போன வேகத்திலேயே.. வெளியே வந்த பாஜக ஜெயலட்சுமி.. சென்னை புழலில் ஜஸ்ட் 1 நாள்தான்.. உடனே அந்த வார்த்தை
சென்னை: பாஜக நிர்வாகி நடிகை ஜெயலட்சுமியின் ட்வீட், இணையத்தில் பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
கடந்த 2 வருடமாகவே, சினேகன் - நடிகை ஜெயலட்சுமி விவகாரம் நடந்து வருகிறது.. 2022ல் 'சினேகம் பவுண்டேஷன்' பெயரை பயன்படுத்தி நடிகையும், பாஜக நிர்வாகியுமான ஜெயலட்சுமி, நிறைய பேரிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டு வருவதாக பாடலாசிரியர் சினேகன் சென்னை கமிஷனர் ஆபீசீல் புகார் அளித்திருந்தார்.

புகார்கள்: இதைபார்த்த நடிகை ஜெயலட்சுமி, சினேகன் அவதூறு பரப்புவதாக சொல்லி, போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் தந்தார்.. இப்படியே 2 பேரும் மாறி மாறி, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்களை தந்து வந்தனர். ஒருவர் மீது ஒருவர் குற்றஞ்சாட்டி வந்தனர். ஒருகட்டத்தில் 2 பேருமே கோர்ட்டுக்கு போனார்கள்.. நீதிமன்ற உத்தரவுப்படி, திருமங்கலம் போலீசாரும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்கள்.
இந்த வழக்கு விசாரணையில் முடிவில், 2 நாட்களுக்கு முன்பு, ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டார்... இந்த கைது நடவடிக்கை குறித்து சினேகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த விஷயத்தை சமாதானமாக பேசியிருக்கலாம். ஆனால் அவர்தான் அதற்கு தயாராக இல்லை.. பேசி பேசியே பெரிதாக்கிவிட்டார்..
விளக்கம்: இனிமேல் அவர்தான் தன்மீது எந்த தவறும் இல்லை என்பதை நிரூபிக்க வேண்டும்.. என் அறக்கட்டளையை பயன்படுத்தி அவர் எவ்வளவு வசூல் செய்தார் என்ற விவகாரத்துக்குள் நான் நுழைய விரும்பவில்லை. அதை கோர்ட்டும், போலீசும் பார்த்துக்கொள்ளும். எனக்கு வேண்டியது என் பெயருக்கு களங்கம் ஏற்படக் கூடாது என்பதில் நான் கவனமாக இருந்தேன். ஆனால் அது, அரசியல் காழ்ப்புணர்ச்சி என்ற திசையை நோக்கி சென்றதால்தான், நான் கேஸ் போட வேண்டியதாகிவிட்டது" என்று கூறியிருந்தார்.
முன்னதாக, திருமங்கலம் போலீசார் அண்ணாநகரில் உள்ள ஜெயலட்சுமி வீட்டுக்கு சென்று அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.. அவர் வீடு முழுக்க சோதனை நடத்தினார்கள்.. அப்போது சில ஆவணங்கள் கிடைத்ததாக தெரிகிறது. இதற்கு பிறகுதான், ஜெயலட்சுமியை போலீஸார் கைது செய்வதாக சொன்னார்கள்.
கொந்தளிப்பு: இதைக்கேட்டதுமே ஜெயலட்சுமி ஆவேசம் அடைந்தார்.. திமுகவினரையும் முதல்வரையும் திருப்திப்படுத்த எந்த தவறுமே செய்யாத என்னை போலீஸார் கைது செய்கிறார்கள் என்று கொந்தளித்தார்..
பிறகு போலீஸ் ஜீப்பில் அவரை ஏற்ற முயன்றபோது, மீண்டும் சீறினார்.. நான் என்னுடைய காரில்தான் வருவேன், போலீஸ் ஜீப்பில் என்னை ஏற்றி செல்லும் அளவுக்கு, நான்எந்த தப்பும் செய்யவில்லை, நான் ஒன்றும் தப்பிச்சு ஓடிட மாட்டேன்.. வேணும்னா, என் காரிலேயே போலீஸாரும் வரட்டும்.. தப்பு செய்பவர்களை எல்லாம் கைது செய்யாமல், என்னை போன்ற அப்பாவிகளை ஏங்க கைது பண்றீங்க? என்று பொங்கியபடியே இருந்தார்.
ஜாமீன்: அதனால், ஜெயலட்சுமியை சமாதானம் செய்து, ஜீப்பில் ஏற்றி அழைத்து செல்வதற்குள் போலீசாருக்கு போதும் போதுமென்றாகிவிட்டது.. வருகிற மார்ச் 4ம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதையடுத்து, புழல் சிறையிலும் அடைக்கப்பட்டார் ஜெயலட்சுமி.. ஆனால், நேற்றைய தினமே அவர் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார்..
ஜாமீனில் வந்ததுமே நடிகை ஜெயலட்சுமி ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், "நீதி வெல்லும் வருங்காலம் பதில் சொல்லும், எனக்காக பிரார்த்தனை செய்து கொண்ட அனைவருக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications