கஸ்தூரி "அது" சொன்னதுமே.. திமுகவுக்கு தலையே சுத்திருச்சு போங்க.. பாஜகவுக்கு கேட்டுச்சா? அப்ப அதிமுக?
சென்னை: "திமுக எதிர்ப்பாளர்" என்று அழுத்தமான முத்திரை குத்தப்படும் கஸ்தூரி பேசியதை கேட்டு, திமுகவினர் ஆச்சரியத்தில் உறைந்து போயிருக்கிறார்கள்.. என்னாச்சு கஸ்தூரிக்கு?
நடிகை கஸ்தூரியை பொறுத்தவரை, சமூக செயற்பாட்டாளர்.. துணிச்சல் பெண்மணி.. திமுக, அதிமுக, விசிக, பாஜக, என எந்த கட்சியாக இருந்தாலும் சரி, தவறு என்று தெரிந்தால், அதை தைரியமாக சுட்டிக்காட்டி விமர்சிப்பவர் கஸ்தூரி..
யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாமல் விமர்சனங்களை எதிர்கொண்டு வருபவர்.. திமுக அரசின் டாஸ்மாக் முதல் சட்டம் ஒழுங்கு சீர்கேடுவரை, உதயநிதியின் அரசியல் வரை கேள்வி எழுப்பி வருபவர். ஆனால், பாஜகவின் ஆதரவாளர் என்ற முத்திரையை பெற்றவர்.. இந்த காரணத்துக்காகவே, பல்வேறு விமர்சனங்களுக்கும் ஆளாகுபவர்.

எடப்பாடி பழனிசாமி: ஆனால், பாஜகவில் இவர் இணைந்தது இல்லை.. அதிமுகவிலும் இவர் உறுப்பினர் கிடையாது.. இத்தனைக்கும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோதுகூட, கொரோனா தொற்று தடுப்பு முறைகளை, சிறப்பாக கையாண்டவர் என்று, நம்முடைய "ஒன் இந்தியா" தமிழிடமே பலமுறை பாராட்டி பேசியவர்.
அவ்வளவு ஏன், சில நாட்களுக்கு முன்புகூட எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியிருந்தார். சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள தன்னுடைய வீட்டில், தேர்தலையொட்டிய முக்கிய ஆலோசனையில் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகளுடன் ஈடுபட்டிருந்தார்..
சந்திப்பு: அப்போது, கஸ்தூரி திடீரென அவரை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு சிறிது நேரம் நீடித்தது. பிறகு அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டார்.. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி, ராஜ் சத்யன் உள்ளிட்டோர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சந்திப்பின்போது 2 பேரும் தற்போதைய அரசியல் குறித்து பேசினார்களா? எதற்காக இந்த சந்திப்பு என்ற விவரம் எதுவுமே தெரியவில்லை.
அதேபோல் கோவை விமான நிலையத்தில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதியையும் சந்தித்து பேசியிருந்தார். இந்த சந்திப்பும் எதற்காகவென்று தெரியவில்லை.
வெற்றி: இப்படிப்பட்ட சூழலில், திமுகவின் வெற்றி குறித்து கஸ்தூரி நேற்று பேசியிருக்கிறார்.. இந்து மக்கள் கட்சி சார்பில், எம்பி தேர்தலையொட்டி பிரச்சார துவக்கவிழா, கோவை சித்தாபுதூர் வி.கே.கே மேனன் சாலையில் நடைபெற்றது.. இதில், நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் நிகழ்ச்சிக்கு வருவதற்கு லேட்டாகிவிட்டது.
இரவு 10 மணிக்குமேல்தான் கஸ்தூரி அங்கு வந்தார்.. ஆனால் அவர் மேடையில் பேசவில்லை.. அங்கிருந்த செய்தியாளர்களுக்கு மட்டும் பேட்டி தந்தார்.. அப்போது அவர் சொன்னதாவது:
திமுக தொகுதி: தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை ஏற்றம், இறக்கம் இல்லாமல் ஒரே சீராகவே உள்ளது. திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது... மற்ற கட்சிகள் இன்னும் ஆரம்பிக்கவேயில்லை.. வரும் 18ம் தேதிக்குள் மற்ற கட்சிகள் முடிவுகளை எடுக்க வேண்டும்...
இந்த எம்பி தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம், திமுக வலுவாக உள்ளது. திமுகவை எதிர்க்கும் அளவுக்கான எதிர்க்கட்சி இங்கு இல்லை. எனவே, திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக நிச்சயம் இது இருக்காது. திமுகவுக்கு அடுத்து யார்? என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும்.
அதிமுக : ஜெயலலிதா இருந்தபோது, "அந்த மோடியா? இல்லை இந்த லேடியா?" என்று சொல்லியே வெற்றி பெற்றார். ஆனால், இன்று அந்த நிலைமையில் அதிமுக இல்லை... இதை நான் புள்ளி விவரங்களுடன் சொல்கிறேன்..
பீகாரில் இப்போது தொகுதி பங்கீடு சரியாக நடைபெறவில்லை. அரசியலில் நல்ல அனுபவமும், ஆர்வமும், ஓரளவிற்கு அரசியல் பார்வை உள்ளவர்கள் அரசியலை கண்டிப்பாக பேச வேண்டும். திமுகவினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே இருக்கிறார்கள்.. அவர்கள் எந்த ஒரு தவறான முன்னெடுப்பும் இதுவரை எடுத்து வைக்கவில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும்" என்றார் கஸ்தூரி.
அண்ணாமலை: பாஜகவை பொறுத்தவரை, திமுகவுக்கு மாற்று தாங்கள்தான் என்பதை கடந்த 2 வருடமாகவே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறது.. அதிமுகவை டேமேஜ் செய்வதற்கான கருத்தாக இது இருந்தாலும்கூட, தமிழகத்தின் எதிர்க்கட்சி தாங்கள்தான் என்பதை, போகிற இடமெல்லாம் சொல்லி கொண்டிருக்கிறார் மாநில தலைவர் அண்ணாமலை.
- அப்படியிருக்கும்போது, திமுகவை எதிர்க்கும் அளவுக்கான எதிர்க்கட்சி இங்கில்லை என்று, பாஜக ஆதரவாளரான கஸ்தூரியே சொல்லியிருப்பதை, பாஜக திகைத்து பார்த்து கொண்டிருக்கிறது.
- திமுகவை எதிர்க்கும் நிலைமையில் அதிமுக இன்று இல்லை என்று சொல்லி அதிர வைத்திருக்கும் கஸ்தூரியை, எடப்பாடி உட்பட அதிமுகவே அதிர்ந்து பார்த்து கொண்டிருக்கிறது.
- திமுகதான் வெற்றி பெறும், திமுகவினர் கட்டுக்கோப்பாக இருக்கிறார்கள் என்று கஸ்தூரி சொன்னதை, திமுகவே மலைத்து பார்த்து கொண்டிருக்கிறது.
- இதெல்லாம் பேசியது நிஜமாகவே கஸ்தூரிதானா? திடீர்னு ஏன் திமுக பக்கம் "காற்று" வீசுகிறதே? என்னவா இருக்கும்? என்று திமுகவுக்கு தலையே சுற்றிக்கொண்டிருக்கிறது...!!
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications