“ஷாக்”.. விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு.. கவலையோடு சொன்ன மகன்! தேமுதிக தொண்டர்களுக்கு அதிர்ச்சி
சென்னை: தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் உடல்நிலை பின்னடைவாக இருப்பதாக அவரது மகன் விஜயபிரபாகரன் தெரிவித்து இருக்கிறார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன், "விருதுநகருக்கு சென்று குலதெய்வ வழிபாடு செய்தேன். அது முடிந்த பிறகு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக வந்தேன். அதிமுக கட்சிக்கு உள்ளேயே பிரச்சனை பெரிதாக இருந்துகொண்டு இருக்கிறது.

நான் பெரிய ஆளா? நீ பெரிய ஆளா? என்பதாகவே இந்த மாநாட்டை நான் பார்க்கிறேன். மற்ற கட்சிக்கு தேமுதிகவில் இருந்து விலகி செல்பவர்கள் காசு வாங்கிவிட்டு செல்கிறார்கள். அவர்கள் மீது எப்படி எங்களுக்கு மதிப்பு வரும். இங்கு இருக்கும் வரை அண்ணி என்றும் தம்பி என்றும் சொல்வார்கள். வேறு கட்சிகளுக்கு சென்றபிறகு அந்நியவாதியாக தெரிவார்கள்.
தேமுதிகவில் இருப்பவர்கள் மட்டும் கட்சி தாவவில்லை. அதிமுகவில் இருந்து திமுகவுக்கு சென்று தற்போது சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜி தற்போது சிறைக்கு சென்று இருக்கிறார். தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் நீட் தேர்வு அமலில் உள்ளது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்யாமல் மாணவர்களுக்கு சரியானதை சொல்ல வேண்டும்.
தமிழ்நாட்டை விட பின் தங்கிய மாநிலங்களில் கூட நீட் தேர்வால் உயிரிழப்பது குறைவாக இருக்கிறது. நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக அரசு பொய்யான வாக்குறுதியை கூறுவதால்தான் மாணவர்களுக்கு மேலும் அழுத்தம் வருகிறது.

விஜயகாந்தின் உடல்நிலை பின்னடைவாக உள்ளது. ஆனால், அவர் 100 ஆண்டுகள் வாழும் அளவுக்கு நன்றாக இருப்பார். முன்பை போன்று அவர் பேசவும், எழுந்து வருவும் வைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். உங்களை போன்றே நாங்களும் அவர் நலமுடன் வருவார் என்று நம்பிக்கை வைத்து உள்ளோம்.
இன்று வரை விஜயகாந்த் நலமாகவே இருந்து வருகிறார். "முடியாது என்பது முட்டாளுக்கு சொந்தமானது" என்பதே விஜயகாந்தின் மந்திரம். எங்களின் தாரக மந்திரமாகவும் அதையே சொல்கிறோம். எனது கனவை ஓரம்கட்டிவிட்டு தொண்டர்களுக்காகவே ஓடோடி வந்து வேலை செய்து வருகிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
-
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்!












Click it and Unblock the Notifications