பிரபல நடிகையை "சீண்டிய" கேமராமேன்.. நள்ளிரவில் நடந்த மது விருந்து.. கடைசியில் பார்த்தால்.. கொடுமை
டிவி நடிகைக்கு பாலியல் தொல்லை தந்த கேமராமேனை போலீசார் கைது செய்தனர்
சென்னை: ஹீரோயின் சான்ஸ் வாங்கி தருவதாக சொல்லி, பாலியல் தொல்லை தந்த கேமராமேனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு முக்கிய சம்பவம் நடந்தது.. கொளத்தூரை சேர்ந்த ஒருவர், போலீஸில் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், தன்னுடைய 21 வயது மகள் மாடலிங் துறையில் பணியாற்றி வருவதால், அவருக்கு சினிமா வாய்ப்பு வாங்கி தருவதாக கூறிய ஒருவர், வாட்ஸ்அப் காலில் அழைத்து, பாலியல் தொல்லை கொடுத்து வருகிறார்... அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.

கொளத்தூர்
இந்த புகாரின்பேரில் கொளத்தூர் போலீசாரும் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.. சைபர் கிரைம் போலீசாரும் இதற்கு உதவி செய்தனர்.. ஆனால் புகார் சொல்லப்பட்ட நபரை எளிதாக கண்டுபிடிக்க முடியவில்லை.. அதனால், அவரது செல்போன் சிக்னல் வைத்து தேடலாம் என்று முயன்றனர்.. அப்போதும் அவர் சிக்கவில்லை.. காரணம், வாட்ஸ்அப் காலிலேயே எல்லாருடனும் பேசி கொண்டிருந்ததால், அவர் எங்கு உள்ளார் என்பதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.

பெரும்பாக்கம்
இறுதியில் பெரும்பாக்கம் பகுதியில் அவரை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.. திருப்பூரை சேர்ந்தவர் அந்த நபர்.. 26 வயதாகிறது.. பெயர் ரஞ்சித்.. சென்னையில் தங்கி வந்துள்ளார்.. மாடலிங், சினிமா துறையில் வாய்ப்பு தேடும் பெண்களை குறி வைத்துள்ளார்.. வேலை வாய்ப்பு தருவதாக சொல்லி, விளம்பரமும் செய்துள்ளார்.. இதை நம்பி ஏராளமான இளம்பெண்கள் ரஞ்சித்திற்கு போனை போட்டு பேசினர்.. அவர்களை அரை நிர்வாண படம் மற்றும் கவர்ச்சியான படங்களை அனுப்ப சொல்லி உள்ளார் ரஞ்சித்.. இந்த பெண்களும் அனுப்பி வைத்துள்ளனர்.

நிர்வாண படம்
பிறகு, "உங்களது அரை நிர்வாண படம் என்கிட்ட இருக்கு.. நான் சொல்வதை கேட்காவிட்டால், படத்தை வெளியிட்டு விடுவேன் என்று மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதற்கு பயந்து பல பெண்கள் அவரிடம் சிக்கி உள்ளனர்.. ஆனால், அதில் ஒரு பெண் மட்டும் உஷாராகிவிட்டார்.. இதனால் ஆத்திரமடைந்த ரஞ்சித், அந்த பெண்ணின் போட்டோக்களை மார்பிங் செய்து, நிர்வாண கோலத்தில் மாற்றி, அந்த பெண்ணுக்கே அனுப்பி வைத்தார்..

மாடலிங்
இதை பார்த்துஅதிர்ந்த அந்த பெண், பெற்றோரிடடம் விஷயத்தை சொல்லி உள்ளார்.. அதற்கு பிறகுதான் இந்த விஷயம் போலீஸ் வரை வந்தது.. இதற்கு பிறகு ரஞ்சித்தை போலீசார்கைது செய்தாலும், இளம்பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்கள்.. போலி விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டனர்.

வளசரவாக்கம்
ஆனால், இப்போதும் அதுபோலவே ஒரு சம்பவம் நடந்துள்ளது.. காமுகன் ஒருவனிடம் இளம்பெண் சிக்கி உள்ளார்.. வளசரவாக்கம், ஓம் சக்தி நகர் பிரதான சாலையை சேர்ந்தவர் காசிநாதன்.. 42 வயதாகிறது.. இவர் டிவி சீரியலில் கேமராமேனாக வேலை பார்த்து வருகிறார்... இவருக்கு ஒரு துணை நடிகை பழக்கமாகி உள்ளார்.. சீரியலில் தற்போது முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.. ஆனாலும், ஹீரோயின் சான்சுக்காக முயற்சி செய்து வருகிறார்.. இந்த சான்ஸை, தான் வாங்கி தருவதாக ஆசை காட்டி உள்ளார் காசிநாதன்.. சம்பவத்தன்று, சீரியல் விஷயமாக பற்றி பேச வேண்டும் என்று அந்த பெண்ணை, தனது வீட்டிற்கு இரவு நேரத்தில் அழைத்துள்ளார் காசிநாதன்.

நடிகை - சான்ஸ்
அந்த பெண்ணும் வந்துள்ளார்.. 2 பேரும் தண்ணி அடித்துள்ளதாக தெரிகிறது.. பிறகு, அந்த பெண்ணை காசிநாதன் பாலியல் தொல்லை செய்துள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், தன்னுடய நண்பருக்கு போனை போட்டு, காசிநாதன் இப்படி தவறாக நடந்துக்கொள்வதாக சொல்லி அட்ரஸை தந்துள்ளார்.. அந்த நண்பர் இதை கேட்டு பதறி போய், காசி நாதன் வீட்டுக்கு சென்று பெண்ணையும் மீட்டார். பிறகு, இதுகுறித்து அந்த பெண் புகார் அளித்ததின் பேரில், வளசரவாக்கம் மகளிர் போலீசார் காசிநாதனை கைது செய்துள்ளனர்.. இப்போது புழலில் உள்ளார் காசிநாதன்..!
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications