சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"முல்லை"க்கு தொல்லை கொடுத்தாரா அரசியல் பிரமுகர்.. யார் அவர்.. கிடுக்கிபிடி விசாரணை.. பரபர திருப்பம்!

நடிகை சித்ராவின் செல்போனில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: சித்ராவுக்கு அரசியல் பிரமுகர் ஒருவர் வாட்ஸ்அப் மூலம் தொந்தரவு தந்தே வந்தாராம்.. அவர் யார் என்ற விசாரணையில் போலீசார் இறங்கி உள்ளனர்.. மேலும் சித்ராவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் யார் என்ற கோணத்திலும் விசாரணை தீவிரமாகி உள்ளது.

ஹேமந்த் வாக்குமூலத்தை அடுத்து, சித்ராவின் செல்போன்தான் இந்த வழக்கில் முக்கிய க்ளூவாகவும், சாட்சியாகவும் உள்ளது.. அந்த வகையில், சித்ராவின் செல்போனை நேற்று முன்தினம் முதலே ஆய்வு செய்வதாக போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

அதன்படி, சித்ரா கடைசியாக பேசியதும், அதிகமுறை பேசியதும், அவருடைய அம்மாவுடன்தான் என்பது தெரியவந்துள்ளது.. அம்மாவுக்கு சலி மெசேஜ்களையும் சித்ரா அனுப்பியிருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்தினர்.

யாருடன் ரொம்ப நேரமாக பேசினார் சித்ரா.. மறுமுனையில் இருந்தது யார்.. தீவிர விசாரணையில் போலீஸ்! யாருடன் ரொம்ப நேரமாக பேசினார் சித்ரா.. மறுமுனையில் இருந்தது யார்.. தீவிர விசாரணையில் போலீஸ்!

தினேஷ்

தினேஷ்

இந்நிலையில், மேலும் சில தகவல்கள் வெளியாகி உள்ளன.. அதன்படி, சித்ராவுக்கு தினேஷ் என்பவர் அதிக முறை போன் செய்திருக்கிறார்.. வாட்ஸ்அப் செமேஜ்களையும் அனுப்பி உள்ளார்.. இவர் யார் என்று முதலில் விசாரித்தனர்.. பிறகுதான் தெரிந்தது அவர்தான் சித்ராவின் புரோகிராம் ஒருங்கிணைப்பாளராம்.. சித்ராவுக்கு தேதி ஒதுக்குவது, நிகழ்ச்கிகள் சம்பந்தமான பணிகளை செய்து வந்தவர். அதன்படி, சித்ரா டிவி சீரியல் நேரம் தவிர, மற்ற நேரங்களில் கடைதிறப்பு விழா முதல் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சென்று வந்துள்ளார்.

பெரம்பலூர்

பெரம்பலூர்

சித்ராவை சிறப்பு விருந்தினராக பல்வேறு ஊர்களில் பொதுமக்கள் அழைத்துள்ளனர்.. அதன்படி, சித்ராவும் அவர்களின் அழைப்புக்கு இணங்கி சென்று வந்து, எந்நேரமும் பிசியாவே இருந்துள்ளார். அப்படித்தான், அக்டோபர் 21-ம் தேதி பெரம்பலூரில் ஒரு நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார்.. அங்கு பொதுமக்களுடன் ஏராளமான செல்பிக்களை சித்ரா எடுத்து மகிழ்ந்துள்ளார்.

ஜனவரி

ஜனவரி

மேலும் ஜனவரியிலும் ஒரு நிகழ்ச்சிக்கு வருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.. அந்த நிகழ்ச்சிக்கு தினேஷும் தீவிரமான ஏற்பாடுகளை செய்து வந்துள்ளார்.. இந்த சமயத்தில்தான், அதாவது சித்ரா பெரம்பலூருக்கு சென்று வந்த பின்னர் சித்ராவின் வாட்ஸ்அப் நம்பருக்கு அரசியல் பிரமுகர் ஒருவர் மெசேஜ் செய்து கொண்டே இருந்தாராம்.. இந்த புது வருடத்தை தன்னுடன் சேர்ந்து கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டே இருந்தாராம்.. அந்த அரசியல் பிரமுகர்தான் யார் என்று தெரியவில்லை.

 தொல்லை?

தொல்லை?

இவரை தவிர, மேலும் சிலர் சித்ராவுக்கு ஏடாகூடமான மெசேஜ்களையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்களாம்.. அதுகுறித்தும் விசாரணை நடக்கிறது.. இவர்களில் யாராவது சித்ராவுக்கு அத்துமீறி தொல்லை கொடுத்தார்களா? மிரட்டினார்களா? அந்த அழுத்தம் காரணமாக சித்ரா தற்கொலை நடந்திருக்குமா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது... எதுவாக இருந்தாலும் சரி, சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய நபரை விரைவில் சட்டத்தின் முன் கொண்டு வந்து நிறுத்தும் முயற்சியில் நம் போலீசார் மிக தீவிரமாக இறங்கி உள்ளனர்.

English summary
Actress Chitras case investigation is going on
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X