நினைத்தது நடந்தது..ஆனந்தை ஓரம் கட்டிய ஆதவ் அர்ஜுனா? புலம்பும் புஸ்ஸி ஆதரவாளர்கள்.. போட்டோவை பாருங்க!
சென்னை: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் சென்னையில் நேற்று நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிந்ததால் உற்சாகத்தில் இருக்கிறது விஜய் தரப்பு. அதே நேரத்தில் கட்சிக்குள்ளேயே அது சில சர்ச்சைகளையும் ஏற்படுத்தி உள்ளது என்கின்றனர் கட்சி நிர்வாகிகள். குறிப்பாக கட்சியில் புதிதாக சேர்ந்த ஆதவ் அர்ஜுனா முழுக்க முழுக்க தன்னையே வெளிக்காட்டி கொண்டதாகவும், புஸ்ஸி ஆனந்தை ஓரம் கட்டியதாக கூறுகின்றனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக நிகழ்ச்சி தொடர்பாக ஆதவ் அர்ஜுனா வெளியிட்ட புகைப்படங்களில் புஸ்ஸி ஆனந்தின் புகைப்படம் இடம் பெறவில்லை மாறாக பொருளாளரின் புகைப்படம் இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் எனவும் அதில் விஜய் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

நேற்று சென்னை ராயப்பேட்டையிலுள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து 15க்கும் மேற்பட்ட ஜமாத் நிர்வாகிகள், கலந்து கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்காக 2000 பேருக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் 65, வெஜ் சமோசா, நோன்பு கஞ்சி, உலர் பழங்கள் ஆகியவை தயார் செய்யப்பட்டு தயாராக இருந்தது தொடர்ந்து. ஒய்சிஎம்சிஏ மைதானத்தில் ஏராளமான நிர்வாகிகளும் இஸ்லாமியர்களும் குவிய ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல அதிக அளவில் ரசிகர்களும் குவிந்தனர். நேற்று மாலை சரியாக 5.20 மணிக்கு விஜய் அங்கு வந்தார். இஸ்லாமியர்களை போல தலையில் தொப்பி அணிந்து கைலி அணிந்து படி ரசிகர்களையும் கட்சியினரையும் பார்த்து உற்சாகமாக கையசைத்தபடி வந்த விஜய் இஸ்லாமியர்கள் அழைத்துச் சென்றனர்.

குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டிருந்த நிலையில் 5000க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்தனர். தொடர்ந்து துவா செய்யப்பட்டு நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் நோன்பு கஞ்சி பேரிச்சை ஆகியவற்றை சாப்பிட்டு நோன்பை முடித்துக் கொண்டார் விஜய். தொடர்ந்து நடைபெற்ற தொழுகையிலும் விஜய் கலந்து கொண்டார். பிறகு திறந்த பிரச்சார வேனில் ரசிகர்களையும் கட்சி தொண்டர்களையும் பார்த்து கை அசைத்தபடி விஜய் சென்றார் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக அமைந்ததால் விஜய் தரப்பு உற்சாகத்தில் இருக்கிறது. சிலர் தங்களை அனுமதிக்கவில்லை, இஸ்லாமியர்கள் அல்லாதவர்கள் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்கள் என பேட்டி கொடுத்தாலும், நேற்று தன்னைப் பற்றியே அனைத்து சேனல்களும் பேசியதால் விஜய் தரப்பு மகிழ்ச்சி அடைந்திருக்கிறது. மேலும் முதல் முறையாக சென்னையில் மையப் பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் கலந்து கொண்டதும் கவனிக்கத்தக்கது.

பனையூரை விட்டு விஜய் வெளியே வர மாட்டார் என விமர்சனங்கள் இருந்த நிலையில் அதனை தவிடு பொடி ஆக்கி இருக்கிறார். இந்த நிலையில் தான் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி கட்சிக்குள் சில புகைச்சல்களை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் வந்தது முதல் சென்றது வரை நேற்று ஊடகங்களில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. தமிழக வெற்றி கழகம் வழங்கிய வீடியோ லிங்க் தான் அனைத்து ஊடகங்களுக்கும் லைவ் கவரேஜ் வழங்கப்பட்டது. அதில் ஆதவ் அர்ஜுனாவின் பிஆர் குழு வீடியோ வேலைகளை பார்த்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
பெரும்பாலும் விஜய் மற்றும் பிற இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை சுற்றிய கேமரா ஆங்கிள் இருந்தது. பின்னணியில் தவெக பொதுச் செயலாளர் ஆனந்தின் குரல் மட்டுமே கேட்டது. சில நேரங்களில் அதுவும் அப்போது ம்யூட் செய்யப்பட்டது. தொடர்ந்து ஆதார் அர்ஜுனா நிகழ்ச்சி குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார். அதில் விஜய் இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள், ஆதவ் அர்ஜுனா ஆகியோரின் புகைப்படங்கள் இருந்தது. ஒரே ஒரு புகைப்படத்தில் தவெக பொருளாளரின் புகைப்படமும் இருந்தது. ஆனால் புஸ்ஸி ஆனந்துடன் தான் இருக்கும் ஒரு புகைப்படத்தை கூட ஆதவ் அர்ஜுனா வெளியிடவில்லை.

ஏற்கனவே அர்ஜுனாவில் வருகையால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் நேற்று அதை வெளிப்படுத்தும் வகையிலேயே புஸ்ஸி ஆனந்த் ஓரம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பல நிகழ்ச்சிகளில் ஆதவ் அர்ஜுனா தனது நிறுவனத்தின் மூலம் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். மேலும் ஆதவ் அர்ஜுனா பேன்ஸ் கிளப் உள்ளிட்ட எக்ஸ் பக்கங்கள் ஆதவ் அர்ஜுனா குறித்து அதிகமாக செய்திகளை பகிர்ந்து வருகிறது. விஜய் அடுத்து தான் தான் என்பது போல ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் இருக்கிறது என புலம்புகின்றனர் புஸ்ஸி ஆனந்தின் ஆதரவாளர்கள்.
-
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
அண்ணா அறிவாலயத்தில் ஆட்டம் போட்ட மகளிரணி.. ரீல்ஸ் போடச் சொல்லும் ஸ்டாலின்! தவெகவைப் பார்த்து சூடு? -
“அமைச்சரவையில் இடம்பெறுவோம்.. ஆனால்!” நிலைப்பாட்டை விளக்கிய.. சிபிஎம், சிபிஐ தலைவர்கள்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
அரசுப் பேருந்து 1 km ஓடினால் ரூ.53 நட்டம்.. தனியார்மயமாகிறதா போக்குவரத்து துறை? மரிய வில்சன் சிக்னல் -
போக்குவரத்து துறைக்குள் ஒளிந்திருக்கும் பூதம்.. வெள்ளை அறிக்கையில் வெளிவந்த உண்மை! -
கதறிய கழகங்கள்.. தட்டித் தூக்கிய தவெக! விஜய்யின் பெருவெற்றிக்கு காரணம் என்ன? உங்க கருத்தை சொல்லுங்க! -
கலக்கத்தில் கரூர்.. தவெகவுக்கு தாவும் விஜயபாஸ்கர்? அவரே சொன்ன விளக்கம்! குஷியான அண்ணனின் விழுதுகள்! -
4 தொகுதிகள் இடைத்தேர்தல் அறிவிப்புக்கு தடை கோரி வழக்கு.. ராஜினாமா செய்த எம்.எல்.ஏக்களுக்கு சிக்கல்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா












Click it and Unblock the Notifications