சென்னை அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளியிலும் கூட....நடிகை கெளரி கிஷன் சமூக வலைதளங்களில் குமுறல்
சென்னை: தாம் படித்த சென்னை அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளியிலும் கூட உடலை வைத்து அசிங்கப்படுத்துவது உள்ளிட்ட நெருக்கடிகள் தரப்பட்டதாக 96, மாஸ்டர் படங்களில் நடித்த நடிகை கெளரி கிஷன், சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.
சென்னை கே.கே.நகர் பத்மா சேஷாத்ரி பாலபவன் பள்ளியில் (பத்ம சேஷாத்ரி) வணிகவியல் ஆசிரியராக இருந்தவர் ராஜகோபாலன். தமது வகுப்பில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் ராஜகோபாலன் என்பது புகார்.

ராஜகோபாலன் அரை நிர்வாணம்
ஆன்லைன் வகுப்புகளில் அரை நிர்வாணமாகவே வந்து பாடங்களை நடத்திய படங்களும் வெளியாகி இருந்தன. இதனையடுத்து ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கிடுக்குப்பிடி விசாரணை
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் நீண்டகாலமாக இந்த பாலியல் அக்கிரமங்கள் நடப்பதாக புகார் கூறியும் பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளாமல் இருந்தது. இது தொடர்பாக பள்ளி டீன் கீதா, பள்ளி இயக்குநர் ராஜேந்திரா உள்ளிட்டோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Recommended Video

அடுத்தடுத்து புகார்கள்
இதே பத்ம சேஷாத்ரி பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவிகள், பாலியல் அத்துமீறல் புகார்களை கொடுத்துள்ளனர். தமிழகத்தில் சிறந்த பள்ளியாக கருதப்பட்ட பத்மா சேஷாத்ரி பள்ளியில் இந்த நிகழ்வு நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடையாறு பள்ளி மீது நடிகை புகார்
இந்நிலையில் 96, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை கெளிரி கணேஷ் தமது சமூக வலைதளப் பக்கங்களில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், தாம் சென்னை அடையாறு இந்து சீனியர் செகண்டரி பள்ளியில் படித்ததாகவும் அங்கும் மாணவிகளின் உடல் அங்கங்களை வைத்து கொச்சைப்படுத்தும் துன்புறுத்தல்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜாதிய பிரச்சனை
மேலும் ஜாதிய அடிப்படையில் ஏளனமாக பேசுவது, ஆதாரங்கள் இல்லாமல் மாணவர்களை குற்றவாளிகளாக்குவது என்கிற செயல்களும் இந்து சீனியர் செகண்ட்டரி பள்ளியில் நடந்திருக்கிறது. இப்போதும் அதை நினைத்தாலே என் மனம் பாரமாகிவிடுகிறது என குமுறியுள்ளார். இப்படியானவற்றை எதிர்கொண்டவர்கள் அந்த துயரங்களை பொதுவெளியில் பேச வேண்டும் எனவும் கெளரி கிஷன் கூறியுள்ளார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications