மநீம கட்சியில் மேலும் ஒரு நடிகை… கோவை சரளா இணைந்தார்
சென்னை: நடிகை கோவை சரளா கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்தில் கமல்ஹாசன் முன்னிலையில் இணைந்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் மகளிர் தின கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில், அக்கட்சியில் இணைந்துள்ள கோவை சரளா கூறியதாவது; மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு நாளுக்கு நாள் மகளிர் ஆதரவு பெருகி வருகிறது என்றும் மக்களின் மனநிலையை சினிமா நடிகர்களால்தான் புரிந்து கொள்ள முடியும் எனவும் கூறினார்.
ஏற்கனவே, மக்கள் நீதி மய்யத்தில் நடிகை ஸ்ரீப்ரியா, சினேகன் என சினிமா பிரபலங்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நகைச்சுவை நடிகை கோவை சரளா இணைந்துள்ளார்.
கடந்த சில தேர்தல்களில் அதிமுகவிற்காகப் பிரச்சாரம் செய்த கோவை சரளா, சமீப காலமாகத் தனக்கு அரசியலை விட சினிமாவில் தான் ஆர்வம் என்று கூறி வந்தார். ஆனால் தற்போது யாரும் எதிர்ப்பாராத விதமாகக் கமல்ஹாசனின் கட்சியில் அவர் இணைத்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி மக்கள் நீதி மய்யம் சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு வரும் நிலையில், நடிகை கோவை சரளாவும் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.
-
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு?












Click it and Unblock the Notifications