பொள்ளாச்சிக்கும் ஆசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் "விருதுநகருக்கு" மவுனம் ஏன்? கஸ்தூரி கேள்வி
சென்னை: பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? என நடிகை கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகரில் 22 வயது பெண் ஒருவர் திமுக நிர்வாகி ஹரிஹரனுடன் காதல் வயப்பட்டு அவருடன் தனிமையில் இருந்த போது அதை ஹரிஹரன் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டார். அவரது நண்பர்கள் இருவருக்கும், பள்ளி சிறுவர்கள் 4 பேருக்கும் அந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.
இதையடுத்து அந்த பெண்ணை மிரட்டி அந்த 7 பேரும் அந்த பெண்ணிடம் தங்கள் பாலியல் இச்சையை தீர்த்துக் கொண்டனர். இந்த 7 பேரின் தொல்லை நாளுக்கு நாள் அதிகமானது. மேலும் அந்த பெண்ணுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயமானதாக கூறப்படுகிறது.

8 பேர் கைது
அந்த சிக்கலில் இருந்து எப்படியாவது வெளியேற நினைத்தார். இதற்காக தனக்கு தெரிந்த மாடசாமி என்பவருடைய உதவியை நாடினார். கடைசியில் அந்த காமுகனும் இந்த பெண்ணை வீடியோவை காட்டி தனது ஆசைக்கு இணங்க வைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் புகாரின் பேரில் 8 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. அந்த வீடியோ வேறு யாருக்கேனும் போயிருக்கிறதா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

கட்சியிலிருந்து நீக்கம்
இதுகுறித்து அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பாலியல் பலாத்கார குற்றத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்கள் என காவல்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவர் திமுக நிர்வாகிகள், அவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவத்திற்கு அதிமுக நிர்வாகிக்கு தொடர்புண்டு என்பதால் திமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

கஸ்தூரி கேள்வி
ஆனால் விருதுநகர் பாலியல் சம்பவத்தில் மவுனமாக இருப்பது ஏன் என நடிகை கஸ்தூரி சங்கர் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து நடிகை கஸ்தூரி சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில் பொள்ளாச்சிக்கும் அசிபாவுக்கும் பொங்கிய உடன்பிறப்புக்கள் விருதுநகர் விஷயத்தில் மௌனம் காப்பது ஏன்? பெண்ணின் மானம் காக்க கூட கட்சி பார்த்துதான் குரல் கொடுப்பீர்களா? ராகவன் ஜாதியை இழுத்தவர்கள் எங்கே, ஹரிஹரன், ஜூனைத் அஹமது , மாடசாமி முதலானோரின் சமூகத்தை பேசுங்க பாப்போம்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சல்மா பதிலடி
இதற்கு கவிஞர் சல்மா பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறுகையில் பேச தெரிந்தால் பேசுங்கள். பொள்ளாச்சியிலும் காஷ்மீரிலும் நடந்த குற்றங்களுக்கும் குற்றவாளிகளுக்கும் ஆளும் அரசுகள் துணை நின்று அவர்களை காத்தனர். இன்று குற்றவாளிகள் கைது உடனடியாக நடந்து , கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டுமென முதல்வர் சொல்லியிருக்கிறார். காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்துள்ளார்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications