நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டில் குவிந்த போலீஸ்.. அந்த விழாவிலும் கலந்துக்கலயே.. சென்னையில் பரபரப்பு
சென்னை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்து கொள்ளவில்லை.. அத்துடன், அவரது வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'பர்ஹானா'. இதில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், டைரக்டர் செல்வராகவன், ஜித்தன் ரமேஷ், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகைக்கு எதிர்ப்பு: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பெரும் எதிர்பார்ப்புகளுடன் உருவான 'பர்ஹானா' திரைப்படம் கடந்த மே 12-ம் தேதி திரைக்கு வந்தது... இந்த படம் பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.. ஆனால், இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கேரக்டர் இஸ்லாமியர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியதாக சொல்லப்பட்டது. இதையடுத்து, எதிர்ப்புகளும் கிளம்பின.
மனுஷ்யபுத்திரன் விளக்கம்: இதனிடையே, எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் ஃபர்ஹானா படத்திற்கு ஆதரவாக தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.. இதைத்தவிர, போலவே, முக்கியமான இஸ்லாமிய பிரபலங்கள், இஸ்லாமிய அரசியல் கட்சியை சேர்ந்தவர்களுக்கு இந்தப் படத்தை தனியாக திரையிட்டு காட்டப்பட்டது. அப்போது ஃபர்ஹானா படத்தை பெரும்பாலானோர் எந்தவித சர்ச்சையான காட்சிகளும் இல்லையென கருத்து தெரிவித்திருந்தனர்.
மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுவிட்டதால், படத்தின் இயக்குனர் நெல்சன் வெங்கடேசன், இந்த படம் இஸ்லாமிய மதத்திற்கு எதிராகவோ அல்லது பிரச்சாரம் செய்யக்கூடிய வகையிலோ எடுத்த படம் கிடையாது.. இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து பார்க்கும் வகையிலேயே படத்தை எடுத்துள்ளேன் என்று விளக்கம் தெரிவித்திருந்தார்.. ஆனாலும், இந்த விளக்கம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.. இந்த படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷூக்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷுக்கு ஒருதரப்பினர் மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இதனையடுத்து சென்னை தியாகராய நகரில் உள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஐஸ்வர்யா ராஜேஷ்: சுழற்சி முறையில் நான்கு காவலர்கள் நடிகை வீட்டில் பாதுகாப்பை மேற்கொண்டு வருகின்றனர்.. இதனிடையே, நேற்று காலை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அன்னையர் தினம் விருது வழங்கும் விழாவில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் பெயர் இடம்பெற்றிருந்தது.. ஆனால், அந்த நிகழ்வில் நடிகையின் தாய் நாகமணிக்கு விருதும் வழஙகப்பட்டது.. ஆனால், இந்த விழாவில் ஐஸ்வர்யா ராஜேஷ் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications