ஊருக்குத்தான் உபதேசம், எல்லாமே வெளிவேஷம்..பட்டென பொங்கி எழுந்த கஸ்தூரி.. அடுத்து நடந்த செம ட்விஸ்ட்
சென்னை: திருச்சியில் பெரியாருக்கு 100 கோடி ரூபாய்க்கு சிலை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கஸ்தூரி செய்திருந்த ட்வீட் வைரலாகி வருகிறது. இதையடுத்து தனது ட்வீட்டிற்கு கஸ்தூரி விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 17ல் பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதி நாளாக கொண்டாடுவோம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முக்கியமாக இவரின் கருத்துக்களை மக்களிடையே கொண்டு செல்லும் திட்டத்தில் அரசு ஈடுபட்டு வருகிறது.
இன்னொரு பக்கம் தி.க. கி. வீரமணியின் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் பெரியாருக்கு ரூ100 கோடி மதிப்பில் 135 அடி உயரத்தில் திருச்சியில் சிலை அமைக்கப்படும் என்று அறிவித்து இருந்தது. இதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்க உள்ளன.

பெரியார்
தொடக்கத்தில் பெரியாருக்கு வைக்கப்படும் இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சார்பாக சிலை வைக்கப்படுவதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதன்பின் தமிழ்நாடு அரசு இந்த சிலையை வைக்கவில்லை என்று உறுதி செய்யப்பட்டது. திராவிடர் கழகம் சார்பாகவே பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனம் மூலம் இந்த சிலை வைக்கப்படுகிறது. இந்த சிலைக்கு மட்டும் இவ்வளவு தொகை செலவு செய்யப்படவில்லை, இங்கு அமைய உள்ள நூலகம், அருங்காட்சியகம் அனைத்திற்கும் சேர்த்தே 100 கோடி ரூபாய் செலவு செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

கஸ்தூரி
தமிழ்நாடு அரசு இந்த சிலைக்கு அனுமதி மட்டுமே வழங்கி உள்ளது. இந்த நிலையில்தான் பெரியாருக்கு சிலை வைக்கும் முடிவை நடிகை கஸ்தூரி விமர்சனம் செய்திருந்தார். கஸ்தூரி தனது ட்வீட்டில், நாடு இருக்குற நிலைமையில கோடி கோடியா கொட்டி சிலை வெக்குறது தேவையா? இந்த கேள்வியை 2018 ல கேட்டது யாரு தெரியுமா? ஊருக்குத்தான் உபதேசம் - எல்லாமே வெளிவேஷம். 3 வருடங்களுக்கு முன் சிலை வைத்ததை தேவையில்லாத செலவு என்று வர்ணித்தவர்கள் இப்போது சொந்தமாக சிலை வைக்கிறார்கள், என்று கஸ்தூரி விமர்சனம் செய்து இருந்தார்.

விளக்கம்
3 வருடங்களுக்கு முன் குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு 3 ஆயிரம் கோடியில் சிலை வைக்கப்பட்ட போது அதை திமுக கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக இதை விமர்சனம் செய்தது. இதை சுட்டிக்காட்டி கஸ்தூரி விமர்சனம் செய்து இருந்தார். இதையடுத்து நெட்டிசன்கள் பலர், வரிசையாக பதில் சொல்ல தொடங்கினர். கஸ்தூரியிடம், இது அரசு கட்டும் சிலை கிடையாது.
Recommended Video

திருப்பம்
திக தங்களின் பெரியார் சுயமரியாதை பிரசார நிறுவனத்தின் பணத்தை வைத்து கட்டும் சிலை. இது அவர்களின் பணம், அரசின் பணம் கிடையாது. தமிழ்நாடு அரசு இந்த சிலைக்கு அனுமதி மட்டுமே அளித்துள்ளது என்று விளக்கம் அளித்தனர். இதையடுத்து கஸ்தூரி அளித்த பதிலில், எனக்கு விளக்கம் அளித்து தன்மையாக பதில் சொன்னவர்களுக்கு நன்றி. அப்படி என்றால் சிலை வைக்கும் முடிவு முற்றிலும் நியாயப்படுத்தப்படுகிறது, என்று குறிப்பிட்டார். அரசு பணம் இல்லாமல் கட்சி பணம் என்றால் சிலை வைக்கும் முடிவு நியாயமானதே என்று பொருள்ப்படும் வகையில் கஸ்தூரி இந்த பதிலை அளித்து இருந்தார்.












Click it and Unblock the Notifications