இனி கிட்ட நெருங்கவே முடியாது.. ’Y' பிரிவு பாதுகாப்பு..ஓகே சொன்ன விஜய்! ஸ்டன் கன்னுடன் கமாண்டோ ரெடி!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் ஆன விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில் மார்ச் 14ஆம் தேதி முதல் சுழற்சி முறையில் ஸ்டன் கன், பிஸ்டல், மெஷின் கன் உள்ளிட்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் பாதுகாப்பு படை கமாண்டோக்கள் விஜய்க்கு பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.
தமிழ் திரையுலகின் நம்பர் ஒன் நடிகராக இருந்து தற்போது அரசியல்வாதி அவதாரம் எடுத்திருக்கிறார் விஜய். பரந்தூரில் விமான நிலையத்திற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்தித்தது விஜய்க்கு திருப்புமுனையாக அமைந்தது.

இதை அடுத்து களத்திற்கு வரவில்லை என்ற விமர்சனம் தவிடுபொடியானதால் உற்சாகத்தில் இருக்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். தொடர்ந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜய் செல்ல இருக்கிறார். அதே நேரத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட .முட்டை வீச்சு சர்ச்சை சமூக வலைதளங்களில் பலத்த விமர்சனங்களை பெற்றது.
குறிப்பிட்ட 'ஒரு நடிகரின்' ரசிகர்கள் இது தொடர்பாக பேசியதாக சர்ச்சை எழுந்தது. தற்போது தமிழக வெற்றிக் கழக பொதுக் குழுக் கூட்டம் மகாபலிபுரத்தில் நடந்த நிலையில், அடுத்து மீனவர்கள் பிரச்சினை, மேட்டூர் அனல் மின்நிலைய தொழிலாளர்களை விஜய் சந்திப்பது என அடுத்த நடவடிக்கைகளை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி இருக்கிறது மத்திய உள்துறை அமைச்சகம்.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த பிப்ரவதி மாதத்தில் வெளியாகி இருந்தது. இதன் மூலம் 8 முதல் 11 சிஆர்பிஎஃப் காவலர்கள் விஜய்க்கு பாதுகாப்பு வழங்க உள்ளனர். ஒரே நேரத்தில் இல்லாமல் சுழற்சி முறையில் விஜய்க்கு இவர்கள் பாதுகாப்பு வழங்குவார்கள் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருக்கிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு விஜய் தரப்பில் பாதுகாப்பு கேட்டு மத்திய அரசிடம் கடிதம் அளிக்கப்பட்டதாகவும், அது பரிசீலனையில் இருந்த நிலையில் உளவுத்துறை அறிக்கை அடிப்படையில் இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு பாதுகாப்பு வழங்கும் வீரர்களின் மூன்று பேர் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் மெஷின் கண்ணுடன் விஜயின் வீட்டில் பாதுகாப்பில் இருப்பர். மற்ற எட்டு பேர் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். 9 எம்எம் பிஸ்டல், ஸ்டன் கன்னுடன் விஜய்க்கு பாதுகாப்பு அளிப்பார்கள். ஏற்கனவே மூன்று வாரங்களுக்கு முன்பே விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போதும் விஜய்க்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கப்படவில்லை.
அவரது தனிப்பட்ட பவுன்சர்களே பாதுகாப்பு வழங்கி வந்தனர். இந்த நிலையில் விஜய்க்கு பாதுகாப்பு வழங்குவதில் தாமதம் ஏன் என விசாரித்த போது தற்போது உள்துறை அமைச்சகத்தின் பட்டியல் உள்ளூர் காவல்துறை மற்றும் பிற விசாரணை அமைப்புகளுடன் ஆய்வு செய்த பிறகு பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஆய்வு முடிந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் பாதுகாப்பை விஜய் ஏற்றுக்கொண்டுள்ளார். இந்த நிலையில் மார்ச் 14ஆம் தேதி முதல் அவருக்கு 11 மத்திய பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
பொண்ணு கிடைச்சாலும்.. புதன் கிடைக்காது! அரசியல் என்ட்ரி கொடுக்கும் ராகவா லாரன்ஸ்! தவெகவில் ஐக்கியம்? -
வெள்ளை அறிக்கை எப்போது வரும்.. நிதி அமைச்சர் மரிய வில்சன் அப்டேட் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
எம்ஜிஆர் பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு வெள்ளி வாள் வழங்கி தரிசனம் -
Moral போலீசா சிங்கப்பெண்கள் படை? முதல் திட்டமே சொதப்பல்! சரமாரியாக எழும் குற்றச்சாட்டுகள்! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அரசியல் சதுரங்கத்தில் சறுக்கிய விஜயதாரணி! ‘அமைச்சர்’ வாய்ப்பை கோட்டை விட்டாரா விளவங்கோடு சிங்கப்பெண் -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
தமிழக பள்ளிக்குள் சாதி, மத அடையாளங்களுக்கு இடமில்லை.. நேரடியாகவே சொன்ன அமைச்சர் ராஜ்மோகன்!












Click it and Unblock the Notifications