Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தங்கத்தில் நாணயம் 1 கிராம் விலை பாருங்க.. சிவகுமார், சூர்யா வீட்டில் சிக்கிய சுலோச்சனா! யாரிந்த பெண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவின் வீட்டில் வேலை பார்த்து வந்த பெண் சுலோச்சனா, பணமோசடி விவகாரத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட வேலைக்கார பெண் சுலோச்சனா, கிட்டத்தட்ட 2 கோடி ரூபாய் வரை பலரிடமும் மோசடி செய்துள்ளதால், விசாரணை நடக்கிறது. இந்த மோசடி சம்பவம் குறித்து மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, சேனல் ஒன்றுக்கு தந்துள்ள பேட்டியில் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யாவின் தனி பாதுகாவலர் அந்தோணி ராஜ்.. அதேபோல நடிகர் சூர்யாவின் வீட்டில் சுலோச்சனா என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இந்த சுலோச்சனா பல்வேறு மோசடி சம்பவங்களில் ஈடுபட்டு பணமோசடி செய்து வருபவர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

Jothika Gold Coin gram Sivakumar

சூர்யாவின் பர்சனல் செக்யூரிட்டி

இந்த மோசடியில் சூர்யாவின் தனிப்பாதுகாவலர் அந்தோணி ராஜும் சிக்கி பணத்தை இழந்திருக்கிறார்.. சுலோச்சனா மட்டுமல்லாமல், சுலோச்சனாவின் மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி என மொத்த பேருமே சேர்ந்து, போலீஸ் அதிகாரியை மோசடி செய்திருக்கிறார்கள்.

மாதம் 5500 ரூபாய் கட்டினால், மாதந்தோறும் ஒரு கிராம் தங்க நாணயம் கிடைக்கும் என்று பலரிடம் சொல்லியுள்ளனர்.. அதேபோல் வாரந்தோறும் 6500 ரூபாய் கட்டினால் ஒவ்வொரு வாரமும் ஒரு தங்க நாணயம் வழங்கப்படும் என்றும் சொல்லியிருக்கிறார்கள்..

1 கிராம் தங்க நகை

தற்போது 1 கிராம் 10 ஆயிரத்தை தாண்டி விற்கப்படுவதால், குறைந்த விலைக்கு நகை வாங்க ஆசை அந்தோணி ராஜூக்கும் ஆசை கிளம்பியது.. உடனே அந்தோணிராஜ் பணம் தரவும், ஒருசில வாரங்களுக்கு நல்ல தங்கத்தை தந்து, அவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார் சுலோச்சனா..

இப்போது அந்தோணி ராஜ் சுமார் 42 லட்சம் ரூபாய் பணத்தை சுலோச்சனாவிடம் இழந்திருக்கிறார்.. இதுகுறித்து அந்தோணிராஜ் மாம்பலம் போலீசில் புகார் தரவும், போலீசார் சூர்யா வீட்டில் வேலை பார்த்து வந்த சுலோச்சனா, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

2 கோடி வரை சுலோச்சனா மோசடி

அந்தோணி ராஜ் மட்டுமல்லாமல் ஏராளமானவரிடம் 2 கோடி ரூபாய் வரை மோசடி செய்துள்ளதால், சுலோச்சனாவிடம் விசாரணை நடக்கிறது. ஆனால், இந்த மோசடி விஷயம் தெரிந்ததுமே, சூர்யா உடனடியாக சுலோச்சனாவை பணிநீக்கம் செய்துவிட்டார்.

விழிப்புணர்வு கொண்ட சிவகுமார்

இந்நிலையில், King 24x7 என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டி தந்துள்ள மூத்த பத்திரிகையாளர் சேகுவேரா, "அண்ணன் சிவக்குமாரை பொறுத்தவரை நீண்ட அனுபவசாலி.. எல்லா விஷயங்களிலுமே விழிப்புணர்வுடன் இருப்பார்.. சிங்கம் போல சூர்யாவும், சிறுத்தை போல கார்த்தியும் வீட்டில் இருக்கிறார்கள்.. இவர்களையும் மீறி ஒருவர் கைவரிசை காட்டியிருப்பது அதிர்ச்சியை தருகிறது. இவர்களது பாதுகாவல் அதிகாரியையே ஒரு பெண் ஏமாற்றியிருக்கிறார் என்றால், அந்த பெண்ணை அதிகமாக நம்பி, வீட்டிற்குள் நடமாட விட்டிருக்கிறார்கள்.

தங்க நாணய மோசடியை அந்த பெண் செய்திருக்கும்போது, உண்மையிலேயே அவர் வீட்டு வேலைக்காரப்பெண் தானா? என்றே சந்தேகம் வருகிறது. பொதுவாக பணக்கார வீட்டில் வேலை செய்வதானால், ஏழை பெண்களை வேலைக்கு அமர்த்தி, 10 ஆயிரம் ரூபாய் சம்பளம், 3 வேளை சாப்பாடு தருவார்கள்..

ஜோதிகா, சூர்யா வீடு

இந்த பெண்கள், அந்த வீட்டை பெருக்கி சுத்தப்படுத்த, வீட்டின் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் சென்றுவர அனுமதி இருக்கும். ஆனால் சிவக்குமார் வீட்டு வேலைக்கார பெண்ணை பார்த்தால் அப்படி தெரியவில்லை. சிவகுமார் தம்பதியினர் வயோகத்தில் உள்ளபோது, அவரது வீட்டிற்குள் மோசடி பெண் எப்படி நுழைந்தார்? இவரை உள்ளே அனுமதித்ததே பெரிய விஷயம். எப்படி இந்த அளவுக்கு கவனக்குறைவாக இருந்துவிட்டார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது.

சிவகுமார் குடும்பத்தினர் வைத்த நம்பிக்கைதான், அந்த பெண்ணின் பிள்ளைகளும் வீட்டுக்கு வந்து செல்லும் அளவுக்கு காரணமாக இருந்துள்ளது. தற்போது இந்த மோசடி கும்பல் சிக்கியிருக்கிறது.. ஆனால், எந்த திருட்டு சம்பவத்தையும், சிவக்குமார் வீட்டில் செய்யவில்லை என தெரிகிறது.

நம்பிக்கை வைத்த குடும்பம்

சிவக்குமார் என்றாலே நேர்மையானவர், ஒழுக்கமானவர் என்று எல்லாருக்குமே தெரியும்.. அவரது வீட்டில் வேலை செய்கிறோம் என்றாலே, அந்த பெண்ணையும் பலரும் நம்பிவிடுவார்கள்.. இந்த நம்பிக்கைதான் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிக்கும் அந்த பெண் மீது ஏற்பட்டுள்ளது.

ஆனால், ஒருவரின் நடவடிக்கையை வைத்தே, அவர் யாரென்று தெரிந்து கொள்ள முடியும்.. இத்தனைக்கும் சிவக்குமார் சிசிடிவி உள்ளிட்டவைகள் இருந்தும்கூட, எப்படி இந்த மோசடி கும்பலை முன்கூட்டியே கண்டுபிடிக்க முடியாமல் போயிற்று? என்பது வியப்பாக உள்ளது.

பிரபலங்கள் - அலட்சியம்

இவர்கள் எல்லாம் ஏதோ செய்கிறார்கள் என்று சிவக்குமார் தரப்பினருக்கு சந்தேகம் வந்திருக்கலாம்.. அப்படியே தெரிந்திருந்தாலும், அது அவர்களுக்குள் நடக்கும் விஷயம் என்றுகூட நினைத்து கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்திருக்கலாம்..

பெரும்பாலான பிரபலங்கள் வீடுகளில், வேலைக்காரர்களை தீண்டத்தகாதவர்களாக மோசமாக நடத்துவார்கள், அல்லது குடும்பத்தில் ஒருவராக சேர்த்து கொண்டு, மொத்த குடும்ப பொறுப்பையுமே அந்த வேலைக்காரர்களிடம் நம்பி தந்துவிடுவார்கள். சில இடங்களில் வேலைக்காரியே எஜமானியாக உருமாறிய சம்பவங்களும் உண்டு.

அண்ணன் சிவகுமாரை பொறுத்தவரை, எந்நேரமும் கவனமாக இருப்பவர், இந்த விஷயத்தில் சற்று கவனக்குறைவாக இருந்துவிட்டதாகவே தெரிகிறது..

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+