பாலியல் வன்புணர்வு செய்தார்.. 5 வருஷம் குடும்பம் நடத்தினார்.. மாஜி அமைச்சர் மீது நடிகை புகார்
முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நடிகை பாலியல் புகார் அளித்துள்ளார்
சென்னை: தன்னை பாலியல் வன்புனர்வு செய்ததுடன், கல்யாணம் செய்து கொள்வதாக கூறி, 5 வருஷம் குடும்பம் நடத்திவிட்டு ஏமாற்றிவிட்டதாக, அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சென்னை கமிஷனர் ஆபீசில் துணை நடிகை சாந்தினி என்பவர் பரபரப்பு புகார் ஒன்றினை அளித்துள்ளார்.
Recommended Video
நாடோடிகள் உள்ளிட்ட சில படங்களில் நடித்திருப்பவர் சாந்தினி... மலேசியாவை சேர்ந்தவர்.. இவர் இன்று திடீரென சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் சாந்தினி கூறியிருப்பதாவது: முன்னாள் அமைச்சர் மணிகண்டன் என்னை பாலியல் வன்புணர்வு செய்துவிட்டு, பின்னர் கல்யாணம் செய்து கொள்வதாக சொல்லி, 5 வருஷமாக என்னுடன் ரகசியமாக குடும்பம் நடத்தி வருகிறார்.. என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று நான் இப்போது அவரை வலியுறுத்தினேன்.

அந்தரங்கம்
அதற்கு அவரோ, அந்தரங்க போட்டோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு விடுவேன் என மிரட்டுகிறார்.. மேலும் கூலிப்படையை ஏவி என்னை கொலை செய்யப் போவதாகவும் மிரட்டுகிறார்... இதை பற்றி கேட்டதற்கு என்னை அடித்து கொடுமைப்படுத்துகிறார்... அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என அதில் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்
இந்த புகாரால் அரசியல் வட்டாரம் மட்டுமில்லாமல் சினிமா வட்டாரமே பரபரப்பாகி வருகிறது.. ஜெயலலிதா ஆட்சியில் தொழில்நுட்ப துறை அமைச்சராக இருந்தவர்தான் மணிகண்டன்.. ராமநாதபுரத்தை சேர்ந்தவர்... எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் அவருக்கு அதிருப்தி ஏற்பட்டு வந்தது.. தொடர்ந்து மாவட்டத்தில் புகார்கள் தலைமைக்கு சென்றபடியே இருந்தது..

அதிமுக
இதனிடையே, எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேர் ஆளுநரிடம் மனு அளித்தனர்... இதனால் அவர்கள் பதவி பறிக்கப்பட்டது... இந்த விவகாரத்தில் அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்தான் மணிகண்டன்.. அதற்கு பிறகு அவரை அரசியலில் ஓரங்கட்டினார்கள்.. நடந்து முடிந்த தேர்தலிலும் வாய்ப்பு தரப்படவில்லை.

அதிர்ச்சி
இந்நிலையில், அவர் மீது பாலியல் புகார் கிளம்பி உள்ளது பெரும் அதிர்வை ஏற்படுத்தி வருகிறது.. ஏற்கனவே ஊழல், பாலியல் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீதான புகார்கள் விசாரிக்கப்பட்டு கடுமையான முடிவு எடுக்கப்படும் என்று ஸ்டாலின் சொல்லி வரும் நிலையில், தானாகவே ஒரு புகார் வந்து சிக்கி உள்ளது.. இதையடுத்து, இந்த புகார் தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications