Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'சந்திரமோகன் விரல் உடஞ்சிருக்கே'... கவனிச்சீங்களா?.. தனலட்சுமி எங்கே.. நடிகை கஸ்தூரி கேள்வி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மெரினா சாலையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை திட்டி சண்டை போட்ட சந்திரமோகன் , தனலட்சுமி ஜோடி பிடிபட்டனர். சமூக வலைத்தளங்களில் நேற்று இவர்களின் வீடியோ காட்சி தான் டாப் டிரெண்டிங்காக மாறி இருந்தது. இதற்கிடையில் சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த வீடியோ பற்றி கருத்து தெரிவித்த நடிகை கஸ்தூரி, தமிழக போலீஸ் யூடியூப் சேனலே ஆரம்பிக்கலாம் என்று கூறியுள்ளார்.

சென்னை மெரினா சாலையில் இரவு வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரை திட்டி சண்டை போட்ட சந்திரமோகன் , தனலட்சுமி ஜோடியின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மெரினா இணைப்பு சாலையில் நடந்த அந்த சம்பவத்தின் போது, வாகன சோதனையில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவரிடம் காரில் வந்த இந்தஜோடி தகராறில் ஈடுபட்டு ஆபாசமாக திட்டி சண்டை போட்டிருந்தாரக்ள்.

actress kasthuri chennai police

இந்த வீடியோ காட்சியை பார்த்த உயர் போலீஸ் அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். விசாரணையில் போலீஸ்காரரின் பெயர் சிலம்பரசன் என்றும், மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் வேலை செய்பவர் என்றும், அவர் இரவு நேரத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது குறிப்பிட்ட காரில் வந்த அந்த ஜோடியை சந்தேகத்தின் பேரில் மடக்கி விசாரித்தார் என்பதும் தெரியவந்தது. அதே நேரம் இந்த வீடியா எப்படி பரவியது என்று விசாரித்தபோது, வீடியோ எடுத்த சக போலீசார் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டது உயர் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே வீடியோ வேகமாக பரவிய நிலையில், வாகன சோதனை நடத்திய போலீஸ்காரர் சிலம்பரசன் மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து அந்த ஜோடி குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

போலீஸ் விசாரணையில், சிலம்பரசனிடம் சண்டைபோட்டுவிட்டு தப்பி ஓடிய சந்திரமோகன் - தனலட்சுமி ஜோடியை கண்டுபிடித்தனர். சந்திரமோகன் வேளச்சேரியை சேர்ந்தவர். கார் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கிறார். தனலட்சுமி மயிலாப்பூர் பகுதியை சேர்ந்தவர் ஆவார். போலீஸ் விசாரணையில், சந்திரமோகனும் தனலட்சுமி திருமணத்தை மீறிய உறவில் நெருக்கமாக பழகி வந்துள்ளார்.

இருவரும் காரில் நள்ளிரவில் ஜோடியாக வலம் வந்திருக்கிறார்கள். போலீஸ்காரர் விசாரித்ததால் கோபப்பட்டு, ஆபாசமாக திட்டி சண்டை போட்டார்கள். பின்னர் அவர்கள் இருவரும் அங்கிருந்து கிளம்பி, துரைப்பாக்கம் பகுதியில் போய் லாட்ஜ் ஒன்றில் தங்கி இருந்தனர். போலீசார் அவர்களை லாட்ஜில் சென்று மடக்கிப் பிடித்து அழைத்து வந்தனர். மயிலாப்பூர் போலீஸ் நிலையத்தில் நேற்று அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. 5 சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இதற்கிடையில் சந்திரமோகன் தன்னுடைய செயலுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். இவர்களின் இரண்டு வீடியோவும் நேற்று சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆனது.

actress kasthuri chennai police

இந்நிலையில் சந்திரமோகன் மன்னிப்பு கேட்ட வீடியோ குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகை கஸ்தூரி, சபாஷ் தமிழ்நாடு போலீஸ்.. வர வர உங்க வீடியோ எல்லாம் தான் டாப் டிரெண்டிங். பேசாம நீங்கள் யூடியூப் சேனல் ஆரம்பிக்கலாம்! பின்குறிப்பு : சந்திரமோகன் விரல் உடஞ்சிருக்கே... கவனிச்சீங்களா? பி.பி.கு : தனலட்சுமி எங்கே?" இவ்வாறு கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+