பெரியாரை நிராகரித்த அந்த ‘தில்’லே தனி! திமுகவை பொளந்துவிட்டார் விஜய்: கஸ்தூரி உற்சாகம்
சென்னை: நடிகர் கமல்ஹாசனைப் போல பாதை மாறிப் போகாமல் கடைசிவரை விஜய் உறுதியாக நிற்கவேண்டும் என்றும் அப்போதுதான் அவர் ஒரு மாற்றுச் சக்தியாக வளர்ந்துவர முடியும் என்றும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் முதல் மாநாட்டில் விஜய் மொத்தமாக 45 நிமிடங்கள் பேசினார். அதற்குப் பின்னால் அவரது பேச்சை வைத்துக் கடந்த மூன்று நாட்களாகப் பலரும் பல கருத்துகளை முன்வைத்து விவாதித்து வருகின்றனர். விஜய் தன் பேச்சில் கூட்டணிக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

மேலும் அதிகாரத்தில் பங்கு எனக் கூறி இருந்தார். அதற்கு விசிக தலைவர் தொல் திருமாவளவன் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். விஜய் மூலம் பாஜக திமுக கூட்டணியை உடைக்கப்பார்க்கிறது என்பது விசிகவின் கருத்தாக இருக்கிறது. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ், 'டாக்டரும் கட்சி ஆரம்பிக்கலாம். ஆக்டரும் கட்சி ஆரம்பிக்கலாம். ஜனநாயகத்தில் யாரும் அதைத் தடுக்க முடியாது' என்று சொல்லி இருக்கிறார்.
திமுக நேரடியாக விஜய்யை பாஜக சி டீம் என்று விமர்சித்து வருகிறது. பாஜகவும் விஜய்யின் கொள்கைகளையும் பேச்சையும் விமர்சித்து வருகிறது. பலரும் பல கோணங்களில் உட்கார்ந்து பதில் அளித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை கஸ்தூரி அளித்துள்ள ஒரு பேட்டியில் விஜய் மாநாட்டு உரையைக் கேட்டுப் புல்லரித்துப் போய் நிற்பதாகக் கூறி இருக்கிறார். கஸ்தூரி பேசுகையில், "விஜய் மாநாட்டுக்கு வந்திருந்த இளைஞர்கள் கூட்டம்தான் மிகப்பெரிய ஆச்சரியம். எனக்குத் தெரிந்து வேறு எந்தக் கட்சி மாநாடுகளிலும் இந்தளவுக்கு இளைஞர் கூட்டத்தை நான் பார்த்ததே இல்லை.
விஜய்யும் தனது கட்சியினரைப் பார்த்து தொண்டர்கள் என்று அழைக்கவில்லை. நண்பர்கள், நண்பிகள் என்றுதான் சொன்னார். விஜய் வந்து நிற்கும்போதே ஒரு உற்சாகம். அவர் பேச்சு பெரிய மாஸ். பல விசயங்களைப் பச்சையாகப் பேசி இருக்கிறார். பிஜேபியை பிளவுவாத அரசியல், பெயிண்ட் டப்பா என வெளிப்படையாகச் சொல்லிவிட்டார். பாஜக என அவர் நேரடியாகப் பெயரைச் சொல்லவில்லை. ஆனால், திராவிட மாடல் அரசு, பெரியார் மற்றும் அண்ணாதுரை பெயரை வைத்து ஊரை ஏமாற்றிக் கொண்டுள்ள கட்சி என்று சொல்லிவிட்டார். குடும்பம் அரசியல், வாரிசு அரசியல் என எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார்.
பெயரைச் சொல்லாத கட்சி பற்றி விளக்கம் கொடுத்தபோது பயந்து போய் பெயரைச் சொல்லாமல் இல்லை. போனால் போகிறது என விட்டுவிட்டேன் என்று சொல்லிவிட்டார். எப்படிப் பார்த்தாலும் ஒட்டுமொத்தமாக விஜய் மானத்தை வாங்கிவிட்டார். ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவைச் சீமான் பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறார். விஜய் தன் கன்னிப் பேச்சிலேயே போட்டு பொளந்துவிட்டார்.
இந்தப் பேச்சை விஜய் எழுதி வைத்துப் பேசியது போல் இல்லை. கூத்தாடி என்றால் உங்களுக்குக் கேவலமாகப் போய்விட்டதா? என்று விஜய் கேள்வி எழுப்பியது அடிமனதிலிருந்து பேசி இருக்கிறார். தன்னை விமர்சித்த போது எல்லாம் அதைத் தாங்கிக் கொண்டுதான் வளர்ந்து வந்திருக்கிறேன் என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
'நல்ல தொடக்கம் பாதி வெற்றி' என்று சொல்வார்கள். தமிழக வெற்றிக் கழகம் பாதி வெற்றிபெற்றுவிட்டது. விஜய் புதியதாக எந்தக் கொள்கையையும் சொல்லிவிடவில்லை. ஆனால், அவர் நம்பிக்கையான பேச்சு தான் முக்கியம். அவர் ஊழலை ஒழிப்பாரா? நல்ல ஆட்சியைத் தருவாரா? என்பது எல்லாம் அடுத்த விசயம். விஜய் தன் பேச்சில் பக்கா பிராக்டிக்கல் என்று சொல்லி இருக்கிறார். பெரியாரை வழிகாட்டியாக ஏற்றுக் கொள்வோம்.
அப்படி இருந்தாலும் கடவுள் மறுப்பை ஏற்கமாட்டேன் என்று சொல்வதற்கு தில் வேண்டும். பெரியாரிஸம் என்றால் கடவுள் மறுப்பு, பிராமண வெறுப்பு கட்டாயம் இருக்கும். அதை வைத்து பெரிய அளவில் அறுவடை செய்து கொண்டது திமுக. அதிமுக அப்படி அல்ல. ஜெயலலிதாவே தலைவராக இருந்திருக்கிறார். ஆகவே பிராமண வெறுப்பு எப்படி இருக்க முடியும்?
இதேபோல் கமல்ஹாசன் கட்சி தொடங்கிப் பேசிய போது நான் மிகவும் ரசித்தேன். அவர் நான் கருப்பு சட்டையும் கிடையாது. காவி சட்டையும் கிடையாது. எந்தச் சட்டையும் கிடையாது என்பதை ரசித்தேன். முதலில் கமல் நன்றாகப் பேசினார். அப்புறம் மனசு மாறிப் போய்விட்டார். விஜய் அரசியலுக்கு புதியவர். என்ன செய்து விடுவார்? என்ன பேசி விட்டுவர என்று பலர் சொன்னார்கள். அதற்குச் சரியான பதிலடியை விஜய் தன் பேச்சின் மூலம் நிரூபித்துவிட்டார். இருந்தாலும் விஜய் கடைசி வரை கமல் போல் மனம் மாற்றாமல் இருக்க வேண்டும்.
இந்த விஜய் மாநாடு வெற்றி பெறுவதற்குக் காரணமே திமுகதான். கடந்த மாதமே நடக்க வேண்டிய மாநாட்டை நடத்தவிடாமல் பல வகைகளில் நெருக்கடிக் கொடுத்ததாகச் செய்தி கிடைத்தது. அதனால் விஜய் மாநாட்டைத் தள்ளி வைத்தார். இந்த அவகாசம் கிடைத்ததால்தான் மிகச் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்ய முடிந்தது. இல்லை என்றால் சொதப்பலாகி இருக்கும். அதற்காக விஜய் திமுகவுக்கு நன்றி சொல்ல வேண்டும்" என்று பேசி இருக்கிறார்.
-
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
மேகதாது அணை விவகாரம்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தை நாடிய தமிழக அரசு! அடுத்த கட்ட 'மூவ்’ என்ன? -
கும்பகோணத்தில் “காவலர் தேவநாதன் கையை முறித்த த.வெ.க.வினர்” என்ற செய்தியே தவறு.. காவல்துறை விளக்கம் -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
விஜய் மீது வெறுப்பில் ராகுல்! டெல்லி ப்ரோக்ராம் கேன்சல்! எம்எல்ஏ வேட்டையால் வேதனையில் டெல்லி தலைகள்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்!












Click it and Unblock the Notifications