தமிழ் சினிமாவில் நோய்.. 'அந்த' சமூகத்தை விமர்சிக்கிறீங்க! மறைமுகமாக சாடும் நடிகை கஸ்தூரி!
சென்னை: தமிழ் சினிமாவில் ஒரு நோய் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வருவதாகவும், குறிப்பிட்ட சமூகத்தை சிலர் இழிவுப்படுத்துவதாகவும் நடிகை கஸ்தூரி விமர்சித்திருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
சென்னையில் நடைபெற்ற 'வானரன்' திரைப்படத்தின் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது, "இந்தப் படத்தின் கதாநாயகன், எங்கள் அபிமான நடிகரின் வாரிசு. வாரிசு என்பது எல்லா இடத்திலும் கண்டிக்க கூடிய விஷயம் கிடையாது. சில இடங்களில் அது வரவேற்க வேண்டிய விஷயம். அப்படி விஜய் நாகேஷை வருக வருக என்று வரவேற்கிறோம்.

சமீப காலமாக தமிழ் சினிமாவில் ஒரு நோய் இருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமா அதிகமா ஆகிட்டு இருக்குறதை நான் பாக்குறேன். என்னன்னு சொன்னா.. சனாதனத்தையும், சாதியையும் இழிவுபடுத்தும் படங்கள்தான் அது. இந்த படங்கள்தான் என்னவோ பெரிய முற்போக்கு என்கிற ஒரு சிந்தனையை இயக்குநர்களிடம் நம்ம பார்க்கிறோம். அப்படி வர்ற படங்களை மக்கள் நிராகரிக்கறதையும் பார்க்கிறோம்.
எதற்கெடுத்தாலும், ஒரு குறிப்பிட்ட சமூகத்தை, குறிப்பிட்ட ஒரு நம்பிக்கையை, விமர்சித்து சித்தரிப்புது தொடர்கிறது. ஒன்று காமெடியா சித்தரிப்பது, இல்லையெனில் ஒழுக்ககேடகா சித்தரிப்பது. ஆண்களா இருந்தா அவங்கள காமெடியா சித்தரிக்கிறார்கள். பெண்களா இருந்தா அவர்களை ஒழுக்க குறைவாகவாக சித்தரிப்பது. இதை பார்த்தும், அதை எதிர்த்து கேட்க முடியாத நிலையில் இருக்கிற மாதிரி அந்த குடும்பத்தை சித்தரிப்பது.
இப்படிப்பட்ட படங்கள், ட்ரைலர்கள் மத நம்பிக்கையை கொச்சைப்படுத்தும் விதமாக இருக்கிறது. சிலர் அணியக்கூடிய பொருளை வைத்தும் தவறாக சித்தரிக்கப்படுகிறது. இப்போ பிராமணர்கள் என்று சொன்னால், உடனே அவர்களுடைய பூணூலை வைத்து தவறான காட்சிகள் அமைக்கிறது. இப்படிப்பட்ட ஒரு போக்கை நாம் பார்க்கிறோம். இது முற்போர்க்கு கலையோ, சமூக நீதியோ, மதச்சார்பின்மையோ கிடையாது.
உண்மையான மதச் சார்பின்மை சினிமாவில்தான் இருக்கிறது. இன்னிக்கு மேடையில இயக்குனர் ஸ்ரீராம் இருக்கிறார். ஷாஜகான் அவர்கள் இசையமைப்பாளராக இருக்கிறார். எத்தனையோ முற்போக்கு பேசும் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சமூகத்தையும், சாதியையும் வச்சு தவறான ஒரு பிரச்சாரத்தை படமா எடுத்துக்கிட்டு இருக்கிற வேலையில, நெத்தி முழுக்க அருமையாக நாமத்தை சூடிக் கொண்டு காவி சட்டை போட்டுக்கொண்டு தயாரிப்பாளர் ஒரு இந்துவாக ஒரு பிராமண ஜாதியை சேர்ந்தவராக அவர் இந்த படத்தை எடுத்திருக்கிறார்.
இந்த படத்தில், ராமர், அனுமன் வேடம் போட்டவருக்கும், ஒரு இஸ்லாமியருக்கும் இருக்கக்கூடிய புரிதலை, ஒரு மத விளக்கத்தை அவ்வளவு அழகா காமிச்சி இருக்காங்க.
சும்மா படத்தை எடுத்து மக்களுடைய மூளை சலவை செய்வது மதசார்பின்மை கிடையாது. அது முற்போர்க்கு கிடையாது, அது பித்தலாட்டம். அது ஒரு பொய் பிரச்சாரம். அதற்கு வந்து எத்தனையோ அஜண்டா இருக்கு. அதை நாம் கண்டிக்கிறோம். உண்மையான ஒரு மதச்சார்பினை நீங்க, இங்க இந்த மேடையில, பாருங்க. ஒரு இந்துவும் ஒரு முஸ்லிமும் சினிமாவுல சேர்ந்து இருக்காங்க.
சினிமாவுல யாருக்குமே மதம் கிடையாதுங்க. நான் சினிமாக்கு வந்தப்போது யாரையும் நீங்க என்ன ஆளுங்க? என்று கேட்கமாட்டார்கள். இப்படி கேட்டு படம் எடுக்கறது கிடையாது. ஊர் கூடி தேர் இழுப்பது மாதிரிதான் ஒரு சினிமா எடுக்கப்படுகிறது. இயக்குனர் பேரரசாக இருக்கட்டும், ஜாதகர் தங்கமாக இருக்கட்டும், நடிகர் ஜீவா இருக்கட்டும், கனல் கண்ணனாக இருக்கட்டும், இப்படி சினிமால இருக்குறவங்கள நீங்க கேட்டு பாருங்க, உங்களுடைய பின்னணியை தெரிஞ்சு நாங்க வந்து படம் எடுக்குறது இல்ல என்பது தெரியும்.
திறமையை பார்த்து மட்டுமே படம் எடுக்குறது தான் தமிழ் சினிமா. உண்மையான நேர்மறையான படங்கள், குறிப்பாக வலதுசாரி சிந்தனையுடன் இருக்கக்கூடிய படங்களுக்கு தமிழகத்தில் இடமில்லைன்னு சொல்றாங்க. அதையும் நான் ஏற்க மாட்டேன். கடந்த காலங்களில் சாமி படங்கள் மட்டுமே வந்துக்கொண்டிருந்தது.
அப்போதுதான் அறிஞர் அண்ணாவின் வேலைக்காரி ஒரு திருப்பு முனையாக இருந்தது. கலைஞர் கருணாநிதி வசனத்தில் பராசக்தி என்பது ஒரு டர்னிங் பாயிண்ட்டா இருந்தது. அன்னையிலிருந்துதான் சமூகப் படங்கள், சமூகத்தின் பிரச்சனையை பேசும் படங்கள் அப்படிங்கறது உருவாக தொடங்கியது. இந்த படங்கள் தமிழகத்தின் அரசியலையும், அரசையும் மாற்றின.
அதேபோல இப்போது வலதுசாரி சித்தாந்தம் கொண்ட படங்கள் வருது. ஹிந்தில வந்துருச்சு, தெலுங்குல வந்துருச்சு, தமிழ்ல வராது வரக்கூடாதுன்னு யார் நினைச்சாலும் வந்தே தீரும். வரவேண்டும் மாற்றம் வரவேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
-
விஜய் பிரண்ட் சஞ்சீவ்வை சுற்றும் பிரச்சனை.. உண்மை தெரியாமல் பேசாதீங்க! ஓபனாக உடைத்து பேசிய ப்ரீத்தி சஞ்சீவ் -
ஐடி விங் மூலமாக வெறுப்பை பரப்புறாங்க.. பொறுப்பு உங்களிடமே உள்ளது தலைவரே! வெளுத்த நடிகை நிவேதா -
சினிமாவை விட்டு விலகும் திரிஷா.. காரணம் இதுதானா? அதிர்ச்சி பின்னணி! லீக்கான தகவல்கள் -
Youth Review : யூத் படம் எப்படி இருக்கு? கதை இதுதான்! கென் கலக்கினாரா? கலங்க வைத்தாரா? ரிவ்யூ இதோ -
18 மாவட்டங்களுக்கு பறந்த அலர்ட்.. இடி,மின்னலுடன் கொட்டப்போகும் பேய் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நாளை மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும்.. தலைமை ஹாஜி அறிவிப்பு! -
முடியல.. கொளுத்துது வெயில்! வெளியே போகாதீங்க! தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய வார்னிங்! -
இந்தியா முழுவதும் சனிக்கிழமை அன்று ரமலான் பண்டிகை.. சவுதி அரேபியாவில் இன்று ரம்ஜான் கொண்டாட்டம்! -
அடிச்சு பெய்யப்போகும் மழை.. பெரிய சம்பவம் இருக்கு! உஷாரா இருங்க மக்களே! -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
கூட்டுறவு வங்கிகள் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி குட் நியூஸ்? உங்க கடன் ரத்தாகுமா? கட்சிகள் மாஸ் பிளான் -
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு












Click it and Unblock the Notifications