வாழ்க்கையில் தோற்றுவிட்டேன்.. என்னை இந்த நிலைக்கு தள்ளியது ஈஸ்வர்.. பரபர கடிதம் எழுதிய நடிகை ஜெயஸ்ரீ
Recommended Video
சென்னை: வாழ்க்கையில் நான் தோற்றுவிட்டேன். ஈஸ்வரும், அவரது பெற்றோரும் என்னை இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர் என நடிகை ஜெயஸ்ரீ தனது தற்கொலை முயற்சி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கணவர் ஈஸ்வருடனான பிரச்சினையால் நடிகை ஜெயஸ்ரீ மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளார். இதையடுத்து அவர் நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவர் தற்கொலை முயற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறுகையில், மகளே அம்மா உன்னை மிகவும் நேசிக்கிறேன். அது உனக்கும் தெரியும். நான் என் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன் கண்ணா. என்னை மன்னித்துவிடு.

தாய்
நான் இந்த முடிவை எடுத்து உன்னை கஷ்டப்படுத்தியிருக்கக் கூடாது. நல்லப் பெண்ணாக இரு. உனது டான்ஸ் கரியரை ஒருபோதும் கைவிடாதே. என்னுடைய ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும். உனது தாய்க்காக நீ ஒருபோதும் வருத்தப்படாதே.

சாகும் முடிவு
அம்மா, அக்கா என்னை மன்னித்துவிடுங்கள். என் குழந்தையை பார்த்துக் கொள்ளுங்கள். நான் வாழ்க்கையில் தோற்றுவிட்டேன். கணவர் ஈஸ்வரும் அவரது பெற்றோரும் என்னை இன்று இந்த நிலைக்கு தள்ளிவிட்டனர். இந்த மனஅழுத்தத்தால் நான் கொஞ்சம் கொஞ்சமாக சாவதை விட ஒரேடியாக சாகலாம் என்பதால் இந்த முடிவை எடுத்தேன்.

கவலை
நான் அழைத்த போதெல்லாம் எனக்கு உதவிய உங்களுக்கு நன்றி. நான் இதற்கு மேல் வாழ விரும்பவில்லை. தற்போது எதுவும் எனக்கு சாதகமாக இல்லை. நான் வழக்கத்தை விட கூடுதலாக தூங்க போகிறேன். உணவும் சரியாக கிடைக்கவில்லை, வேலையும் கிடைக்கவில்லை. இது போன்ற அனுபவங்களால் நான் எங்கே பைத்தியம் ஆகிவிடுவேனோ என்ற கவலை உள்ளது.

நம்பிக்கை
இதற்கு மேலும் இந்த பிரச்சினைகளை என்னால் சந்திக்க முடியவில்லை. இவற்றை எதிர்த்து போராடினேன். ஆனால் இதற்கு மேலும் போராட என்னால் முடியாது. எந்த நம்பிக்கையும் இல்லை. இறந்தால் மட்டுமே நான் நிம்மதியாக இருப்பேன் என கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications