட்சிகளிடம் கையேந்தி, கெஞ்சி ஆட்சி அமைத்துள்ளார் விஜய்”.. டிடிவி தினகரன் தாக்கு! -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்











Click it and Unblock the Notifications