அடங்கப்பா! காங்கிரஸில் இருந்து குஷ்பு விலகல் கடிதத்தை நேற்றே எதிர்பார்த்து காத்திருந்த கஸ்தூரி
சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என குஷ்புவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை படிக்க நாளை வரை பொறுமை காக்க முடியவில்லை என கஸ்தூரி நேற்று இரவே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
2014-ஆம் ஆண்டு திமுகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் நடிகை குஷ்பு. அங்கு அவருக்கு தேசிய செய்தித் தொடர்பாளர் பதவி கொடுக்கப்பட்டது.
இதையடுத்து இந்த 6 ஆண்டுகளில் நக்மாவுடன் மோதல் போக்கு, கட்சியின் தமிழக தலைமையுடன் மோதல் என ஒரு பனிப்போர் இருந்து வந்தது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அமித்ஷா விரைவில் நலம்பெற வாழ்த்து தெரிவித்திருந்தார் குஷ்பு.

வாழ்த்து
அது போல் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அறிவித்தமைக்கு அவருக்கு வாழ்த்தையும் குஷ்பு தெரிவித்திருந்தார். இது போன்ற காரணங்களால் குஷ்பு பாஜகவில் இணைகிறார் என பேச்சு அடிப்பட்டது. அவர் பாஜகவில் இணையக் கூடாது என்பதற்காக அவருக்கு வசந்தகுமார் வகித்து வந்த செயல் தலைவர் பதவி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டு வந்தது.

குஷ்புவுடன் சந்திப்பு
இந்த நிலையில் டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா முன்னிலையில் இன்று செய்தியாளர்களை குஷ்பு சந்திக்கிறார் என தகவல்கள் வெளியாகின. வழக்கமாக பாஜக இணைப்பு செய்திகளுக்கு குஷ்பு மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவர் டெல்லி செல்ல விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

காங்கிரஸ் பதவி
அப்போது காங்கிரஸ் கட்சியில் நீங்கள் தொடர்கிறீர்களா என்ற கேள்விக்கு குஷ்பு பதில் அளிக்க மறுத்துவிட்டார். இந்த நிலையில் இன்று காலை குஷ்புவின் பதவி பறிக்கப்பட்டது. அவரும் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட பதவிகளிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

கஸ்தூரி ட்வீட்
இதெல்லாம் சரி ஆனால் குஷ்பு இன்று ராஜினாமா செய்வார் என்ற தகவல் நடிகை கஸ்தூரிக்கு நேற்றே தெரிந்தது எப்படி என தெரியவில்லை. நேற்று இரவு 11.55 மணிக்கு அவர் போட்ட ட்வீட்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறேன் என குஷ்புவின் அதிகாரப்பூர்வ அறிக்கையை படிக்க நாளை வரை பொறுமை காக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
-
பாஜக மட்டுமில்லை.. அண்ணாமலையால் தவெக - திமுக - அதிமுக - நாம் தமிழருக்கு விழும் பெரிய அடி -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
பாஜகவுக்கு ‘குட்பை'.. அண்ணாமலைக்காக ரெடியான ராஜ்யசபா சீட் இப்போ யாருக்கு பாருங்க! -
காலையில் ஆருயிர் தம்பி.. மதியம் மாற்றி பேசிய நயினார் நாகேந்திரன்! அண்ணாமலை விலகல் குறித்து ஓபன் டாக் -
"நான் முதலில் தமிழன்.." பாஜகவில் இருந்து விலகிய முதல் நாளே அண்ணாமலை சொன்ன வார்த்தை! நோட் பண்ணுங்க -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல..பெட்டியை கட்டும் செல்வப் பெருந்தகை! பதவிக்கு போட்டி போடும் பெரும் தலைகள் -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார் -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications