மால டும் டும்! மஞ்சர டும் டும்! கல்யாண தேதி அறிவித்ததும் விஷால் சொன்ன பஞ்ச்! முகத்தில் பூத்த வெட்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மேல இருக்கு சாமி, கீழே இருக்கு பூமி, எல்லோருக்கும் நன்றி, வணக்கம் என நடிகர் விஷால், யோகிடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனது திருமண அறிவிப்புக்கு பிறகு பேசியிருந்தார்.

vishal dhanshika

நடிகர் விஷால் செல்லமே, சண்டக் கோழி, தாமிரபரணி உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமடைந்தார். இவர் திமிரு, ஆம்பள, பூஜை, மதகஜராஜா, மருது, சண்டக்கோழி 2, இரும்புத்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் தயாரிப்பாளர் ஜி.கே. ரெட்டியின் மகனாவார். தெலுங்கரான இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தார். கல்லூரி படிப்பை முடித்ததும் நடிகர் அர்ஜுனிடம் வேதம், ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியிருந்தார். இவர் இதுவரை 20 படங்களில் நடித்துள்ளார்.

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல்

சென்னையில் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியின் சட்டசபை உறுப்பினராக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு அந்த தொகுதி காலியாக இருந்தது. இதையடுத்து அந்த தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிட 2017ஆம் ஆண்டு விஷால் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவருடைய மனுவை சரியாக பூர்த்தி செய்யாததால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.

சமூக பிரச்சினைகள்

இதைத் தொடர்ந்து அவ்வப்போது சமூக பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வந்த விஷால், அண்மையில் நடந்த தேர்தலுக்கு சைக்கிளில் சென்று வாக்களித்தார். இவர் சாப்பிடும் போது சாமி கும்பிடுவது வைரலானது. இதை யோகி பாபு உள்ளிட்டோர் கிண்டல் கூட செய்திருந்தனர்.

அனிஷா ரெட்டியுடன் நிச்சயதார்த்தம்

2019 ஆம் ஆண்டு அனிஷா ரெட்டி என்பவருடன் விஷாலுக்கு நிச்சயதார்த்தம் ஆனது. ஆனால் அது திருமணம் வரை செல்லவில்லை. இந்த நிலையில் கடந்த 2023 ஆம் தேதி டிசம்பர் மாதத்தில் வெளிநாட்டில் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக விஷால் நடந்து செல்வதும் போலவும் அவரை வீடியோ எடுத்தவுடன் தலையை மறைத்துக் கொண்டு ஓடியதாகவும் ஒரு வீடியோ பரவியது. இது அவரா என தெரியவில்லை.

மதகஜராஜா

இந்த நிலையில் 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் 12 ஆண்டுகள் கழித்து அண்மையில் வெளியானது. இதற்கு முன்னர் நடந்த ஒரு விழாவுக்கு நடிகர் விஷால் வந்திருந்த போது பார்வையாளர்கள் எல்லாம் அதிர்ந்து விட்டனர். விஷாலா இது என்று!

மைக்கில் பேசிய போது கைகளில் நடுக்கம்

ஒரு கட்டத்தில் அவரால் நிற்கக் கூட முடியவில்லை. மேலும் அவர் மைக்கில் பேசிய போது கூட கைகள் நடுங்கின. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. அவர் குடிப்பழக்கத்தால்தான் இது போன்று நடுக்கம் ஏற்பட்டதாக பலர் விமர்சித்தனர். மேலும் இது போல் உடல்நலம் சரியில்லாமல் விஷால் இருப்பது சுந்தர் சி-க்கும் , குஷ்புவுக்கும் தெரிந்திருந்தும் அவரை வரவழைத்து அவரது நடுக்கத்தை ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டிவிட்டனரே என்றும் விமர்சனங்கள் எழுந்தன.

மிஸ் கூவாகத்தில் மயக்கம்

அது போல் கடந்த வாரம் மிஸ் கூவாகம் நிகழ்வில் விஷால் கலந்து கொண்ட போது அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் பெரும் சர்ச்சை எழுந்தது. கடந்த இரு நாட்களுக்கு முன்பு மதுரை மீனாட்சி அம்மனை வந்து தரிசித்துவிட்டு அங்கிருந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.

4 மாதத்தில் திருமணம்

இந்த நிலையில் "நான் ஒரு பெண்ணை காதலிப்பதாகவும் அவரை 4 மாதங்களில் திருமணம் செய்து கொள்வேன். அவர் யார் என்பதை விரைவில் அறிவிப்பேன். ஆகஸ்ட் 15 இல் நடிகர் சங்க கட்டடம் திறப்பு விழா நடைபெறுகிறது. இது முடிந்ததும் அடுத்த முகூர்த்தத்தில் என் திருமணம் நடக்கும்" என்றார்.

சாய் தன்ஷிகா அறிவிப்பு

இந்த நிலையில் அவருக்கு சாய் தன்ஷிகாவுடன் காதல் என சொல்லப்பட்டது. இது குறித்து இன்று நடைபெறும் யோகிடா இசை வெளியீட்டு விழாவில் அறிவிக்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அதன்படி தன்ஷிகா பேசும் போது தனக்கும் விஷாலுக்கும் வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் நடைபெறுகிறது என அறிவித்தார். உடனே அங்கிருந்தவர்கள் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

விஷால் வைத்த பஞ்ச்

அவரை தொடர்ந்து விஷால் பேசுகையில், மேல இருக்கு சாமி, கீழே இருக்கு பூமி, எல்லோருக்கும் நன்றி, வணக்கம் என பேசி முடித்தார். தன்ஷிகா திருமணம் குறித்து அறிவித்த போது விஷால் சிரித்தபடியே வெட்கப்பட்டுக் கொண்டிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+