சிங்கார சென்னை டூ Sinkஆகுற சென்னை.. அய்யா மந்திரிமாரே வோட்டு போட்டவங்களை கரை சேருங்க! கஸ்தூரி ட்வீட்
சென்னை: சிங்கார சென்னை, சிங்கார சென்னைன்னு சொன்னீங்களே, இப்போ சிங்க் ஆகுற சென்னையா ஆயிருச்சே என நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஸ்டாலினின் கனவு திட்டமான சிங்கார சென்னை திட்டமானது சிங்கார சென்னை 2.0 என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மழைக்காலம் வருவதற்கு முன்பே இந்த நீர் நிலைகளில் உள்ள பெரும்பாலான அடைப்புகள் சரி செய்யப்பட்டு தண்ணீர் கண்ணாடி போல் தேங்கியிருக்கும் சூழல் சென்னையில் நிலவியது.
எனினும் கொரோனா உச்சத்தில் இருந்ததால் இந்த பணிகளில் முழு கவனம் செலுத்த முடியவில்லை. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழையும் தொடங்கிவிட்டது. கடந்த நவம்பர் 7ஆம் தேதி பெய்த பேய்மழையால் சென்னையில் இடுப்பளவு தண்ணீரில் மக்கள் தத்தளித்தனர்.

நவம்பர் மாதம்
நவம்பர் 11, 18 ஆகிய தேதிகளிலும் பாரபட்சம் இல்லாமல் ஆங்காங்கே மழை பெய்ததால் சென்னையே தனித்தீவாக தத்தளித்தது. இந்த மழை நிவாரண பணிகளை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கியவுடன் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யாமல் இருந்தது.

ஜனவரி 1
டிசம்பர் 31 ஆம் தேதியும் ஜனவரி 1ஆம் தேதியும் சென்னையில் மழை பெய்யும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்திருந்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன் தினம் கிட்டதட்ட 10 மணி நேரத்திற்கு மேல் பேய் மழை பெய்தது. இதை தனியார் வானிலை ஆய்வாளர்கள் கிட்டதட்ட மேக வெடிப்பு என்றே சொல்லலாம் என்றனர்.

கடலோர பகுதி
ஆனால் இது மேகவெடிப்பு இல்லை, வளி மண்டல மேலடுக்கு சுழற்சி கடலோர பகுதிகளில் தீவிரமடைந்ததால் இத்தகைய மழை பெய்ததாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. முந்தைய நாள் பெய்த மழையால் சென்னையின் பெரும்பாலான இடங்கள் தீவுகளாக மாறியுள்ளன. சாலைகளில் மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. நேற்றும் பெரும்பாலான இடங்களில் மழை வெளுத்து வாங்கியது.

மழைக் காலம்
சென்னை மக்கள் ஒவ்வொரு முறையும் மழை காலத்தில் இது போன்ற இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதுகுறித்து கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் சிங்கார சென்னை, சிங்கார சென்னைன்னு சொன்னீங்க, sinkஆகுற சென்னையா ஆயிருச்சே. ஒரே நாள் மழையில ஊரே மூழ்கிருச்சே. அய்யா மந்திரிமாரே, அதிகாரிங்களே , கொஞ்சம் மனசாட்சியோட நியாயமா வேலை செஞ்சு ஊரையும் உங்களுக்கு வோட்டு போட்டவங்களையும் கரை சேருங்க அய்யாமாரே ! என தெரிவித்துள்ளார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications