சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"குறி வெச்சாச்சு".. கைதாகிறார் மணிகண்டன்?.. மதுரைக்கு பறந்தது தனிப்படை.. மாஜி வழக்கில் திருப்பம்

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது

Google Oneindia Tamil News

சென்னை: ஓடி ஓடி ஒளிந்து கொண்டிருக்கும் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் விரைவில் கைதாவதாக கூறப்படுகிறது.. இவரை கைது செய்ய தனிப்படை போலீசார் மதுரைக்கு விரைந்துள்ளதால், நடிகை சாந்தினி வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கல்யாணம் செய்து கொள்வதாக தன்னை மணிகண்டன் ஏமாற்றிவிட்டார் என்றும், அவரை நம்பி 3 முறை அபார்ஷன் செய்ததாகவும், இந்த விஷயம் மணிகண்டன் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியும் என்றும் சாந்தினி போலீசில் புகார் தந்தார்.. இது தொடர்பாக சில ஆதாரங்களையும் அளித்திருந்தார்.

ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்! ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. 2 சொகுசு கார்கள், 2 பங்களாக்களை குவித்த பப்ஜி மதன்!

இந்த புகாரின்போரில் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு மகளிர் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.. ஆனால் அதற்குள் இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி, மாஜி அமைச்சர் மணிகண்டன் சென்னை ஹைகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

 மனு தாக்கல்

மனு தாக்கல்

இந்த வழக்கு நீதிபதி அப்துல்குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மணிகண்டன் தரப்பில் ஆஜரான வக்கீல், "மணிகண்டன் கல்யாணமானது தெரிந்துதான் நடிகை சாந்தினி குடும்பம் நடத்தினார்.. மற்றபடி நடிகையை காயப்படுத்தியதாக சொல்வதற்கு எந்தவித மெடிக்கல் ஆதாரங்களும் இல்லை.. அறிமுகமான 3 மாதங்களில் அபார்ஷன் செய்ததாக தெரிவிப்பது தவறானது.. ஏப்ரல் 15ம் தேதி வரை சாந்தினி மணிகண்டனுடன் வசித்ததாக சொல்வதற்கும் எந்த ஆதாரங்களும் இல்லை" என்று வாதிட்டார்.

 முன்ஜாமீன்

முன்ஜாமீன்

ஆனால், போலீசார் தரப்பிலோ, "எங்கள் விசாரணை இப்போதுதான் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறது.. சாந்தினி மற்றும் அவருக்கு அபார்ஷன் செய்ததாக சொல்லப்படும் டாக்டர்களின் வாக்குமூலங்களும் பெறப்பட்டுள்ளன.. இதுதொடர்பாக முக்கிய சாட்சிகளை விசாரித்து ஆதாரங்கள் சேகரிக்க வேண்டியுள்ளது.. அதனால், ஜாமீன் தரக்கூடாது.. அப்படி மணிகண்டனுக்கு முன் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைத்து விடுவார்" என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

 தள்ளுபடி

தள்ளுபடி

இதேபோல, மணிகண்டனுக்கு ஜாமீன் தரக்கூடாது என்று சாந்தினி தரப்பிலும் வழக்கறிஞர் வாதாடினார்.. இப்படி அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மணிகண்டனின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்... இந்நிலையில், மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டதால், மணிகண்டன் எந்நேரமும் கைதாகலாம் என்று சொல்லப்பட்டது.

Recommended Video

    பள்ளிகளில் பாலியல் புகார்களை விசாரிக்க தனிக்குழு - Anbil Mahesh Poyyamozhi
     தனிப்படை

    தனிப்படை

    சாந்தினி புகார் தந்தபோதிருந்தே மணிகண்டனை காணவில்லை.. அவர் சென்னையில் இருப்பதாக ஒரு தகவல் வந்தது.. இதையடுத்து, தனிப்படை போலீசார் சென்னையிலும் சென்று முகாமிட்டு வலைவீசி தேடினர்.. அவர் கிடைக்கவே இல்லை.. இந்த சூழலில்தான், வழக்கு பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசாரே ஒரு தனிப்படையை அமைத்தனர்...

    மதுரை

    மதுரை

    அவர்களும் மணிகண்டனை தேடி வந்த நிலையில்தான் இப்போது மேலும் ஒரு ஒரு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது... மதுரையில் மணிகண்டன் இருப்பதாக மற்றொரு தகவல் கசிந்துள்ளது.. அதனால் தனிப்படை போலீசார் மணிகண்டனை கைது செய்ய மதுரைக்கு விரைந்துள்ளனர்... அநேகமாக இன்றே மணிகண்டன் கைதாகலாம் என்றும் கூறப்படுவதால், சாந்தினி வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    English summary
    Actress Chandhini Case and police went to Madurai to arrest for Ex Minister Manikandan
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X