10000, 25000, 1.50 லட்சம்.. நடிகை கிரணுக்கு போன் போட்டதும் என்ன நடக்கிறது தெரியுமா? உஷார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் கிரண் தனது இன்ஸ்டாகிராமில் ரேட் கார்டு போட்டுள்ள நிலையில் அவ்வாறு பணத்தை கட்டியதும் அடுத்து நடப்பது என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

1990 களில் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை கிரண். இவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர். தமிழில் விக்ரமுக்கு ஜோடியாக கடந்த 2002 ஆம் ஆண்டு ஜெமினி படத்தில் நடித்து பிரபலமடைந்தார்.

அதில் மார்வாடி வீட்டு பெண்ணாகவும் தனது தந்தையிடம் கடன் வாங்கும் நபர்களிடம் கடனை வசூல் செய்தல், சலுகை கொடுத்தல் போன்ற வேலைகளை செய்வார். முதல் படத்திலேயே மனீஷா கேரக்டரில் அசத்தி ரசிகர்களை கிறங்கடித்துவிட்டார்.

வில்லன்

வில்லன்

அஜித்தின் வில்லன், கமல்ஹாசனின் அன்பே சிவம், வின்னர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார். இவருக்கு பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதையடுத்து விஷால் நடித்த ஆம்பள படத்திலும் சுந்தர் சியின் முத்தின கத்தரிக்காய் படத்திலும் நடித்திருந்தார்.

6 ஆண்டுகள் கிரணுக்கு வாய்ப்பில்லை

6 ஆண்டுகள் கிரணுக்கு வாய்ப்பில்லை

இதன் பிறகு கடந்த 6 ஆண்டுகளாக கிரணுக்கு வாய்ப்புகளே இல்லை. எனினும் இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார். இவருக்கு 38 வயதாகிரது. இவருக்கு பாலோயர்ஸ்களும் நிறைய பேர் இருக்கிறார். இதனால் அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வந்தார். இதற்கு நிறைய ரெஸ்பான்ஸ் கிடைக்கவே அவர் இதையே தொழிலாக்க நினைத்தார்.

ஆன்டிராய்டு

ஆன்டிராய்டு

இதையடுத்து ஆன்டிராய்டு ஆப் ஒன்றை உருவாக்கியுள்ளார். அதில் தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த ஆப்பிற்குள் செல்வதற்கு ரூ 49 செலுத்த வேண்டும். இதை செலுத்தினால்தான் அந்த செயலிக்குள் நுழைய முடியும். மேலும் கிரணுடன் 5 நிமிடம் பேச ரூ 5000 செலுத்த வேண்டும். அவருடன் வீடியோ காலில் பேச 25 ஆயிரம் செலுத்த வேண்டும்.

ரூ 1.50 லட்சம்

ரூ 1.50 லட்சம்

கிரணை நேரில் சந்திக்க வேண்டும் என்றால் ரூ 1.50 லட்சம் . கிரணின் இதுவரை வெளியே வராத கவர்ச்சி புகைப்படங்கள் வேணடுமென்றால் ரூ2000. இந்த ஆப்பிற்கு ஒருவர் 49 ரூபாய் செலுத்தியுள்ளார். அவருக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. வீடியோ காலில் பேச ரூ 25 ஆயிரம் கட்டணம் என வந்துள்ளது. இதை நம்பிய அந்த நபர் பணத்தை செலுத்திவிட்டு போனுக்காக காத்திருக்கிறாராம்.

ஆடியோ கால்

ஆடியோ கால்

அது போல் ஆடியோ காலுக்கு ரூ 5000 செலுத்திய நபர் ஒருவர் ஹலோ சொன்னதுமே இணைப்பு கட்டாகிவிட்டதாம். இதனால் அந்த ரூ 5000 பணமும் போய்விட்டது. இது போல் தனது இன்ஸ்டாகிராம் பாலோயர்ஸ்களை நடிகை கிரண் ஏமாற்றி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த செயலியையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் முடக்க வேண்டும் என பலர் வலியுறுத்திகிறார்கள். இது உண்மையில் கிரணின் இன்ஸ்டாபக்கம்தானா என்ற ஆராய்ச்சியும் ஒரு புறம் நடந்து வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+