தை பூசம் நாளில் கட்சி தொடங்கிய விஜய்.. தை வெள்ளியில் அறிவிப்பு.. இப்படி ஒரு விசேஷம் இருக்கா?
சென்னை: தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூசம் நாளில் பொதுக்குழு, செயற்குழுவை கூட்டி புது கட்சியை தொடங்கியுள்ளார் நடிகர் விஜய். தை வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் தேய்பிறை அஷ்டமிக்கு முன்பாக ராகு காலம் முடிந்து நல்ல நேரத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அரசியலுக்கு வந்து விட்டார் நடிகர் விஜய். அதற்கான அறிவிப்பையும் வெளியிட்டு விட்டார். கையில் இருக்கும் படங்களை முடித்து கொடுத்து விட்டு முழு நேர அரசியலில் இறங்கப்போகிறார் விஜய்.

தனது அரசியல் கட்சியின் பெயரை இன்று அறிவித்த விஜய், "எண்ணித் துணிக கருமம்" என்பது வள்ளுவன் வாக்கு. அதன்படியே, "தமிழக வெற்றி கழகம்" என்கிற பெயரில் எமது தலைமையிலான அரசியல் கட்சி துவங்கப்பட்டு, இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய எமது கட்சியின் சார்பில் இன்று விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக 25.01.2024 அன்று சென்னையில் நடைபெற்ற மாநில பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் தலைமை செயலக நிர்வாகிகள் தேர்தெடுக்கப்பட்டு கட்சியின் அரசியலமைப்பு சட்டம் மற்றும் சட்டவிதிகள் (bylaws) முறைப்படி ஒப்புதல் வழங்கப்பட்டு அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று மக்கள் விரும்பும் அடிப்படை அரசியல் மாற்றதிற்கு வழிவகுப்பது தான் நமது இலக்கு.
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றபின்,வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ்நாடு சார்ந்த கொள்கைகளின் வெற்றிக்கும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்குமான எமது கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள் ,கொடி, சின்னம் மற்றும் செயல்திட்டங்களை முன்வைத்து, மக்கள் சந்திப்பு நிகழ்வுகளுடன், தமிழ்நாட்டு மக்களுக்கான நம் அரசியல் பயணம் துவங்கும் என்று கூறியுள்ளார் விஜய்.
இன்றைய தினம் பிற்பகலுக்கு மேல் அஷ்டமி திதி என்பதால் அதற்கு முன்பாகவே அதே நேரத்தில் ராகு காலம் முடிந்து 12 மணிக்கு மேல் நல்ல நேரத்தில் கட்சி பெயரை அறிவித்தார் நடிகர் விஜய். இதனை நெட்டிசன்கள் சிலர் பகிர்ந்துள்ளனர்.
நல்ல நாள் ..
தை வெள்ளி...முகூர்த்த நாள்...
மதியம் மேல் அஷ்டமி...
அதனால் காலையிலேயே தொடங்கிட்டோம்...
அது மட்டும் இல்ல...
தேவமாதா பரிசுத்தரான திருநாள்...
ஜமாய்ச்சுடுவோம்...
என்றும் நெட்டிசன் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் பயணத்திற்கான செயல்பாடுகள் அனைத்தையும் நல்ல நேரம் பார்த்துதான் செய்கிறார். தனது பிறந்தநாளுக்கு முன்பாக ஜூன் 17ஆம் தேதி முதல் மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசளித்தார். அன்றைய தினம் சர்வ அமாவாசை தினம்.

நடிகர் விஜய் மக்கள் நலப்பணிகளில் ஈடுபடுமாறு தனது ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளார். இதனால் ரசிகர்கள் மாவட்டந்தோறும் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகின்றனர். பல மாவட்டங்களில் விஜய் ரசிகர்கள் விலையில்லா விருந்து என்ற உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்தி வருகிறார்கள். இதன் மூலம் ஏழைகள், கூலித் தொழிலாளர்கள் பலன் பெற்று வருகின்றனர். பெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் நடிகர் விஜய்.
நடிகராக இருக்கும் விஜய் அரசியல் பயணத்தையும் நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து தொடங்கியுள்ளார். இதற்கு ஆஸ்தான ஜோதிடர் ஒருவர் நேரம் குறித்து கொடுப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய தினம் தேவமாதா பரிசுத்தரான திருநாள் என்பதும் கூடுதல் சிறப்பம்சம் ஆகும்.
இயேசு கிறிஸ்துவின் அன்னையான தூய மரியாள் புனிதரான நாள் பிப்ரவரி 2. ஆண்டுதோறும் இந்த நாளை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடி வருகின்றனர். தேவமாதா டிசம்பர் 25ஆம் தேதி தேவகுமாரனான இயேசு கிறிஸ்துவை ஈன்றெடுத்தார். அன்றிலிருந்து அக்கால முறைப்படி 40 நாள்கள் கடுமையான விரதம் இருந்து தேவனைப் பாதுகாத்தார்.
வீட்டைவிட்டு வெளியே வராமல் பத்திய உணவுகளை மட்டுமே உண்டு பேறுகால வலிகளைக் குணப்படுத்திக்கொண்டார். 40 நாள்கள் விரதத்துக்குப் பிறகு, தூய மரியாள் பிப்ரவரி 2-ம் தேதி விரதத்தை முடித்துக்கொண்டு இயேசு கிறிஸ்துவை தங்களது கோயிலுக்கு அழைத்துச் சென்று தேவனுக்கு அர்ப்பணித்தார்.
பேறுகால அவஸ்தைகள் நீங்கி புனிதரான தேவமாதா, தேவனால் அன்றைக்கு ஆசீர்வதிக்கப்பட்டார். இதே நாளில்தான் இயேசு கிறிஸ்துவும் தேவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டார்; ஆகவே 'ஆண்டவரை அர்ப்பணிக்கப்பட்ட தினம்' என்றும் இந்நாள் அழைக்கப்படுகிறது. புனிதமான இந்த நல்ல நாளில் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார் நடிகர் விஜய்.
-
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
தவெக சார்பாக களமிறங்கும் அன்புச்செழியன் மகன்.. மதுரை மத்திய தொகுதியில் விவேக் அன்புச்செழியன்? -
பெரம்பூரில் களமிறங்கும் விஜய்.. ஏசி அலுவலகம் ரெடி.. மார்ச் 28 முதல் பிரச்சாரம் -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
விஜயகாந்த்காக வானத்தை போல படத்தில் விஜய் செய்த சம்பவம்! பக்கத்திலேயே சரத்குமார்.. இப்படி ஒரு விஷயம் இருக்கா! -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம் -
விஜய்- திரிஷா பற்றி அப்படி பேச காரணமே இதுதான்! வீடியோவுக்கு பின்னாடி இருந்த சம்பவம்! சமுத்திரக்கனி விளக்கம் -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications