நடிகர் விஜய் எங்களை தவிர்த்தாரா? உண்மையில் வாரிசு ஆடியோ லாஞ்சில் நடந்தது என்ன? மனம் திறந்த தாய் ஷோபா
நடிகர் விஜய் எங்களை மதிக்கவில்லையா- ஷோபா சந்திரசேகர் பரபரப்பு பேட்டி
சென்னை: வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பெற்றோரை மதிக்கவில்லை என்ற விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் அங்கு நடந்தது குறித்து அவரது தாய் ஷோபா சந்திரசேகர் விவரித்துள்ளார்.
எம்ஜிஆர்- சிவாஜி, ரஜினி- கமல், விஜய் - அஜித் என கூறும் அளவுக்கு முன்னணி நாயகர்களில் ஒருவராக உள்ளார் நடிகர் விஜய். இதற்கு காரணம் அவருடைய தந்தையும் இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகரின் உழைப்பும்தான் என்பதை மறுக்க முடியாது.
நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமான விஜய்யை பட்டை தீட்டிய வைரமாக இன்று ஜொலித்து வருகிறார். திரைத்துறையை போல் விஜய் அரசியலிலும் சோபிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எஸ்.ஏ. சந்திரசேகர் பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

அவசர கதி
ஆனால் அவசர கதியில் எடுக்கும் முடிவுகள் தவறாக போகும் என்பதால் இந்த முடிவை விஜய் தாமதப்படுத்திக் கொண்டே வந்தார். ஒரு கட்டத்தில் தந்தைக்கும் மகனுக்கும் முட்டல் மோதல் ஏற்பட்டு விவகாரம் கோர்ட் கேஸ் என சென்றது. இதிலிருந்து விஜய் தன்னுடைய பெற்றோரிடம் பேச்சுவார்த்தை வைத்து கொள்வதில்லை என கூறப்படுகிறது.

எஸ்ஏசி 81 ஆவது பிறந்தநாள்
எஸ்ஏ சந்திரசேகரின் 81 ஆவது பிறந்த நாளின் போது விஜய்யோ, அவருடைய மனைவியோ நேரில் வந்து வாழ்த்து தெரிவிக்கவில்லை. ஒரு வேளை விஜய்க்கு ஷூட்டிங் இருந்திருந்தாலும் விழா முடிந்த பிறகு கூட அவர் தந்தையை பார்க்கவில்லை. ஊருக்கெல்லாம் உபதேசம் சொல்லும் விஜய் தனது தாய், தந்தை விவகாரத்தில் இப்படி செய்வது தவறு என பலர் விமர்சிக்கும் அளவுக்கு நடந்தது.

இசை வெளியீட்டு விழா
அது போல் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடந்தது. இந்த விழாவுக்கு படக்குழுவினருடன் விஜய்யின் தந்தை சந்திரசேகரும், தாய் ஷோபாவும் பங்கேற்றனர். விழா அரங்கிற்குள் நுழைந்த விஜய், அங்கிருந்த நடிகர்கள், சிறப்பு விருந்தினர்கள் அனைவருக்கும் கை கொடுத்து கட்டியணைத்து வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.

ஷோபா
அந்த வகையில் தனது தாய், ஷோபாவிடம் வந்த அவர், தாய்க்கு கை கொடுத்து, தந்தையை கட்டிபிடித்தும் அன்பை வெளிப்படுத்தினார். ஆனால் சமூகவலைதளங்களில் விஜய் அந்த இசை வெளியீட்டு விழாவில் நடந்தது கொண்டது தனது தாய் , தந்தை போல் இல்லாமல் மூன்றாம் மனிதர்களிடம் நடந்து கொண்டது போல் சபை நாகரீகம் கருதி நடந்ததாகவே சொல்லப்பட்டது.

ஷோபா பேட்டி
இந்த சம்பவம் குறித்து விஜய்யின் தாய் ஷோபா ஒரு பேட்டி அளித்திருக்கிறார். அவர் கூறுகையில் விஜய்யின் பெற்றோராகிய நாங்கள் விருந்தினர்களாக மட்டுமே இசை வெளியீட்டு விழாவுக்கு சென்றோம். அந்த இடத்தில் விஜய்யின் வேலை ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்துவதே. விஜய்க்கு கிடைத்த மாபெரும் வரவேற்பை பார்த்து நாங்கள் வாயடைத்து போய்விட்டோம்.

என்ன நடந்தது
அவர் எங்களுடன் நேரத்தை செலவிடுவார் என்றெல்லாம் நாங்கள் யோசிக்கவில்லை. எப்படியும் நாங்கள் வீட்டில் ஒருவர் முகத்தில் ஒருவர் பார்த்துக் கொள்ளதான் போகிறோம். இதை ஏன் ஊடகங்கள் பெரிதுப்படுத்தி தவறான வதந்திகளை பரப்புகிறார்கள். இந்த வதந்திகளுக்கு எல்லாம் பதில் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. விஜய் அவரது தந்தையின் பேச்சை இன்றளவும் கேட்டு வருகிறார். என்னதான் ஷூட்டிங் வேலை என இருந்தாலும் குறைந்தது 8 மணி நேரம் தூங்க வேண்டும் என்பதை பின்பற்றுவார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications