காமராஜரை கையில் எடுத்த நடிகர் விஜய்.. நாடார்கள் ஓட்டுக்கு குறி?.. ஏமாளிகள் அல்ல.. முத்து ரமேஷ் பளீர்
சென்னை: காமராஜரைப் பற்றி படிக்கச் சொன்ன விஜய் காமராஜர் பிறந்தநாளில் இரவு நேர பாடசாலைகளை தொடங்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. எத்தனையோ அரசியல் தலைவர்கள் இருக்கையில் காமராஜர் மீது நடிகர் விஜய்க்கு ஆர்வம் வந்தது ஏன் என்று நமது ஒன் இந்தியா அரசியல் யூடுயூப் சேனலுக்கு பிரத்யேக பேட்டி அளித்தள்ளார் தமிழ்நாடு நாடார் சங்கத்தின் தலைவர் முத்து ரமேஷ்.
விஜய் அரசியல்: நடிகர் விஜய் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை சந்தித்து பரிசளித்தார். அப்போது பேசும் போது காமராஜர், அம்பேத்கர், பெரியாரை படியுங்கள் என்று கூறினார். இந்நிலையில் நிர்வாகிகள் நடிகர் விஜய் 234 தொகுதிகளிலும் இரவு நேர பாடசாலையை காமராஜர் பிறந்தநாளான ஜூலை 15ஆம் தேதி தொடங்க நடிகர் விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி கண் திறந்த காமராஜர் பிறந்தநாள் தமிழ்நாடு முழுவதும் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில்தான் நடிகர் விஜய் தனது அரசியல் பயணத்தின் வழிகாட்டியாக காமராஜரை கையில் எடுத்துள்ளார். காமராஜர் மேல் விஜய்க்கு ஏன் தனி ஆர்வம் என்று நமது ஒன் இந்தியா அரசியல் சார்பாக கேள்விகளை முன் வைத்தோம்.
காமராஜர்: பெருந்தலைவர் காமராஜரின் புகழ் உலகமே அறியும். கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர். அவருடைய தியாகம்தான். அரசியலுக்கு வரவேண்டும் என்று நினைக்கும் எல்லோருடைய மனதிலும் காமராஜர்தான் நினைவுக்கு வருவார்கள். நேர்மையான, தூய்மையான ஆட்சியை வழங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் காமராஜரை போற்றுவார்கள். பொற்கால ஆட்சியை கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காமராஜர் நினைவுக்கு வருவார்கள். இன்று நேற்றல்ல பல ஆண்டு காலமாகவே நடிகர் விஜய் காமராஜரை பின்பற்றி வருகிறார்.
பொற்கால ஆட்சி: அரசியலுக்கு வந்து நல்லது செய்ய வேண்டும் என்று நினைக்கும் நடிகர் விஜய் பெருந்தலைவர் காமராஜரை முன்மாதிரியாக நினைக்கிறார். இது ஒட்டுமொத்த தமிழர்களும் வரவேற்க வேண்டும். ஒருவர் ஒரு தலைவரை புகழ்கிறார் என்றால் அதற்கான தகுதி அந்த தலைவருக்கு இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் பெருந்தலைவர் காமராஜர், தமிழ்நாட்டிற்கும்,இந்தியாவிற்கும் சேவை செய்தவர் என்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை. நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி 9 ஆண்டுகள் சிறை சென்றவர். 9 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சியை கொடுத்தவர் காமராஜர்.

நாடார் சமூகம்: தமிழ்நாட்டை ஆண்ட திமுக, அதிமுக கட்சியினர் காமராஜருக்கு புகழ் வகையில் எதுவுமே செய்யவில்லை என்று காமராஜர் தொண்டர்களுக்கும். நாடார் சமூகத்தினர் மத்தியிலும் திராவிட கட்சிகள் மீது நம்பிக்கையில்லை என்றுதான் சொல்ல வேண்டும். கருணாநிதிக்காக பல கோடியில் பேனா, கலைஞர் கோட்டம் என தமிழ்நாடு முழுவதும் பல நினைவிடங்களை கட்டுகின்றனர். காமராஜர் அவர்கள் கல்விக்காக பல திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தவர். அவருடைய ஆட்சியைப்பற்றி தெரிந்தவர்களுக்கு மட்டுமே தெரியும். அப்படிப்பட்ட தலைவருக்கு தமிழ்நாட்டில் மரியாதை இல்லை.
இளம் தலைமுறையினர்: காமராஜருக்கு ஆய்வு இருக்கை அமைக்க வேண்டும் என்று பல ஆண்டு கோரிக்கை உள்ளது. அதை யாரும் செயல்படுத்தவில்லை. காமராஜர் பிறந்தநாளில் பள்ளி மாணவிகளுக்கு ரூ. 1000 நிதி உதவி கொடுப்பதாக இருந்தது. காமராஜரை இன்றைக்கு இருட்டடிப்பு செய்கின்றனர். ஆனால் நடிகர் விஜய் காமராஜரின் புகழை உயர்த்தும் வகையில் பேசி வருகிறார். விஜய் ரசிகர்கள் இன்றைக்கு இளம் தலைமுறையினர் பல கோடி பேர் உள்ளனர். அவர்களுக்கு காமராஜரை கொண்டு போய் சேர்த்த பெருமை நடிகர் விஜய்க்கு சேரும்.

நாடார் வாக்குகள்: காமராஜரைப்பற்றி புகழ்ந்து பேசும் விஜய் நாடார் சமுதாய வாக்குகளை குறி வைக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது என்ற கேள்வி முன் வைக்கப்பட்ட போது, நாடார் சமுதாய வாக்குகளை திமுக, அதிமுக என அனைவருமே குறிவைக்கத்தான் செய்வார்கள். நாடார் சமுதாய மக்களுக்கு என்ன செய்தார்கள் என்றும் பார்க்க வேண்டும். விஜய் வந்தாலும் அவருடைய செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்றும் பார்க்க வேண்டும்.
ஏமாளிகள் அல்ல: காமராஜர் மீது பக்தி கொண்டு அவரது புகழை பரப்பும் வகையில் இரவு பாடசாலைகளை தொடங்க விஜய் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. அதனை நாங்கள் நிச்சயம் வரவேற்போம். அவர் அரசியலுக்கு வருவதையும் வரவேற்கிறோம். நாடார்கள் ஏமாளிகள் அல்ல என்றும் முத்து ரமேஷ் தெரிவித்துள்ளார். விஜய் ஆட்சிக்கு வந்தால் நாடார்களுக்கு நன்மை நடைபெறும் என்று தெரிந்தால் ஆதரிப்பார்கள். ஆனால் திமுக அதிமுக போல நடிகர் விஜய்யும் ஏமாற்று அரசியல் செய்தால் ஆதரிக்க மாட்டார்கள் என்றும் முத்து ரமேஷ் கூறியுள்ளார்.
-
விஜய்யின் "கழுகு பார்வை"! சல்மான், ஷாரூக் டோம் குரூஸ்ஸின் ஃபேவரைட் பவுன்சர்! யார் இந்த நயீம் மூசா? -
ரொக்கமாக சம்பளம் வாங்கி.. வரி கட்டாமல் மறைத்த விஜய்.. வருமான வரித்துறை கேஸ்.. விஜய் மேல்முறையீடு -
இந்த 2ல் ஒன்று நடந்தால்.. போச்சு.. விஜய் வைக்க போகும் செக் யாருக்கு? யோசிக்க முடியாத கோணமா இருக்கே? -
அனுபவம் இல்லாதவரிடம் நாட்டை கொடுக்காதீங்க.. பெரம்பூருக்கே போய் விஜய்யை அட்டாக் செய்த திவ்யா சத்யராஜ் -
ரோடு ஷோவை கடைசி நேரத்தில் ரத்து செய்துவிட்டு கோவை திரும்பிய விஜய்.. தவெக தொண்டர்கள் கடும் ஏமாற்றம் -
தொகுதி மறுவரையறை நடந்தால்.. தமிழக மக்களின் குரல் நாடாளுமன்றத்தில் ஒலிக்காமல் போகும்! விஜய் கண்டனம் -
பவன் பாதி.. ஜெகன் மீதி! அரசியலிலும் ரீமேக்கா? வாட் ப்ரோ.. விஜயை வெளுக்கும் நெட்டிசன்கள்! என்னாச்சு? -
Vijay: சைக்கிள் ஓட்டியபோது ரசிகர் எறிந்த பூக்கள்! வெடிகுண்டுனு நெனச்சி கேரவனுக்குள் ஓடினாரா விஜய்? -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
கரூர் கூட்ட நெரிசலில் ஒரே மாதத்தில் பறி போன இரு உயிர்கள்! விரைவில் வெளியாகும் கள அறிக்கை? -
₹8000 கூப்பனால் மகிழும் மக்கள்.. நல்ல தலைவருக்கு இது அடையாளம்! விஜயை வேற மாதிரி வறுத்தெடுத்த ரோகிணி -
விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த பிக் பாஸ் தினேஷ்.. அதற்கு அவர் சொன்ன காரணம் தான் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications