ஜெ தொகுதி உள்பட 2 இடங்களுக்கு குறி.. நடிகை காயத்ரி ரகுராம் அதிமுகவில் விருப்பமனு! பின்னணியில் ஜாதி
சென்னை: தமிழ் சினிமாவில் நடிகை, நடன இயக்குநராக இருந்த காயத்ரி ரகுராம் அதிமுகவில் சேர்ந்து செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வரும் சட்டசபை தேர்தலில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதி அல்லது சென்னை மயிலாப்பூர் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட அவர் விருப்ப மனு செய்துள்ளார். இந்த 2 தொகுதிகளை அவர் தேர்வு செய்திருப்பதன் பின்னணியில் உள்ள ஜாதி அரசியல் பற்றி இங்கே பார்க்கலாம்.
தமிழ் சினிமாவில் நடிகையாகவும், நடன இயக்குநராகவும் இருந்தவர் காயத்ரி ரகுராம். இவர் பாஜகவில் சேர்ந்து செயல்பட்டு வந்தார். அப்போது அண்ணாமலையுடன் ஏற்பட்ட பிரச்சனையில் அவர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்.

எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அவர் தன்னை அதிமுகவில் இணைத்து கொண்டார்.அதிமுகவின் மாநில மகளிர் அணி துணை செயலாளர் பொறுப்பு காயத்ரி ரகுராமிற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டசபை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.
அதிமுக பொதுச்செயலாளர் சட்டசபை தொகுதி வாரியாக தீவிர பிரசாரம் மேற்கொண்டார். தற்போது அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் காயத்ரி ரகுராமும் அதிமுகவில் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளார். சென்னை மயிலாப்பூர் அல்லது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வென்ற திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் உள்ளிட்ட சட்டசபை தொகுதியில் போட்டியிட அவர் விருப்பமனு வழங்கி உள்ளார்.
இந்த 2 சட்டசபை தொகுதிகளிலும் அதிமுக பலமுறை வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை தான் இந்த தொகுதிகளை அதிமுக, திமுகவிடம் இழந்தது. மேலும் காயத்ரி ரகுராம் பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர். மயிலாப்பூர், ஸ்ரீரங்கம் சட்டசபை தொகுதிகளில் கணிசமான அளவில் பிராமணர்கள் வாக்காளர்களாக உள்ளனர். இதனால் காயத்ரி ரகுராம் இந்த தொகுதிகளை குறிவைத்து விருப்ப மனு கொடுத்துள்ளார். பிராமணர் சமுதாயத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் பாஜகவுக்கு தான் ஓட்டளிப்பதாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக கூட்டணியில் தான் பாஜக உள்ளது. இதனால் எளிதாக வெற்றி பெறலாம் என்று கணக்கிட்டு காயத்ரி ரகுராம் விருப்ப மனு செய்துள்ளார்.
காயத்ரி ரகுராம் தேர்வு செய்துள்ள ஸ்ரீரங்கம் தொகுதி என்பது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா களமிறங்கி வெற்றி பெற்ற தொகுதியாகும். கடந்த 2011 தேர்தலில் ஜெயலலிதா இந்த தொகுதியில் போட்டியிட்டு 1 லட்சத்து 5 ஆயிரத்து 328 ஓட்டுகளை பெற்றார். அவரை எதிர்த்து களமிறங்கிய திமுகவின் ஆனந்த் 63,480 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதனால் ஜெயலலிதா 41,848 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அதன்பிறகு 2015 இடைத்தேர்தல்(சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு போனதால் இடைத்தேர்தல்), 2016 சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் வளர்மதி போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2021 சட்டசபை தேர்தலி்ல திமுக சார்பில் எம் பழனியாண்டி 1,13,904 ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் கு.பா கிருஷ்ணன் 93,989 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார்.
அதேபோல் சென்னை மயிலாப்பூர் தொகுதியை எடுத்து கொண்டால் கடந்த 2001ம் ஆண்டில் பாஜக வேட்பாளர் லட்சுமணன் வெற்றி பெற்றார். அதன்பிறகு 2006ல் அதிமுக சார்பில் எஸ்வி சேகர், 2011, 2016ல் அதிமுக சார்பில் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆர் நடராஜ் ஆகியோர் வென்றனர். 2021ல் அதிமுக வேட்பாளர் ஆர் நடராஜ் ஹாட்ரிக் வெற்றிக்கு முயன்றார். ஆனால் அவர் திமுக வேட்பாளர் தா வேலுவிடம் 12,633 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் திமுகிவின் தா வேலு 68,392 ஓட்டுகள் வாங்கிய நிலையில் அதிமுக வேட்பாளர் ஆர் நடராஜ் 55,759 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தனபால் மட்டுமல்ல.. பட்டியலின முன்னாள் அமைச்சர்களும் அதிமுகவில் புறக்கணிப்பு.. பிரஷரில் எடப்பாடி! -
வந்தவுடனே சீட்டா? காளியம்மாளுக்கு கைவிரித்த எடப்பாடி.. வெறும் பேச்சாளராக ‘யூஸ்'செய்ய அதிமுக முடிவு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
சென்னை அதிமுக வேட்பாளர்கள் யார்? 12 தொகுதிகளின் பெயர்கள் மட்டும் மிஸ்ஸிங்.. எடப்பாடி கணக்கு என்ன? -
என்னங்க சொல்றீங்க? அப்போ எல்லா கணக்கும் தப்பா போகுதா? ஷாக்கான விஜய்.. காரணமான அந்த ரிப்போர்ட் -
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
மதுரையில் 8 தொகுதிகளில் களமிறங்கும் அதிமுக.. மதுரை வடக்கில் சரவணன்.. யார் யாருக்கு வாய்ப்பு? -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி












Click it and Unblock the Notifications