திருட்டு ரயிலில் வந்தாலே அரியணை கொடுப்போம்..வடமாநிலத்தவரை அடிக்கிறோமா? நோ..வம்பிழுக்கும் கஸ்தூரி
வடமாநிலத்தவரை தமிழர்கள் தாக்குவதாக போலியான செய்திகள் மற்றும் வீடியோக்கள் பரப்பப்பட்டு வருவது பெரும் பிரச்சனையை உருவாக்கி உள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் தங்கி வடமாநிலத்தவர்கள் ஏராளமானவர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் தமிழ்நாட்டில் உள்ள பீகார் உள்ளிட்ட வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவதாக போலியான வீடியோ பரப்பப்பட்டு வருகிறது. இது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது. இந்நிலையில் தான் நடிகை கஸ்தூரி இதுபற்றி கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி தமிழ்நாட்டு மக்கள் வடமாநில மக்களை தாக்குகிறார்கள் என்பது எல்லாம் மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. தமிழ்நாடு அனைவரையும் வாழ வைக்கும். திருட்டு ரயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை என கூறியிருப்பது சர்ச்சை கிளப்பி உள்ளது.
தமிழ்நாட்டின் பல இடங்களிலும் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல இடங்களில் வடமாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள், நடுத்தர வயதினர் குடும்பத்துடன் வந்து பணியாற்றி வருகின்றனர்.
சென்னையில் மெட்ரோ பணி, பிற நகரங்களில் மேம்பால பணி, கிராமங்களில் கோழிப்பண்ணைகள், கட்டடம் கட்டும் பணிகள், ஓட்டல்களில் ஏராளமானவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

போலியான வீடியோக்கள்
குறிப்பாக திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநில தொழிலாளர்கள் அதிகம் தங்கி பணியாற்றி வருகிறார்கள். இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் குறிப்பாக பீகாரை சேர்ந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக போலியான செய்திகள் பரவி வருகின்றன. பலரும் உண்மையை உணராமல் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் வீடியோக்களை பரப்பி வருகின்றனர்.

பீகாரில் இருந்து வரும் குழு
மேலும் ஹோலி பண்டிகையையொட்டி வடமாநில தொழிலாளர்கள் விடுப்பில் ஊருக்கு செல்லும் நிலையில் அவர்கள் விரட்டியடிக்கப்படுவதாகவும் செய்திகள் பரப்பப்படுகின்றன. இது கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் பீகார் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதனால் பீகாரில் இருந்து தனிக்குழு தமிழகம் வர உள்ளது. இதற்கிடையே தமிழ்நாடு அரசும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு அரசு உஷார்
மேலும் தமிழ்நாட்டில் அனைத்து வடமாநில தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர் என்பது தொடர்பாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் தமிழ்நாடு போலீஸ் சார்பில் ட்விட்டரில் ஹிந்தியில் ட்விட் செய்யப்பட்டு உள்ளது. இந்த பிரச்சனை தொடர்பாக தமிழ்நாடு அரசும் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதாக எச்சரித்துள்ளது. வடமாநில தொழிலாளர்கள் விஷயத்தில் தவறான தகவல்களுடன் வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. மேலும் சமூக வலைதளங்கள் உஷாராக கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

நடிகை கஸ்தூரி ட்வீட்
இந்நிலையில் தான் தமிழர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்குவதாக கூறப்படும் நிகழ்விற்கு நடிகையும், அரசியல் விமர்சகருமான நடிகை கஸ்தூரி ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது பதிவில், ‛‛வடநாட்டவர்களை தமிழர்கள் தாக்குகிறார்கள் என்பதெல்லாம் மிகை. இது வந்தோரை வாழவைக்கும் தமிழ்நாடு. தெலுங்கர், வடுகர், மலையாளி, மைசூர் என யாராயிருந்தாலும், திருட்டு ரெயிலே ஏறி வந்தாலும் அரியணையில் ஏற்றி அழகு பார்ப்போமேயன்றி அடித்து துரத்துவதில்லை'' என தெரிவித்துள்ளார்.

சர்ச்சையை கிளப்பிய பதிவு
இந்த பதிவு மூலம் அவர் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் திமுகவினரை கடுமையாக சாடியுள்ளார். மேலும் அவரது பதிவு என்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் தற்போது நடிகை கஸ்தூரிக்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரது ட்விட்டர் பதிவின் கமெண்டில் திமுகவினர் நடிகை கஸ்தூரியை விமர்சனம் செய்து வருகின்றனர்.
-
துணை முதல்வர் பதவி.. நாக்பூர் ரூட்டில் எடப்பாடிக்கு செக் வைத்த நயினார், வானதி! கேம் அப்படியே மாறுது? -
39 நாளில் டேவிட்சன் மாற்றம்! புதிய டிஜிபியான சைபர் செக்யூரிட்டி ஸ்பெஷலிஸ்ட்! சந்தீப் மிட்டல் யார்? -
கிளைமேக்ஸ் இதுதான்.. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று! வந்து குவிந்த 7400+ வேட்புமனுக்கள் -
அரசியல் சதுரங்கத்தில் தோற்றுவிட்டேன்.. திமுகவில் இருந்து விலகியது ஏன்? விஜய் மாஜி மேனேஜர் விளக்கம் -
இறுதி கெடு விதித்த டிரம்ப்.. ஈரான் கையில் எடுத்த பிரம்மாஸ்திரம்! மின்நிலையங்களில் திரளும் இளைஞர்கள் -
Iran-US war LIVE: போர் நிறுத்தம் அறிவித்தாலும் தொடரும் தாக்குதல் -
இனி யாராவது அத்துமீறுவீங்க.. எல்லையில் பாம்பு, முதலையை விடும் பிஎஸ்எப்? வங்கதேசத்துக்கு தூக்கம் போச்சு -
ரூ.25 கோடி வரி கட்டியிருக்கிறேன்.. எப்படி சொத்துகளை மறைக்க முடியும்.. டென்ஷனான ஆதவ் அர்ஜுனா! -
ரூ.73 கோடி ட்விஸ்ட்.. விருதுநகரில் விஜய பிரபாகரன் அதிரடி.. புயலென கிளம்பும் மெகா பிசினஸ் சாம்ராஜ்யம் -
2021 vs 2026.. அடியோடு மாறிய ஓ பன்னீர்செல்வம் சொத்து மதிப்பு.. மகன்கள் தந்த 3 கோடி கடன் -
டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோ.. முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நேரம்! -
Edappadi: "எடப்பாடியால்" வந்த வினை! தகர்ந்த "234" கனவு! Form கூட fillup செய்ய தெரியாதா? விஜய் கோபம்?












Click it and Unblock the Notifications