நானும் அரசியல்வாதி தான்! விஜய் ரசிகர் என்பதில் எனக்கு பெருமை! ஓபனாக பேசிய நடிகர் விஷால்!
சென்னை: நடிகர் விஜயின் ரசிகர் என்பதில் தனக்கு பெருமை என்றும் விஜய் முதலில் அரசியலுக்கு வரட்டும் அதன்பிறகு அது குறித்து பேசுவோம் எனவும் தெரிவித்துள்ளார் நடிகர் விஷால்.
அரசியலை பொறுத்தவரை அதனை ஏதோ தனித்துறையை போல் பார்க்கக் கூடாது என்றும் நாம் ஒவ்வொருவரும் அரசியல்வாதி தான் என்றும் அந்த வகையில் தாமும் அரசியல்வாதி எனவும் விஜயின் அரசியல் என்ட்ரி குறித்த கேள்விக்கு மழுப்பலாக பதில் அளித்தார் விஷால்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். கடைசி வரை நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றியோ வந்தால் அவரை ஆதரிப்பது குறித்தோ மறந்தும் வாய் திறக்கவில்லை நடிகர் விஷால். தாம் நடிகர் ஆவதற்கு முன்பிருந்தே விஜயின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்த்துவிடுவேன் எனக் கூறியுள்ளார்.
விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகம் ஆவது உள்ளபடியே தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் தனக்குள் இருந்த இயக்குநர் கனவை விஜயின் மகன் மீண்டும் தட்டி எழுப்பியிருப்பதாக விஷால் தெரிவித்துள்ளார். தாமும் இயக்குநராக போவதாக விஷால் அறிவித்துள்ளார்.
நடிகர் விஷாலை பொறுத்தவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் லயோலா கல்லூரியில் ஒன்றாக படித்தவர். இருவரும் வாடா போடா என பேசிக்கொள்ளும் அளவுக்கு நெருக்கமானவர்கள். இதனிடையே விஷாலிற்குள் அரசியல் ஆசை இருப்பதும் அவ்வப்போது அது எட்டிப்பார்ப்பதும் குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே கடந்த 2017 ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நடிகர் விஷால் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு அது கடைசி நேரத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications