ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்!
சென்னை: 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், சில அமைச்சர்களின் செயல்பாடுகள் கட்சிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தியதாக திமுக கள ஆய்வுக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அமைச்சர் சேகர்பாபுவின் செயல்பாடுகள் தொடர்பாகவும் கட்சிக்குள் கடும் அதிருப்தி நிலவியதாகவும், அதனால் தான் கொளத்தூரில் முதல்வராக இருந்த ஸ்டாலினே தோற்றதாக கள ஆய்வுக்குழு அறிக்கை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்பாராத தோல்வியை சந்தித்தது. தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை தக்கவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கையில் இருந்த கட்சிக்கு இந்த தோல்வி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தோல்விக்கான காரணங்களை கண்டறிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாநிலம் முழுவதும் கள ஆய்வு மேற்கொள்ள 36 பேர் கொண்ட 19 குழுக்களை அமைத்தார். ஒவ்வொரு குழுவிலும் இரண்டு பேர் இடம்பெற்றனர்.
திமுக தோல்வி
இந்த நிலையில், அவர்கள் மாவட்டங்கள் மற்றும் தொகுதிகளுக்கு நேரில் சென்று கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களை சந்தித்து கருத்துக்களை சேகரித்தனர். இந்த ஆய்வின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட விரிவான அறிக்கை சமீபத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் ஒப்படைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அந்த அறிக்கையில் இடம்பெற்ற சில தகவல்கள் தற்போது கட்சிக்குள் விவாதப் பொருளாக மாறியுள்ளன.
கள ஆய்வுக்குழு
அதன்படி, கூட்டுறவு சங்கங்கள் மற்றும் ஆவின் போன்ற முக்கிய அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாதது கட்சி நிர்வாகிகளிடையே அதிருப்தியை உருவாக்கியதாக கூறப்பட்டுள்ளது. நீண்ட காலமாக கட்சிக்காக உழைத்த நிர்வாகிகள் வாய்ப்பு கிடைக்காமல் ஏமாற்றமடைந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏற்பட்ட அதிருப்தி குறித்து அறிக்கையில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சேகர்பாபு
அமைச்சர் சேகர்பாபு, அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்தவர்களுக்கும், தனக்கு நெருக்கமானவர்களுக்கும் மட்டுமே முக்கிய பொறுப்புகள் வழங்கியதாக பல நிர்வாகிகள் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் நீண்டகாலமாக கட்சியில் பணியாற்றிய நிர்வாகிகள் புறக்கணிக்கப்பட்ட உணர்வுக்கு ஆளானதாகவும், அதுவே தொகுதி அளவில் கட்சியின் ஒற்றுமையை பாதித்ததாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொளத்தூர்
அதன் தாக்கம் தேர்தலிலும் எதிரொலித்ததாகவும், திமுகவின் முக்கிய கோட்டையாக கருதப்பட்ட கொளத்தூரில்கூட கடுமையான எதிர்ப்பை கட்சி சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. சில இடங்களில் கட்சி நிர்வாகிகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தேர்தல் பணிகளில் நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தியதாகவும் ஆய்வுக்குழு குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மக்கள் அதிருப்தி
அதேபோல், பொதுமக்கள் அமைச்சர்களை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை தெரிவிக்க முடியாத சூழல் இருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமைச்சர்களின் உதவியாளர்களே பல நேரங்களில் அணுக முடியாத தடையாக இருந்ததாக மக்கள் புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அரசு மீது இருந்த அதிருப்தி நேரடியாக திமுகவுக்கு எதிரான மனநிலையாக மாறியதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மகளிர் உரிமைத் தொகை
மேலும் தேர்தல் நேரத்தில் அரசு நிர்வாகமும் கட்சி நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்படவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. அமைச்சர்கள் ஒரு பக்கம், கட்சி நிர்வாகிகள் மற்றொரு பக்கம் செயல்பட்டதால் வாக்காளர்களுடன் தொடர்ச்சியான தொடர்பு ஏற்படுத்த முடியாமல் போய்விட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகளிர் உரிமைத் தொகை திட்டமும் தேர்தலில் எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை என்று ஆய்வுக்குழு கருத்து தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்க்கு செல்வாக்கு
திட்டத்தின் கீழ் பல பெண்களுக்கு உதவித்தொகை கிடைக்காததால் அவர்கள் மத்தியில் அதிருப்தி உருவானதாகவும், அதனை எதிர்க்கட்சிகள் திறம்பட பயன்படுத்தியதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரத்தில், பெண்கள் மத்தியில் விஜய்க்கு இருந்த செல்வாக்கை திமுக தலைமையும் மாவட்ட நிர்வாகிகளும் சரியாக மதிப்பிடத் தவறிவிட்டனர் என்றும் ஆய்வுக்குழு கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இளைஞர் அணி
இளம் வாக்காளர்கள் மற்றும் பெண்கள் வாக்காளர்களிடம் ஏற்பட்ட மாற்றத்தை கட்சி முழுமையாக கணிக்கவில்லை என்பதும் முக்கிய காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இளைஞர் அணியின் திறனை முழுமையாக பயன்படுத்தாததும், கட்சியில் பொறுப்பில்லாமல் இருந்த மூத்த நிர்வாகிகளை தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தாததும் தோல்விக்கான காரணங்களாக குறிப்பிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக தோல்விக்கான காரணங்களை ஆராயும் இந்த அறிக்கை கட்சியின் எதிர்கால அரசியல் திட்டங்களுக்கு முக்கிய வழிகாட்டியாக இருக்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications