'கணவரை இழந்த பொண்ணு மாதிரி வாழ்க்கை'- சீமான் செட்டில் செய்தாரா?வீரலட்சுமியை மிரட்டும் விஜயலட்சுமி!
சென்னை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விவகாரத்தில் பணம் கொடுத்து செட்டில்மென்ட் நடந்துவிட்டதாக தமிழர் முன்னேற்றப்படை தலைவர் வீரலட்சுமி தொடர்ந்து பேசினால் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என எச்சரித்துள்ளார் நடிகை விஜயலட்சுமி.
சீமான் மீது திருமண மோசடி, கட்டாய கருக்கலைப்பு உள்ளிட்ட புகார்களைத் தெரிவித்தவர் விஜயலட்சுமி. 12 ஆண்டுகளுக்கு முந்தைய புகாரை தூசு தட்ட வேண்டும் என மீண்டும் புகார் கொடுத்தார் விஜயலட்சுமி. இப்புகார் தரும் போது விஜயலட்சுமிக்கு உடன் இருந்தவர் வீரலட்சுமி.

தற்போது திடீரென விஜயலட்சுமி, சீமான் மீதான புகாரை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டு பெங்களூர் சென்றுவிட்டார். அத்துடன் வீரலட்சுமி தம்மை சித்ரவதை செய்ததாகவும் குற்றம்சாட்டினார். ஆனால் வீரலட்சுமி இதனை மறுத்ததுடன், விஜயலட்சுமியிடம் சீமான் காலில் விழுந்துவிட்டார்; அவருக்கு பணம் கொடுத்து செட்டில் செய்துவிட்டார் என்றார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: விஜயலட்சுமிக்கு புதியதாக ஆடைகள் வாங்கி கொடுத்தோம் என வீரலட்சுமி கூறியுள்ளார். நான் என்ன மனநிலையில் இருக்கிறேன் என்பது வீரலட்சுமிக்குப் புரியவே இல்லை. அவங்க எப்ப பார்த்தாலும் நான் உங்களுக்கு நிறைய துணிமணி வாங்கி தருகிறேன். நிறைய மல்லிகைப்பூ வாங்கித் தருகிறேன்.. நீங்க சிங்காரித்துக் கொண்டு என் கூட வீடியோ பேசுங்க.. அப்பதான் சீமான் வயிறு எரிந்து சாகட்டும் என்பார்.
ஆனால் நான், சீமான் என்னுடன் வாழ்கிறாரோ இல்லையோ.. சீமான் தான் என் கணவர்; நான் அவரை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவர் என்னை எப்ப விட்டுட்டு போனாரோ அப்ப இருந்துட்டு நான் பெரிதாக சிங்காரித்துக் கொண்டு பூ வைத்து எல்லாம் இருப்பது கிடையாது.
ஒரு கணவரை இழந்த பொண்ணு மாதிரிதான் நான் எப்பவும் இருப்பேன். இதையெல்லாம் வாங்கிக் கொடுத்தாலும் போடமாட்டேன் என்று சொன்னேன். அவர் வாங்கி கொடுத்ததையும் அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிட்டேன்.
நீங்க தொடர்ந்து அவதூறுகளை பேசுகிட்டு இருக்கீங்க... சென்டில்மென்ட் ஆகிடுச்சு..அதாகிடுச்சு.. இதாகிடுச்சுன்னு பேசிகிட்டு இருந்தீங்கன்னா நான் சென்னையில் இல்லை என்றாலும் என்னுடைய வழக்கறிஞர் சென்னையில்தான் இருக்காங்க. தொடர்ந்து செட்டில்மென்ட் ஆகிடுச்சு அதாகிடுச்சுன்னு பேசுனா நானும் வேறவழியே இல்லாம உங்க மேல மான நஷ்ட வழக்கு போட வேண்டியது வரும். அப்படி ஒரு சூழ்நிலைக்கு தயவு செய்து என்னை தள்ளிடாதீங்க என ரொம்ப பணிவாக இந்த வீடியோ மூலம் கேட்டுக் கொள்கிறேன்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications