சிக்ஸர் விளாசிய விஜய்.. இன்று உலக பட்டினி தினம்.. தமிழகம் பூராவும் அன்னதானம்.. கவனித்த திராவிட கட்சி
சென்னை: உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்று அன்னதானம் வழங்கப்பட உள்ளது. இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய் பிறப்பித்திருக்கிறார்.
சமீபத்தில்தான் நடிகர் விஜய் கட்சியை துவங்கியிருக்கிறார்.. இந்த நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை என்றும், வரப்போகும் 2026 -ம் ஆண்டில் தான் போட்டியிடப்போவதாகவும் கூறியிருக்கிறார்.

உறுப்பினர்கள்: அதற்கேற்றவாறு, 2 மாதங்களுக்கு முன்பு 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனத்தை அக்கட்சி செலுத்தி வருகிறது. அத்துடன், தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பை உறுதிப்படுத்தும் பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன.
இப்படிப்பட்ட சூழலில், இன்றைய தினம் அதாவது மே 28ம் தேதி உலக பட்டினி தினம் அனுசரிக்கப்படவுள்ளது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் இன்றைய தினம், தேதி அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க, நடிகர் விஜய் உத்தரவிட்டிருக்கிறார். இதுகுறித்து தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்தும் 2 நாட்களுக்குமுன்பு ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார்.
விஜய் அதிரடி: அதில், "தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின்படி, பட்டினி இல்லாத உலகத்தை ஏற்படுத்த வேண்டும். அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, உலக பட்டினி தினத்தில் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். கட்சி நிர்வாகிகள் உரிய தேர்தல் வழிகாட்டு விதிமுறைகளை பின்பற்றி, அன்னதானம் வழங்கி, மக்கள் நலப்பணியில் ஈடுபட வேண்டும்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
அதன்படி, இன்று காலையிலேயே இதற்கான ஏற்பாடுகளை விஜய் கட்சி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.. பட்டினி இல்லா உலகம் வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டிருக்கும் இந்த அறிவிப்பு, பொதுமக்களின் ஆதரவை பெற்று வருகிறது..
சட்ட உதவிகள்: அதுமட்டுமல்ல, ஏழை, எளியோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் புகார் அளிப்பதற்கும், சட்ட உதவி அளிப்பதற்கு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் 2 வழக்கறிஞர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று விஜய் கட்சி ஏற்கனவே அறிவித்திருந்ததையும், தமிழக அரசியல் கட்சிகள் கவனிக்காமல் இல்லை. மொத்தத்தில் விஜய்யின் நடவடிக்கைகள் பலரையும் கவனிக்க செய்து வருகிறது.
அதேசமயம், இன்று ஒருநாளில், அதுவும் ஒருவேளைக்கு மட்டும் அன்னதானம் வழங்குவதைவிட, ஏழைகள் தொழில் துவங்கவும், அவர்களுக்கு நிரந்தரமாக உணவு கிடைக்கவும் தேவையான ஏற்பாடுகளை செய்தால் நல்லா இருக்குமே என்று பலரும் தங்கள் கருத்துக்களை இணையத்தில் எழுப்பி வருகிறார்கள்...!!
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications