Ambika Vijay: விஜயகாந்த் மீது இப்போதான் பாசம் பொத்துக்கிட்டு வருதா?விஜய்க்கு அம்பிகா சரமாரி கேள்வி
சென்னை: விஜயகாந்த் மீது விஜய்க்கு இப்போ மட்டும் பாசம் பொத்துக்கிட்டு வருதா? அப்போ எங்க போனாரு என நடிகை அம்பிகா சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அம்பிகா ஒரு பேட்டியில் கூறியதாவது: விஜயகாந்த் இறந்ததுக்கு அப்புறம் அவரோட பையன் சண்முக பாண்டியன் சினிமாவில் நடிச்சிகிட்டு இருக்காரு. ஆரம்பத்துல விஜயகாந்த் விஜய்க்கு சினிமால எவ்வளவோ உதவி செய்திருக்காரு.

வார்த்தைக்கு வார்த்தை விஜயகாந்த் உங்களோட அண்ணன்னு பேசுறீங்க, அவர் பையன் சண்முக பாண்டியனுக்கு விஜய் ஒரு படம் செய்து கொடுத்திருக்கலாம். ஒன்று சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தில் ஒரு பாட்டு, இல்லனா ஒரு சண்டை காட்சியில் நடிக்கிறதா சொல்லலாம்.
சண்முக பாண்டியன்
இல்லாட்டி விஜய் நடிக்கும் படத்தில் சண்முக பாண்டியனுக்கு ஒரு ரோல் கொடுக்கலாம். அண்ணன் அண்ணனு சொல்லிட்டு இதையெல்லாம் விஜய் ஏன் செய்யவில்லை. இப்போ மட்டும் என்ன திடீர்னு பாசம் பொத்துக்கிட்டு வருது. அப்போ விஜய்யும் மற்ற அரசியல்வாதி மாதிரி நாடகம் ஆடுறார். காரியம் ஆக மட்டும் உங்களுக்கு விஜயகாந்த் தேவைப்படுறாரு. அதுவும் இப்போ தான் தேவைப்படுறாரு என அம்பிகா, விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜயகாந்துக்கு பெரிய மனசு
திரைத்துறையில் விஜயகாந்தால் எத்தனையோ பேர் வளர்ந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் புதிய இயக்குநர், தயாரிப்பாளர்களுக்கு வாய்ப்பு அந்தளவுக்கு கிடைக்காது. ஆனால் புதிய இயக்குநர்கள் மீது நம்பிக்கை வைத்து விஜயகாந்த்தான் தனது படங்களில் அவர்களை அறிமுகப்படுத்தினார்.
ஊமை விழிகள்
"ஊமை விழிகள்" படத்தின் மூலம் திரைப்படக் கல்லூரியில் படித்த உதயகுமார், ஆபாவாணன் உள்ளிட்டோருக்கு வாய்ப்புகளை கொடுத்தார். "நாளைய தீர்ப்பு" மூலம் விஜய் திரைத்துறையில் அறிமுகமானார். ஆனால் அவரது படங்கள் கைகொடுக்கவில்லை.
விஜய்க்கு தோல்வியே கிடைத்தது
அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கி நடிக்க வைத்தும் விஜய்க்கு தோல்வியே கிடைத்தது. இதையடுத்து விஜயகாந்தை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர், "சட்டம் ஒரு இருட்டறை" உள்ளிட்ட படங்களை இயக்கியதால் அந்த உரிமையில் விஜய்க்கு ஒரு படம் செய்து கொடுக்குமாறு எஸ்ஏசி, விஜயகாந்திடம் போய் கேட்டார்.
செந்தூரப்பாண்டி
அப்போது விஜயகாந்த் எந்த மறுப்பும் சொல்லாமல் விஜய்க்கு அண்ணன் கேரக்டரில் "செந்தூரப்பாண்டி" படத்தில் நடித்துக் கொடுத்தார். இந்த படம்தான் விஜய்க்கு ஒரு அந்தஸ்தை கொடுத்தது.
பூவே உனக்காக
அதன்பிறகுதான் "பூவே உனக்காக" திரைப்படத்தில் நடித்ததன் மூலம் விஜய்யின் மார்க்கெட் உயர்ந்தது. பின்னர் விஜய்யும் பெரிய நடிகனாக மாறினார். ஆனால் விஜயகாந்தின் இளைய மகன் சண்முகபாண்டியன் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் அவரை தனது படத்தில் விஜய் நடிக்க வைக்கவில்லை.
விஜயகாந்த் ரசிகர்கள்
விஜயகாந்த் ரசிகர்களும் தேமுதிக தொண்டர்களும் இதை சமூகவலைதளங்களில் பல முறை விமர்சித்துள்ளனர். ஆனால் அரசியல் மேடைகளில் பேசும் போது விஜயகாந்த் குறித்து விஜய் பேசுகிறார். இது தேமுதிக தொண்டர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. இதே மனநிலையில்தான் நடிகை அம்பிகாவும் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
ரிதன்யா வீட்டில் அம்பிகா
அம்பிகா அண்மைக்காலமாக சமூகம் சார்ந்த பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து வருகிறார். முதலில் திருப்பூரில் வரதட்சிணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் வீட்டிற்கு சென்று தாய், தந்தைக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கண்ணகி நகர் வரலட்சுமி
பின்னர் சென்னையில் தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருந்த போது அவர்களுக்கு ஆறுதல் கூறினார். இதையடுத்து கண்ணகி நகரில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த வரலட்சுமி என்பவரது வீட்டிற்கும் அம்பிகா நேரில் சென்று அவரது குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவித்திருந்தார்.
தூய்மை பணியாளர்கள் போராட்டம்
தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசும் போது, உச்ச நடிகர்கள் எல்லாம் இவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க வேண்டும். அவர்கள் எல்லாம் ஏசி அறையிலேயே இருக்கிறார்கள் என விமர்சித்திருந்தார். அப்போது, "தமிழகத்திற்கு நீங்கள் (அம்பிகா) வந்து 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது. இதுவரை எந்த பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கவில்லை.
அஜித் வீட்டிற்கு ஏன் போகலை?
ஆனால் ரிதன்யா வீட்டிற்கு போயிருக்கிறீர்கள். இதே போல் இறந்த அஜித்குமாரின் வீட்டிற்கு போயிருந்தீர்களா? ரிதன்யா வீடு பணக்கார குடும்பம் என்பதால் அவரது வீட்டிற்கு சென்றீர்களா" என நெட்டிசன்கள் கேள்விகளை எழுப்பினர்.
-
திமுகவை தொட முடியுமா என்ன? விஜய்க்கு சிலுவை ஆசீர்வாதம்! அப்போ சிறுபான்மையினர் ஓட்டு யாருக்கு -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
புஸ்ஸி ஆனந்த் முதல் ஆதவ் வரை.. விஜயால் மோசம்போன வேட்பாளர்கள்.. தவெகவில் கடும் அதிருப்தி -
மாட்டிகிட்டியே பங்கு! திமுகவின் வாக்குறுதியை காப்பியடித்து தவெகவின் வாக்குறுதியாக அறிவித்த விஜய் -
ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்தது விஜய்யா? சென்சாரா? புது பாயிண்ட் சொல்லும் எஸ்.வி.சேகர் -
சிக்னலில் நின்ற விஜய் வாகனம்.. யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென தவெக தொண்டர் செய்த செயல்! -
ஜனநாயகன் லீக்.. குற்றவாளிகளை சும்மா விடக்கூடாது! பிரதமர் மோடி தலையிடணும்.. IMPPA சங்கம் டிமாண்ட் -
விஜயிடம் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி எடுத்திருக்கிறேன்.. அதில் அவர் சொன்ன விஷயம் இதுதான்! ஓபனாக உடைத்த கோபிநாத் -
எடப்பாடி பழனிசாமிக்கு 'செக்' வைக்கும் விஜய்! களமிறங்கும் ரகசிய வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுக -
‘ஜனநாயகன்’ லீக் ஆனது தவறு இல்ல.. ஆதங்கத்துடன் நடிகர் சூரி போஸ்ட்.. விஜய்க்கு சப்போர்ட்டுக்கு வந்த விஜய் தேவரகொண்டா -
இனிகோவுக்கு WFH தெரியாது.. உங்க வீட்டுக்கே வருவாரு.. விஜய் தொகுதியில் இறங்கி அடித்த உதயநிதி -
Vijay: ஒரு நாள் பிரச்சாரம்! அடுத்த நாள் ரெஸ்ட்! தவெகவுக்கே ஓட்டு கேட்காத விஜய்! காங்கிரஸ் தப்பியது!












Click it and Unblock the Notifications