பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமி, தடா பெரியசாமிக்கு முக்கிய பதவி!
சென்னை: பாஜகவிலிருந்த விலகி அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கும், தடா பெரியசாமிக்கும் முக்கிய பொறுப்புகளை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கியுள்ளார்.
நடிகை கவுதமிக்கு அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பதவியும் தடா பெரியசாமிக்கு எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவுகளை எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார்.

இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்ட அறிக்கையில், "அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக திரைப்பட நடிகை கவுதமி நியமனம் செய்யப்பட்டு உள்ளார். அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளராக தடா பெரியசாமி நியமனம் செய்யப்படுகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
இதேபோல அதிமுக சிறுபான்மையின நலப் பிரிவு துணைச் செயலாளராக பாத்திமா அலியும், விவசாயப் பிரிவு துணைச் செயலாளராக கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சன்னியாசியும் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். முன்னதாக கள்ளக்குறிச்சி மாவட்ட விவசாயப் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
பாஜகவிலிருந்து அதிமுக வந்தவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி முக்கியத்துவம் தருவதாகவே இது பார்க்கப்படுகிறது. முன்னதாக பாஜக ஐடி விங் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்ததும் அவருக்கு அதிமுக ஐடி விங் இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகை கவுதமி பல ஆண்டுகளாக பாஜகவில் இருந்து வந்தார். அவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு தரப்படும் என்பதால் 2021 ஆம் ஆண்டு அங்கேயே தங்கி கட்சி பணிகளில் ஈடுபட்டு வந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதனால் கவுதமி அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.
இதனிடையே தனது சொத்தை பாஜகவை சேர்ந்த நிர்வாகி அழகப்பன் ஏமாற்றியதாக பாஜக தலைமையிடம் புகார் தெரிவித்தும் தனக்கு ஆதரவாக யாரும் செயல்படவில்லை என்ற காரணத்தால் பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு கவுதமி விலகினார். இதையடுத்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து அதிமுகவில் இணைந்தார். லோக்சபா தேர்தலிலும் அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார்.
அது போல் பாஜக எஸ்சி அணி மாநிலத் தலைவராக இருந்த தடா பெரியசாமி, லோக்சபா தேர்தலில் தனது சொந்த ஊர் அமைந்துள்ள சிதம்பரம் தொகுதியில் தனக்கு சீட் வழங்காமல் வேலூரை சேர்ந்த கார்த்தியாயினிக்கு சீட் வழங்கியதால் அதிருப்தி அடைந்த அவர் பாஜகவிலிருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.
-
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே!












Click it and Unblock the Notifications