கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்.. கஸ்தூரி கிண்டல்
கரு பழனியப்பனை ட்வீட் போட்டு விமர்சனம் செய்துள்ளார் நடிகை கஸ்தூரி
Recommended Video

சென்னை: "கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர்-னு நினைச்சேன்" என்று நடிகை கஸ்தூரி ட்வீட் ஒன்றினை பதிவிட, அது இப்போது இணையத்தில் றெக்கை கட்டி வேகமாக பறந்து வருகிறது.
நாட்டு நடப்புகளை உன்னிப்பாக கவனித்தும், அது சம்பந்தமாக கருத்தை பதிவிட்டும் வருபவர் நடிகை கஸ்தூரி. இதில் சில நியாயமாகவும் இருக்கும், மேலும் சில கருத்துக்கள் நெட்டிசன்களிடம் வாங்கிக்கட்டிக் கொள்வதைபோலவும் இருக்கும். இதனால் இவரது ட்வீட்டிற்கு சபாஷூம், கழுவி கழுவி ஊற்றுவதும் என அடிக்கடி நடக்கும்.
இந்நிலையில், இயக்குனர் கரு.பழனியப்பனை கலாய்த்து ஒரு ட்வீட் போட்டுள்ளார். கரு.பழனியப்பன் சமூக அவலங்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர். இவர் ஒரு டைரக்டர் என்பதை விட சமூக ஆர்வலராகவே அதிகம் அறியப்பட்டவர். மக்களின் அடித்தள பிரச்சனைகள் குறித்து டிவி விவாதங்களை நடத்தி வருபவர்.

கரு பழனியப்பன்
குறிப்பாக கல்லூரி விழாக்களில் இளைஞர்களின் மத்தியில் இவரின் அனல் பறக்கும் பேச்சுக்கு கைதட்டல்கள் அள்ளும். இவரது ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கரு.பழனியப்பனின் பேச்சுக்கள் அடங்கிய வீடியோக்கள் எப்போதுமே மக்களை திசைதிருப்பி கொண்டு வரும்.

சு.வெங்கடேசன்
ஆனால் சில தினங்களாக சிபிஎம் வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் மோடிக்கு எதிராகவும் முதல்வருக்கு எதிராகவும் பேசிய பேச்சுக்கள் அப்ளாஸ்களை அள்ளி கொண்டு சென்றது.
உங்கள் லோக்சபா தொகுதி.. என்ன சிறப்பு தெரியுமா? சுவாரசிய தகவல்கள்!
|
கலாய் ட்வீட்
பிறகு திமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துள்ளார். கனிமொழியுடன் கரு.பழனியப்பன் பிரச்சாரத்தில் ஈடுபடுவது போன்ற போட்டோக்களை பார்த்ததும், அபிப்பிராயங்கள் மாற ஆரம்பித்தது. இதை தான் கஸ்தூரி கலாய்த்தே ட்வீட் போட்டுள்ளார்.

ப்ரோக்ராம் பார்சல்
"கடைசியில கரு பழனியப்பன் திமுகவா.... நான் கூட சிவப்பு சிந்தனையாளர், சு.வெ க்கு மட்டும் பிரச்சாரம் பண்ணுறாருனு முதல்ல நினைச்சேன்... ஆனா எல்லாருக்கும் பண்ணுறாரு போல.குடும்ப டிவில ஒரு ப்ரோக்ராம் பார்சல் ! என்று கூறி கிண்டலாக பதிவிட்டுள்ளார். வழக்கம்போல் கஸ்தூரியின் இந்த பதிவிற்கும் ஆதரவும் எதிர்ப்பும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications