"எய்ட்ஸ் தொழுநோய்".. நடிகை கஸ்தூரி "பலதார மணம்" பற்றி கேட்டதுமே.. பின்னாடியே வந்த "திராவிட விழுதுகள்"
சென்னை: "இப்போ சனாதனம்தான் முக்கியமா? அதைவிடுங்க, அந்த பேச்சு முடிஞ்சுபோச்சு" என்று பாமக தலைவர் அன்புமணி உட்பட பலரும் முற்றுப்புள்ளி வைத்துவிட்டு நகர்ந்து விட்ட நிலையில், சீமான் கொந்தளித்தவாறே இருக்கிறார்.. கஸ்தூரியும் இதே விஷயத்தை சீண்டி திமுகவை விமர்சித்துகொண்டே இருக்கிறாரே என்ற கமெண்ட்கள் இணையத்தை வட்டமிடுகின்றன.
சனாதனம் குறித்து தான் பேசியதில் எந்த தவறும் இல்லை என்று தொடர்ந்து சொல்லி வருகிறார் உதயநிதி ஸ்டாலின்.. "போலீசில் உங்கள் மீது புகார் தந்திருக்கிறார்களே" என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, முன்பைவிட இப்போது, தன்னுடைய கருத்தில் இன்னும் உறுதியாக இருப்பதாகவும் உதயநிதி சொல்லிவிட்டார்.

உதயநிதி: ஆனால், உதயநிதி ஸ்டாலினின் இந்த பேச்சுக்கள் தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.. 4 நாட்களுக்கு முன்பு, உதயநிதிக்காக பரிந்து பேசியிருந்த சீமான், இப்போது திமுகவை சரமாரியாக வெளுத்தெடுத்துவிட்டார்.
"காமராஜர், ஜெயலலிதா கூட ஆதி திராவிடர், பழங்குடியினத்தை சேர்ந்த பிரதிநிதிகளுக்கு பதவிகளை வழங்கி சனாதனத்தை ஒழிக்க முன்முயற்சி எடுத்தனர். ஆனால், சனாதன வார்த்தையையே ஒழிக்க முடியவில்லை. உதயநிதி சென்னது போல், சனாதனம் ஒரு கிருமிதான். ஆனால், திமுகவே ஒரு சனாதன கட்சிதான். மகன் சனாதனத்தை எதிர்ப்பார்... அப்பா ஓடோடிச்சென்று, மோடியிடம் சமாதானம் செய்வாரா? சனாதன தலைவரே மோடி தான். அவருடன் சேர்ந்து, ஸ்டாலின் ஏன் நிற்க வேண்டும்? என்று சீமான் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கஸ்தூரி: அதேபோல, நடிகை கஸ்தூரியும் இந்த விவகாரம் குறித்து காட்டமாக கேள்வி எழுப்பி வருகிறார். "டெங்கு மலேரியா உங்க தாய்க்கும் மாப்பிள்ளைக்குமே முற்றி உள்ளதே? அவங்களை என்ன பண்ணுறதா உத்தேசம்?.. ஊருக்கு உபதேசம் அதுவே பரம்பரை யுக்தி.. சனாதனத்தின் மேல் அவ்வளவு வெறுப்பு உள்ளவர்களுக்கு இந்து கோவில் சொத்து மட்டும் கேட்குதோ?.. முதல்ல உண்டியல்ல இருந்து கைய எடுங்க" என்று பதிவிட்டிருந்தார் கஸ்தூரி.
பிறகு உடன்கட்டை ஏறுதல் தொடர்பாக உதயநிதி பேசியிருந்தது குறித்து மறுபடியும் ஒரு ட்வீட் போட்டார்.. "என்ன அக்கறை என்ன அக்கறை... பெண்ணை இழிவுபடுத்துவதில் திமுக காரர்களுக்கு நிகர் உண்டா? அதை முதலில் ஒழிங்க... வரலாற்றில் பெண்ணை அடிமைப்படுத்திய மதம் எதுன்னு போட்டி வைத்தால் இந்து மதம் எவ்வளவோ பரவாயில்லை என்று தெரியும். அப்போ மற்ற மதத்தை ஒழிப்பேன் என்பாரா? பொய் சொல்பவர் Liar" என்று சீண்டியிருந்தார்.
கொரோனா: இப்போது இன்னொரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதாவது, சனாதன தர்மத்தை டெங்கு, கொரோனாவுடன் ஒப்பிட்டு அதை ஒழிப்பேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்ததற்கு, சனாதன தர்மம் எய்ட்ஸ், தொழுநோய் போன்றது என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கருத்து கூறியிருந்தார்..
இந்த பாயிண்டைதான் கஸ்தூரி இப்போது இழுத்து கொண்டுவந்து, ட்வீட் பதிவிட்டுள்ளார்.. "இளவரசருக்கு டெங்கு, கொரோனா.. ஆ.ராசாவுக்கு எய்ட்ஸ், தொழுநோய் பொருத்தம்தான். அட மாநாடு வேணாம்யா... திராவிட விழுதுகள் ஊழல் அழிப்பு, பலதார மணம் எதிர்ப்பு, லஞ்ச ஒழிப்பு என்று ஒரு சின்ன கூட்டமாவது போடுவார்களா? பிடிக்காத விஷயத்தை தானே எதிர்க்க முடியும்?
இரட்டை நிலைப்பாடு: தேர்தலுக்கு தேர்தல், இந்த மாதிரி எதையாவது பேசுவார்கள். தேர்தலுக்கு முற்றிய சனாதனிகளிடம் போய் நிற்பார்கள். அவர்களின் கூட்டணி தலைவர்கள் கூட இதை ஏற்றுக்கொள்ளவில்லை. காலையில், தந்தை (மு.க.ஸ்டாலின்) 1000 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாக மகிழ்ச்சி அடைந்தார். மாலையில் தனயன், சனாதனத்தை ஒழிப்பேன் என்கிறார். இந்த இரட்டை நிலைப்பாடு ஏன்?
திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் ஒழுங்கு சீரழியும் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான்... முதலில் அதை ஒழித்துவிட்டு வரட்டும். அப்போது முதல் ஆளாக நானே கைதட்டி வரவேற்கிறேன்" என்று கஸ்தூரி பதிவிட்டுள்ளார்.
கஸ்தூரியின் இந்த ட்வீட் வழக்கம்போல், அரசியல் களத்தில் பற்றிக்கொண்டு எரிகிறது.. வழக்கம்போல், இந்த ட்வீட்டுக்கும், திமுக - பாஜகவினர் இரு தரப்புமே திரண்டு வந்து பதிலடிகளை தந்து கொண்டிருக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications