மிகப் பெரிய பிரபலத்துடன் சித்ரா எடுத்த செல்பி.. அவரும் உயிரோடு இல்லாத சோகம்.. வைரலாகும் புகைப்படம்
சென்னை: நடிகை சித்ரா உயிரோடு இருக்கும் போது மிகப் பெரிய பிரபலத்துடன் செல்பி எடுத்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. ஆனால் அவருடன் இருந்த பிரபலமும் தற்போது உயிரோடு இல்லாததால் சோகம் நிலவுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை கேரக்டரில் நடித்து மக்களிடையே மிகவும் பிரபலமானவர் சித்ரா. இவர் நேற்று முன் தினம் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நேற்று முன் தினம் நள்ளிரவு வரை ஷூட்டிங்கில் அனைவரிடமும் சிரித்து பேசி கலகலவென இருந்த சித்ரா திடீரென தற்கொலை செய்து கொண்ட செய்தி பரவியதால் ரசிகர்களும் நண்பர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.
குடிகாரனுக்கு வாக்கப்பட்ட சித்ரா அக்கா.. பாவம் அவ.. தீவிரமா விசாரிங்க.. கொந்தளித்த உதவியாளர்!

உறுதி
இந்த நிலையில் இவரது மரணத்தில் பல மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிவுகள் நேற்று வெளியாகின. அதில் சித்ராவின் மரணத்தில் மர்மம் ஏதும் இல்லை. அவர் தூக்கிட்டு தற்கொலை செய்தது உறுதியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.

புகைப்படங்கள்
இந்த நிலையில் சித்ராவின் கடைசி இன்ஸ்டாகிராம் பதிவு, அவர் நடித்த டிக்டாக் வீடியோக்கள், அவரது புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்கள் வைரலாக்கி கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். துருதுருவென பேச்சு, நல்ல நடிப்பு, எப்போதும் சிரித்த முகம் கொண்ட சித்துவா இப்படி செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார்கள்.

எஸ் பி பாலசுப்பிரமணியம்
சித்ரா ஒரு நிகழ்ச்சியில் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன் எடுத்த செல்பி புகைப்படமும் வைரலாகி வருகிறது. தற்போது சித்ராவும் உயிருடன் இல்லை, அது போல் அவர் புகைப்படம் எடுத்த எஸ் பி பாலசுப்பிரமணியமும் உயிருடன் இல்லை என்பதால் ரசிகர்களின் சோகம் மேலும் அதிகரிக்கிறது.

கலகல வீடியோ
அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை பார்த்தால் எத்தனை படங்கள், கலகல வீடியோக்கள் கொட்டி கிடக்கின்றன. இவையெல்லாம் மீண்டும் ஒரு முறை ரசிகர்கள் கண்ணீருடன் ரசித்து வருகிறார்கள். ஆனால் மேலும் தனது அதீத நடிப்பால் ரசிகர்களை மகிழ்விக்க சித்ராதான் உயிருடன் இல்லை.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications