நடிகர் கார்த்தி அரசியலுக்கு போகலாம்! கிளப்பிவிட்ட நடிகர் விக்ரம்! பெரிய கும்பிடு ஒன்று போட்டு எஸ்கேப்!
சென்னை: அரசியலுக்கு செல்வதற்கான தகுதி நடிகர் கார்த்தியிடம் நிறையவே உள்ளதாக கூறி, பொன்னியின் செல்வன் 2 திரைப்பட புரோமோஷன் நிகழ்ச்சியில் பரபரப்பை ஏற்படுத்தினார் நடிகர் விக்ரம்.
நடிகர் விக்ரம் பேசுவதை கேட்ட கார்த்தி, ஐயையோ ஆள விடுங்கப்பா சாமி என்பது போல் ஒரு ரியாக்ஷனை கொடுத்துவிட்டு பெரிய கும்பிடு ஒன்று போட்டார்.
இதனால் பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் மொத்த டீமும் விழுந்து விழுந்து சிரித்தது.

நடிகர் கார்த்தி மேடையில் பேசினார் என்றால் தமிழ் உச்சரிப்பு பிரமாதமாக இருக்கும் என்று புகழ்ந்த நடிகர் விக்ரம், எல்லோருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்ற மனதுக்கு சொந்தக்காரர் கார்த்தி எனக் குறிப்பிட்டார்.
நடிகர் விக்ரம் கூறியதை போல் நடிகர் கார்த்தி ஏற்கனவே பல்வேறு அறப்பணிகளில் தன்னை ஈடுபடுத்தி வருவது கவனிக்கத்தக்கது. குறிப்பாக உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பின் மூலம் விவசாயிகளுக்கு பல்வேறு உதவிகளை சத்தமின்றி செய்து வருகிறார்.
அதுமட்டுமின்றி தனது அண்ணன் நடிகர் சூர்யாவுடன் இணைந்து அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை எளிய மாணவர்களின் கல்விச் செலவுகளையும் எந்த விளம்பரமும் இல்லாமல் கவனித்து வருகிறார்.
தற்போது நடிகர் சங்கப் பொறுப்பில் உள்ள இவர் நலிந்த கலைஞர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார். இதன் காரணமாக தான் அவரை அரசியலுக்கு செல்லத் தகுதியானவர் என நடிகர் விக்ரம் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார்.
நடிகர் கார்த்தியை பொறுத்தவரை அவருக்கு நேரடியாக அரசியல் ஆர்வம் இல்லாவிட்டாலும் கூட அரசியல் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உதாரணத்துக்கு அண்மையில் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட தமிழக வேளாண் பட்ஜெட்டை அலசி ஆராய்ந்து படித்து பார்த்த கார்த்தி, தமிழக அரசை பாராட்டியதோடு இன்னும் சேர்க்க வேண்டிய அம்சங்கள் குறித்தும் கோரிக்கை விடுத்திருந்தார்.
-
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்குச் சென்ற திருமாவளவன்.. காரணம் இதுதானாம்! -
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
சரண்டரான சண்முகம்.. எடப்பாடி கைக்கு போன ‘கீ’.! உச்சகட்ட டென்சனில் விழுப்புரம்.. தவெகவில் ஐக்கியம்? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications