’ஜான்' ஏறுனா முழம் சறுக்குது.. ’ஆரோக்கிய’மில்லாத அட்வைஸால் வெறுப்பான விஜய்! ஆக்சனில் அருண் ராஜ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் சம்பவம் தொடர்பாக கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு மேலாக பேசாமல் இருந்த விஜய் திடீரென பாதிக்கப்பட்டவர்களை வீடியோ கால் மூலம் சந்தித்து இருக்கிறார். இந்த நிலையில் அருண்ராஜ் தான் இந்த ஐடியாவை கொடுத்தார் எனவும் கரூர் விவகாரம் தொடர்பாக தன்னிடம் ஜான் ஆரோக்கியசாமியும் புஸ்ஸி ஆனந்தும் பல தகவல்களை மறைத்ததாக விஜய் வருத்தத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் இதுவரை பல நிகழ்வுகளில் ஜான் ஆரோக்கியசாமி தான் விஜயை தவறாக வழிநடத்தினார் என குற்றம் சாட்டுகின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர்.

கரூர் கூட்ட நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்குப் பிறகு, நடிகர் விஜய் நீண்ட நாட்கள் அமைதியாக இருந்தார். சம்பவம் நடந்தது ஜூலை 27 அன்று; ஆனால் அதற்கு பின் சுமார் 15 நாட்கள் கடந்தும், இன்று வரை அவர் கரூர் செல்லாமல் இருப்பது அவரது ரசிகர்களிடமும், எதிர்க்கட்சிகளிடமும் கடும் விமர்சனத்தை கிளப்பியது.

இந்த நிலையில், திடீரென விஜய் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வீடியோ கால் மூலம் சந்தித்து ஆறுதல் கூறியிருந்தார். இந்த நிலையில்ல், அந்த வீடியோ கால் ஐடியா தமிழக வெற்றிக் கழக கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜிடமிருந்து தான் வந்தது என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Vijay Arunraj John Arokiasamy

கரூர் விபத்து

"இப்போ ரொம்பா லேட் பண்றீங்க விஜய் அண்ணா... திமுக அங்க அரசியல் செய்கிறது. நீங்கள் கரூருக்கு செல்வது கடினமாக இருந்தாலும் ஏதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். இப்போதைக்கு வீடியோ கால் மூலமாகவாது பாதிக்கப்பட்டவர்களிடம் பேசலாம்," என்று அருண் ராஜ் பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் கூறிய ஆலோசனையை ஏற்றுக் கொண்ட விஜய், அருண் ராஜின் ஒருங்கிணைப்பில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை வீடியோ கால் மூலமாக சந்தித்தார். இதற்காக அருண் ராஜ், முன்பே கரூருக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை தயார் செய்ததாகவும், அவர்களின் மூலம் விஜயுடன் வீடியோ கால் ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விஜய் அரசியல்

இதனால், கட்சியில் அருண் ராஜின் தாக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. மாறாக, இதுவரை விஜயின் முக்கிய ஆலோசகர்களாக இருந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் புஸ்ஸி ஆனந்த் குறித்து விஜயிடம் அதிருப்தி அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. கரூர் விவகாரம் தொடர்பாக இவர்கள் சில முக்கிய தகவல்களை மறைத்ததாக விஜய் வருத்தம் தெரிவித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும், ஜான் ஆரோக்கியசாமி பல முக்கிய முடிவுகளில் விஜயை தவறாக வழிநடத்தினார். இதனால் திமுகவுக்கு கரூரில் சாதகமான நிலைமை உருவானது என்கிறார்கள் தவெக வட்டாரங்கள். இதனைத்தொடர்ந்து, விஜய் ஜானை புறக்கணித்து, மாவட்டச் செயலாளர்களுடன் நேரடியாகப் பேச்சு நடத்த ஆரம்பித்துள்ளார்.

ஜான் ஆரோக்கியசாமி

இதனால் கட்சியின் இரண்டாம் கட்ட நிர்வாகிகள் உற்சாகத்தில் உள்ளனர். முதன்முறையாக ஜானின் ஆலோசனையின்றி முடிவு எடுத்துள்ளார் விஜய் என்கிறார்கள் கட்சித் தொண்டர்கள். மேலும், சில தலைவர்கள் ஜானை நோக்கி கடுமையான குற்றச்சாட்டுகளையும் முன்வைத்து வருகின்றனர். உதயநிதி ஸ்டாலினை விமர்சிக்கக் கூடாது, பிரச்சனை வந்தால் கட்சி துணை நிற்காது என்று தங்களை ஜான் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.

விஜய் முடிவுகள்

இதையடுத்து, இனி தன்னுடைய நெருங்கிய நம்பிக்கைக்குரியவர்களை இரண்டாம் கட்ட தலைவர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளார். முக்கிய நிர்வாகிகளான புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி, ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் பங்கு குறைந்து வருவதாகவும், விஜய் தற்போது கட்சியின் அனைத்து நடவடிக்கைகளையும் தனியாக கையாண்டு வருகிறார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தவெக பொருளாளர் வெங்கட்ராமனும், கொள்கை பரப்பு செயலாளர் அருண் ராஜும் தற்போது விஜயின் முக்கிய நம்பிக்கைக்குரியவர்களாக மாறியுள்ளனர். குறிப்பாக, வெங்கட்ராமன் தினமும் விஜயுடன் நீண்ட நேரம் ஆலோசனை நடத்துவதாகவும், இவர்மூலம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரின் ஆலோசனைகளும் விஜய்யிடம் சென்று சேருகின்றன என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+