அரசியல் எண்ட்ரிக்கு அடித்தளம்? 234 தொகுதி மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை
சென்னை: நடிகர் விஜய் இன்று தனது மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை பனையூரில் உள்ள இல்லத்தில் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் ஆலோசித்து வருகிறார்.
தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமான விஜய், சமீப காலமாக சினிமாவை தாண்டி பொது விவகாரங்களிலும் அக்கறை காட்டி வருகிறார். தனது படத்தில் சில அரசியல் பஞ்ச் வசனம் வைத்து பேசுவதோடு, ஊழல்கள் குறித்தும் பேசி அரசியல் வட்டாரத்திலும் கவனம் பெற்றுள்ளார். தனது மக்கள் இயக்கம் சார்பாக மாநிலம் முழுவதும் பல்வேறு நலத்திட்டங்களை அவ்வப்போது அவரது ரசிகர்கள் செய்து வருகின்றனர்.

ரத்த தானம் முகாம், பசியால் வாடுவோருக்கு உணவு வழங்குதல் உள்ளிட்ட பணிகளை அவரது விஜய் மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக செய்து வருகின்றனர். இது நடிகர் விஜயின் அரசியல் வருகைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், கடந்த மாதம் 17 ஆம் தேதி விஜய் தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவிகளுக்கு ஊக்கத்தொகை அளித்தாதோடு அவர்களுடன் புகைப்படம் எடுத்தார்.
விஜயின் இந்த செயல் அவர் அரசியலுக்கு வருவதை உறுதி செய்யும் விதமாகவே இருப்பதாக அரசியல் நோக்கர்கள் மத்தியில் சொல்லப்பட்டது. இந்த நிலையில், 234 தொகுதிகளில் இருந்து தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நடிகர் விஜய் சென்னைக்கு அழைத்து உள்ளார். அதன்படி சென்னை பனையூரில் உள்ள இல்லத்திற்கு காலையில் இருந்தே 234 தொகுதியில் இருந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் வர தொடங்கினர்.

தொடர்ந்து அவர்கள் அனைவருக்கும் மதியம் அறுசுவை உணவு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது விஜய் பனையூர் இல்லம் வருகை தந்தார். தொடர்ந்து விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தி வருகிறார். இதன் பின்னர், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் தனித்தனியாக புகைப்படமும் எடுத்துக் கொள்கிறார். நிர்வாகிகளுடனான ஆலோசனையின் போது அரசியல் குறித்தும் விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
சென்னையில் மின்வெட்டின் பின்னணி.. அமைச்சர் கருத்துக்கு திமுக தொழிற்சங்கம் திட்டவட்டமாக மறுப்பு -
திமுகவுடன் குதிரை பேரம் நடத்தியது யார்?.. எடப்பாடிக்கு செங்கோட்டையன் அடுக்கடுக்கான கேள்வி! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
தாய்வழி வந்த தங்கங்கள் எல்லாம்..மீண்டும் இணையும் அதிமுக கோஷ்டிகள்! கரங்கள் இணையும்..மனங்கள் இணையுமா? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
விஜய்யே பண்ணாலும் தப்பு தப்பு தான்.. குதிரை பேரத்தை நியாயப்படுத்தக் கூடாது! ஃபயர் மோடில் ஜோதிமணி!












Click it and Unblock the Notifications